Published:Updated:

``பெண்கள் சூழ்ந்த வாழ்க்கையைத் தவிர்த்துட்டா இதுதான் நடக்கும்!" - ரஞ்சித் ஜெயக்கொடி

ரஞ்சித் ஜெயக்கொடி

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்திருக்கும் `யாருக்கும் அஞ்சேல்' படம் குறித்து பேசியிருக்கிறார்.

``பெண்கள் சூழ்ந்த வாழ்க்கையைத் தவிர்த்துட்டா இதுதான் நடக்கும்!" - ரஞ்சித் ஜெயக்கொடி

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்திருக்கும் `யாருக்கும் அஞ்சேல்' படம் குறித்து பேசியிருக்கிறார்.

Published:Updated:
ரஞ்சித் ஜெயக்கொடி

ஹீரோயின் சப்ஜெக்ட் படமா இந்தப் படத்தை எடுக்கக் காரணம் என்ன?

"நம்ம வாழ்க்கையே பெண்கள் சூழ்ந்த ஒண்ணுதான். இவங்களைத் தவிர்த்துட்டா எந்த நிகழ்வுமே இருக்காது. அதனால கண்டிப்பா கதை எழுதும்போதும் இதைத் தவிர்க்க முடியாது. அதே மாதிரி கதை எழுதும்போது ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுற டைப் நான் இல்ல. மணிரத்னம் சார், ராம் சார் எல்லாருமே இதைப் பண்ணிட்டிருக்காங்க. அதனாலதான் என்னோட படங்கள்ல ஹீரோயினுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பேன். அந்த வரிசையில `யாருக்கும் அஞ்சேல்' படத்தை முழுக்கவே ஹீரோயினை மையப்படுத்தி எடுத்துருக்கேன்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`யாருக்கும் அஞ்சேல்' பெயர்க் காரணம்?

யாருக்கும் அஞ்சேல்
யாருக்கும் அஞ்சேல்

"குறிப்பிட்ட ஜானர்குள்ள என்னோட படங்களை எப்பவுமே அடக்க மாட்டேன். த்ரில்லர், டிராமா, க்ரைம் எல்லாமே இருக்கிற மாதிரிதான் கதை எழுதுவேன். அது மாதிரிதான் `யாருக்கும் அஞ்சேல்'ங்கிற கதை எழுதினேன். `எதுக்கும் நம்ம அஞ்சத் தேவையில்லை'னு டைட்டிலே ஒரு குட்டிக் கதை சொல்லும். படத்தோட ஷூட்டிங்கை முடிச்சதுக்கப்புறம்தான் இந்தப் பெயரை தேர்வு செய்தேன். படத்தோட கதைக்கும், யாருக்கும் பயப்படக்கூடாதுங்கிற கோட்பாடுக்கும் எது சரியா இருக்கும்னு நினைச்சிட்டிருக்கும்போது திருவாசகத்துல தேவாரம் ஞாபகம் வந்தது. அதுல `நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்'னு வரும். இதை மையமா எடுத்துக்கிட்டு `யாருக்கும் அஞ்சேல்'னு வெச்சிட்டேன். அது மட்டுமல்லாம, டைட்டில்ல `அல்லவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்'னு ஒரு வாசகம் இருக்கும். `எப்பவுமே தீமை வெல்றதுக்கு நல்லதின் அமைதிதான் காரணம்'கிறதுதான் அதுக்கு அர்த்தம். படம் பார்க்கும்போது இது உங்களுக்குப் புரியும்."

பிந்து புரொஜக்ட்குள்ளே எப்படி வந்தாங்க?

பிந்து மாதவி
பிந்து மாதவி

" 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' முடிச்சவுடனே ஒரே மூச்சுல இந்தப் படத்தோட கதையை எழுதி முடிச்சேன். அப்பவே இந்தக் கதைக்குப் பிந்து மாதவி பொருத்தமா இருப்பாங்கனு தோணுச்சு. நான் முதல் படம் பண்ணும்போதே பிந்துவைத் தெரியும். கதை கேட்டதும் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லிட்டாங்க; ஷூட்டிங்கையும் ஆரம்பிச்சிட்டோம். முழுக்கவே ஊட்டியிலதான் ஷூட் நடந்தது. 35 நாள் பிளான் பண்ணி ஒரே ஷெட்யூல்ல முடிச்சிட்டோம். இப்ப போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டிருக்கு."

சாம்.சி.எஸ் நட்பு பற்றி?

விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி, சாம்.சி.எஸ்
விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி, சாம்.சி.எஸ்

" 'புரியாத புதிர்'தான் எங்க ரெண்டு பேருக்கும் முதல் படம். கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்த பல பேர்ல நாங்களும் ரெண்டு பேர். ஆரம்பத்துல இருந்தே எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கும். விளம்பரப் படங்கள்ல சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சு இப்போ 3-வது படத்துல வொர்க் பண்ணிட்டிருக்கோம். இப்ப அவர் இருக்கிற உயரத்தைப் பெருசா பார்க்குறேன்."

சிம்பு டைட்டில் லுக் ரிலீஸ் பண்ணியிருக்கார் படத்துலேயும் வருவாரா ?

"எப்பவும் கதை முடிச்சிட்டு மரியாதை நிமித்தமா விஜய் சேதுபதிகிட்ட கதையைச் சொல்வேன். கேட்டதும் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரே டைட்டில் போஸ்டரை வெளியிட்டிருந்தார். சிம்புவையும் எனக்கு நல்லா தெரியும். அவர்கிட்ட ஷேர் பண்ண கேட்டப்ப மறுக்காம ஓகே சொல்லிட்டார். ஸோ, ரெண்டு பேரும் சேர்ந்து வெளியிட்டது எனக்கு சந்தோஷம். ஆனா, படத்துல அவர் நடிக்கல."

`இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படம் `அர்ஜுன் ரெட்டி' சாயல்னு விமர்சனத்தை வந்ததை எப்படி எடுத்துக்குறீங்க?

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

"இதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. பொதுவா ஒப்பிடுறதே மனித இயல்பு. சாதாரணச் சட்டை, கார்க்குக்கூட கம்பேர் பண்றவங்க படத்தையும் அப்படித்தான் பண்ணுவாங்க. இதைத் தவிர்க்கவே முடியாது."

`புரியாத புதிர்' ரிலீஸ் பிரச்னையினால என்ன கத்துக்கிட்டீங்க?

"நிறைய பக்குவப்பட்டிருக்கேன். ஃபிலிம் மேக்கிங்கோட வடிவத்தைப் புரிஞ்சிக்கிட்டேன். படம் எடுக்குறது மட்டும்தான் இயக்குநர் கையில இருக்கு. இதைத் தாண்டி பிசினஸ், விமர்சனம், வெற்றி தோல்வி எதையும் நம்மளால பிளான் பண்ண முடியாது. படம் எடுக்குறதை சிறப்பா பண்ணிட்டா போதும்னு நினைக்குறேன்."