Published:Updated:

`Howzzat' சொல்லும் ஹரியானா ஹரிக்கேன்; தயாராகிறார் ரன்வீர் சிங் - '83' ஃபர்ஸ்ட் லுக்

அலாவுதின் ஹுசைன்

1983ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் கபில்தேவ் பயோ பிக்கில் நடிக்கிறார் ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் - கபில் தேவ்
ரன்வீர் சிங் - கபில் தேவ்

குறுகிய காலகட்டத்தில் அனைத்து வயது ரசிகர்களையும் இந்தி மொழியறியாதவரையும் தனது படங்களால் கவர்ந்தவர், ரன்வீர் சிங். தீபிகா படுகோனனுடன் திருமணம், ஆடை அலங்காரத்தில் வித்தியாசம், பேச்சில் நய்யாண்டி என ஹெட்லைன் டாபிக்காகவே இருப்பவர் ரன்வீர். இன்று 34வது பிறந்தநாளைக் காணும் ரன்வீர் சிங், '83' படத்தில் தான் ஏற்றிருக்கும் கபில்தேவ் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டார்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

1983ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பை வென்றது. அந்த நிகழ்வை அடிப்படையாய்க்கொண்டு உருவாகும் '83' படத்தில் கபில் தேவின் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

கபில் தேவின் மனைவி ரோமி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். ஏப்ரல் 2020ம் ஆண்டு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்

பாலிவுட்டில் ஸ்போர்ட்ர்ஸ் பயோபிக் படங்கள் சக்கைபோடு நல்ல வர்வேற்பை பெறும். மேரி கோம், எம்.எஸ் தோனி, சச்சின் எனப் பல பயோபிக்குகள் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும் என நம்புகிறது படக்குழு.