Published:Updated:

`` உங்களால் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது" - பூரிப்பில் ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

"ஒரு சில விஷயங்கள் என்னை சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன" என்று கூறிய ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைத்துறை வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியது முதலே நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன்" என்றும் "இதுபோன்றவற்றைச் சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதால் நடப்பவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. . எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல" என்றும் பதிவிட்டிருந்தார்.

 ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாராம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாராம் ஸ்டோரி

இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து திரைத்துறை வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என் அன்பை, தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நிறைய அன்பான மெசஜ்களை உங்களிடமிருந்து பெற்றது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின்அன்பிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.