சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை!

ரெஜினா கஸன்ட்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
ரெஜினா கஸன்ட்ரா

இதுல ரெஜினா ஆர்க்கியாலஜிஸ்ட். பல வருஷங்களுக்கு முன்னாடி புதைகுழியா இருந்த ஒரு இடத்தை போலீஸ் ஆராய்ச்சி பண்றாங்க

ரெஜினா கஸன்ட்ரா முதன்முறையாக டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறார். படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜு, ‘படையப்பா’, ‘தசாவதாரம்’ உட்பட பல படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளின் விஷுவல் சூப்பர்வைசராகவும் இருந்தவர்.

பொதுவாக ராமன், ராவணன், சீதை என்றுதான் புராணப்பெயர்களை மையமாக வைத்து சினிமா எடுப்பார்கள். ‘சூர்ப்பனகை’ - புதுசா இருக்கே?


“இது ஒரு ஹாரர் த்ரில்லர் ப்ளஸ் பீரியட் பிலிமா இருக்கும். ராவணனோட தங்கை சூர்ப்பனகை. ராமனோட தம்பி லட்சுமணனை விரும்பும்போது, அவர் இவளோட மூக்கை அறுத்திடுறார். ஸோ, ஒரு பொண்ணுகிட்ட மூர்க்கத்தனமும், காதலும் சேர்ந்தால் என்னவாகும் என்பதுதான் படத்தோட கதைக்கரு.

கார்த்திக் ராஜு
கார்த்திக் ராஜு

ஒளரங்கசீப் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க நேர்ந்தது. ஷாஜகானின் மூணாவது பையன் அவர். ரெண்டு அண்ணன்களையும் கொலை பண்ணிட்டு, அப்பாவோட கண்களையும் குருடாக்கிட்டு அவரையும் சிறையில் தள்ளி டார்ச்சர் கொடுத்தவர். அதிலும் அவர் டார்ச்சர் பண்றதுக்காகவே பிரத்யேகக் கருவிகள் விதவிதமா பண்ணி வச்சிருந்தார். அதுல அயர்ன் மேய்டன்னு ஒரு கருவி. ஆளையே உள்ளே வச்சு கவர் பண்ற மாதிரி ஒரு டிவைஸ். அதனுள்ளே ஆணிகளா அடிச்சி வச்சிருப்பாங்க. தப்பு பண்ற ஆள அதுல அடைச்சு வச்சு, கொடூரமா சாகடிச்சிருக்காங்க. அப்படிக் கொடூரமா சாகடிச்ச சம்பவங்களை மைண்ட்ல வச்சு எழுதின கதைதான் இந்த ‘சூர்ப்பனகை.’

இதுல ரெஜினா ஆர்க்கியாலஜிஸ்ட். பல வருஷங்களுக்கு முன்னாடி புதைகுழியா இருந்த ஒரு இடத்தை போலீஸ் ஆராய்ச்சி பண்றாங்க. அதுக்கு ரெஜினா உதவுறாங்க. அங்கே நூறு வருஷத்துக்கு முந்தின எலும்புக்கூடு கிடைக்குது. அங்கிருந்து வேகம் பிடிக்குது கதை. இரண்டாம் பகுதியில், 1920ல நடக்கற பீரியட் போர்ஷனும் உண்டு. ஒரே டைமில் தமிழ், தெலுங்குல கொண்டு வர்றோம்.

முதல் பாதி செம காமெடியா போகும். இரண்டாவது பாதில பீரியட் போர்ஷன் தொடங்கும். ரெஜினா, மன்சூர் அலிகான், ஜெயப்பிரகாஷ், அக்‌ஷரா கௌடான்னு நிறைய பேர் இருக்காங்க. தெலுங்குல வெண்ணிலா கிஷோர் பண்றார். சாம் சி.எஸ் இசையமைச்சிருக்கார். ‘பண்ணையாரும் பத்மினி’யும் கோகுல் பினாய் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.’’

ரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை!

``முதல்முறையா ரெஜினாவுக்கு டபுள் ஆக்‌ஷன். என்ன சொல்றாங்க..?’’

“அவங்களுக்கும் ஆச்சரியம்தான். நான் இதுக்கு முன்னாடி சந்தீப் கிஷனை வச்சு, தமிழ்ல ‘கண்ணாடி’ தெலுங்கில் ‘நினு வீடனி நீடனி நேனு’ன்னு ஒரு பைலிங்குவல் படம் பண்ணினேன். அந்த டைம்ல அங்கே ரெஜினாவுக்கு ‘எவரு’ படம் ரிலீஸாகியிருந்தது. அந்தப் படத்துல அவங்களோட பர்ஃபாமென்ஸ் பார்த்த பிறகுதான் இந்தக் கதைக்கு அவங்க பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு. ‘டபுள் ஆக்‌ஷன் பண்றீங்க’ன்னு சொன்னதும் சந்தோஷமா கமிட் ஆனாங்க. படத்துல பீரியட் போர்ஷன்ல அவங்களுக்கு நிறைய ஃபைட் சீன்கள் இருக்கு. சைக்கிளிங், இமயமலைக்கு ட்ரிப்னு அட்வெஞ்சர் பண்ணுன பொண்ணுங்கறதால, ஆக்‌ஷன்ல அசத்தியிருக்காங்க. சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஸ்டண்ட்ல பத்து ஃபைட்ஸ் பண்ணியிருக்காங்க.

பீரியட் போர்ஷன் கெட்டப்புக்காக அவங்களுக்கு ஸ்பெஷல் விக், மேக்கப்னு ரெண்டு மணி நேரம் செலவு பிடிக்கும். அவ்ளோ டெடிகேஷனா உழைச்சிருக்காங்க. தமிழ்ல பேசின டயலாக்கை, அடுத்து தெலுங்கில் பேசி நடிக்கணும். ஒரு போர்ஷனில் மூணு ரெஜினா இருப்பாங்க. கேரளா தமிழ்நாட்டு பார்டரான அச்சன்கோவில் ஏரியாவுக்கு ஷூட் போயிட்டு வந்தோம். அங்கே அடர்ந்த காட்டுல ஷூட் போயிட்டிருக்கும்போது, யானைக் கூட்டம் திடீர்னு கிளம்பி வந்துச்சு. மொத்த யூனிட்டும் காட்டுல இருந்து நல்லவேளையா தப்பிச்சு வந்தோம்.”

ரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை!


``தொடர்ந்து தெலுங்கு, தமிழ்னு பைலிங்குவலா பண்றீங்களே, ஏன்?’’

“படத்தை இரண்டு மொழிகள்ல பண்ணும்போது நமக்கு ரெண்டு பிசினஸ் கிடைச்சிடுது. இதனால தயாரிப்பாளர்கள் ஹேப்பியாகிடுறாங்க. புரொடக்‌ஷன் செலவிலும் காசு மிச்சமாகும். ரெண்டு ஏரியாவும் தெரிஞ்ச ஆர்ட்டிஸ்ட்களை வச்சுப் படங்கள பண்ணினா, ரெண்டு மொழியிலும் எளிதா பிசினஸ் ஆகிடும்.”

ரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை!

``அடுத்தும் ஹீரோயின் சென்ட்ரிக் படம் தான் பண்ணியிருக்கீங்க. ரைசா நடிப்பில் ‘தி சேஸ்’ இயக்குனீங்க. அந்தப் படம் எந்த ஸ்டேஜ்ல இருக்கு?’’

“ரிலீஸுக்கு ரெடியாகிடுச்சு. போன லாக்டௌன் டைம்ல திண்டுக்கல் பக்கம் சிறுமலைப் பகுதிக்கு சின்ன யூனிட்டோடு போனோம். 23 நாள்கள்ல ஒரே ஷெட்யூலா படத்தை முடிச்சிட்டு வந்துட்டோம். அதுவும் தெலுங்கு, தமிழ்தான். ஹரீஷ் உத்தமன், பாலசரவணன், அனுஷ்யா பரத்வாஜ்னு பலர் நடிச்சிருக்காங்க. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், திலீப் சுப்பராயனால குறுகிய காலத்திற்குள் எடுக்க முடிஞ்சதுன்னு சொல்லலாம். ‘சேஸ்’ ஹாரர் கிடையாது. ஒரு குழந்தையின் பின்னணியில் எமோஷனல் ஸ்டோரியா வந்திருக்கு. இந்தப் படத்துல வேல்ராஜ் சார் எனக்கு க்ளன்னு ஒரு புது டெக்னீஷியனை அறிமுகம் செய்து வச்சார். போலந்து நாட்டுக்காரர். ‘அசுரன்’ல கலரிஸ்டா இருந்தவர். இப்ப பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ கூட பண்றார். அவர்தான் என்னோட படங்களுக்கு இப்ப கலரிஸ்டாவும் இருக்கார். ‘சூர்ப்பனகை’யில் வரும் பீரியட் போர்ஷனை இங்கிலீஷ் படம் மாதிரி ஒரு கலர் டோன்ல அசால்டா கொண்டு வந்து, எங்க வேலையை எளிதாக்கிட்டார்.’’

ரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை!

``வெண்ணிலா கிஷோர் தெலுங்கில் செம பிஸியான காமெடியனாச்சே?’’

``உண்மைதான். அவரோடு என் முந்தின படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். தெலுங்கில் ‘வெண்ணிலா’ படம் இயக்கின பிறகு காமெடி நடிகரா அவதாரம் எடுத்தவர். அதனாலதான் அவர் பெயருக்கு முன்னாடி வெண்ணிலா ஒட்டிக்கிட்டு இருக்கு. செம கிரியேட்டிவான மனிதர். ‘சூர்ப்பனகை’ தெலுங்கில் அவர் பண்ற ரோலை இங்கே மன்சூர் அலிகான் பண்ணியிருக்கார்.”

`` ‘தசாவதாரம்’ வெளியாகி 13 வருஷம் ஆச்சு. அதுல 40 நிமிஷ கிராபிக்ஸ் போர்ஷனுக்கு நீங்கதான் விஷுவல் சூப்பர்வைசரா இருந்தீங்க..?’’

“மறக்க முடியாத நினைவுகள். ‘படையப்பா’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘தசாவதாரம்’, ‘மருதநாயம்’ டிரெய்லர், ‘மாற்றான்’, ‘சிவாஜி’ன்னு பல படங்களுக்கு விஷுவல் சூப்பர்வைசரா இருந்திருக்கேன். அப்ப நான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ல சிஜி விஷுவல் சூப்பர்வைசரா இருந்தேன். ஒவ்வொரு போர்ஷனும் ரவிக்குமார் சார்கிட்ட காண்பிச்ச பிறகு கமல் சார்கிட்டேயும் அப்ரூவல் போகும். ‘தசாவதாரம்’ முடிஞ்சு இப்ப 13 வருஷம் ஆனாலும் அதோட நினைவுகள் இன்னும் பசுமையா மனசுக்குள் இருக்கு. அதுல ‘கல்லை மட்டும் கண்டால்’ மட்டும்தான் கொஞ்சம் பாதுகாப்பான போர்ஷன். அவரோட போர்ஷன்லேயே ஆரம்பிச்சு, அவரோட போர்ஷன்லேயே முடிஞ்சிடும். அடுத்து ஆரம்பிச்ச போர்ஷன் எல்லாமே ஹெவி ஒர்க் எடுத்துச்சு.

ரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை!

‘படையப்பா’வுல ‘கிக்கு ஏறுதே’ பாடல்ல ரஜினி சார் டை கட்டியிருப்பார். அந்தப் பாடல் முடியும்போது ரஜினி சார் சாய்வார். அப்ப அவருக்கு ரோப் கட்டியிருந்தாங்க. சாயும்போது, அவரது கழுத்து டை அந்த ரோப்ல சுத்திக்கிச்சு. அதனால அந்த சாங்ல ரோப்பை நீக்கும்போது, அந்த டையையும் சேர்த்து நீக்கிட்டோம். அந்தப் பாடலை இப்ப நீங்க பார்த்தால் கூட கவனிக்கலாம். அவர் கீழே படுத்திருக்கும்போது கழுத்துல டை இருக்கும். ஆனா, எழுந்திரிக்கும்போது டை இருக்காது. ப்ரேம்ல எல்லாருமே ரஜினி சார் முகத்தைத்தான் கவனிப்பாங்க. அட்ராக்‌ஷன் அங்கே இருக்கறதால, மத்த தவறுகள கண்டுக்க மாட்டோம். அப்படித்தான் ‘தசாவதாரம்’ல ரெண்டு கமல் வரும் சீன்கள்ல சைட்ல இருக்கும் பிராப்பர்ட்டிகளைக் கண்டுக்காமல் விட்டிருப்போம். கமல் சார் டெக்னாலஜில பயங்கர ஸ்டிராங்க். சின்ன விஷயம்னாலும் கரெக்ட்டா கண்டுபிடிச்சு, ‘இந்த இடத்துல ஏதோ இடிக்குதே’ன்னு யாரையும் ஹர்ட் பண்ணாமல் தவற்றைச் சுட்டிக் காட்டிடுவார்.”