Published:Updated:

புலமைப்பித்தன்... காதலும் அறமும் கலந்து பிறந்த கவிஞன்!

புலமைப்பித்தன்

''உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி... பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க'' என எளிய வரிகளில் மகத்தான மன உணர்வுகளைச் சொன்னவர். ‘சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’, ‘ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என ஒரு வரியில் பொழியும் அவர் தத்துவ மழை.

புலமைப்பித்தன்... காதலும் அறமும் கலந்து பிறந்த கவிஞன்!

''உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி... பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க'' என எளிய வரிகளில் மகத்தான மன உணர்வுகளைச் சொன்னவர். ‘சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’, ‘ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என ஒரு வரியில் பொழியும் அவர் தத்துவ மழை.

Published:Updated:
புலமைப்பித்தன்

தமிழ்த் திரையுலகில் ‘’நான் யார்… நான் யார்… நீ யார்?’’ எனக் கேட்டு அறிமுகமானவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரால் 'குடியிருந்த கோயில்' படத்தில் இந்தப் பாடல் மூலம்தான் அறிமுகம். முதல் பாடலிலேயே புகழின் உச்சம் தொட்ட பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆரின் கடைசி திரைப்படம் வரை புலமைப்பித்தன் பாடல்கள் எழுதினார்.

புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிமுகமான பாடலாகச் சொல்லப்படும் ''ஆயிரம் நிலவே வா'' பாடலும் இவருடைய கை வண்ணம்தான். புதுமையான கருத்துக்களைச் சொல்வதும் அதைப் புதிய வர்ணனைகளோடு சொல்வதும் இவருடைய தனி இயல்பு. பாடும்போது ''நான் தென்றல் காற்று… பருவ மங்கையோ தென்னங்கீற்று'' எனப் பாடலில் முதல் வரியிலேயே பாடலின் குணத்தைச் சொல்லிவிடுவது அத்தனை எளிதானல்ல. இது காதல் பாடலா, சோகப்பாடலா, தத்துவப் பாடலா என முழுப் பாடலையும் கேட்டு முடிவு செய்ய வேண்டியதில்லை. முதல் வரி போதும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி... பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க'' என எளிய வரிகளில் மகத்தான மன உணர்வுகளைச் சொன்னவர். ''சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே'', ''ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்'' என ஒரு வரியில் பொழியும் அவர் தத்துவ மழை.

''நஞ்சை உண்டு புஞ்சை உண்டு... பொங்கி வரும் கங்கை உண்டு... பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை… எங்க பாரதத்தில் சொத்துச் சண்டை தீரவில்லை.’’

புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

காதலும் அறமும் கலந்து பிறந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 2015-ல் வெளியான 'எலி' படம் வரை அவர் பாட்டெழுதியதாக கூகுள் தகவல் சொல்கிறது. உண்மையிலேயே அந்தப் படத்தின் பாடல் எதுவும் நினைவில் இல்லை. புலமைப்பித்தன் அதில் என்ன பாட்டு எழுதியிருப்பார் என ஆவலுடன் தேடினேன். “எங்களுக்கும் காலம் வரும் என்று சொன்ன காலம் இப்ப வருது… வருது’’ என்று ஒரு பாடல். அவருடைய பாடல்களின் உள்ளடக்கத்தை அவர் மாற்றிக்கொண்டதே இல்லை.

அள்ளப் பழுத்த

அழகு முகத்தில்

வெள்ளைத் தாடி

விரிந்து கிடப்ப

கறுப்புடை போர்ந்த

சிவப்பு ஞாயிறே!

செருப்பாய் கிடந்த

செந்தமிழ் இனத்துக்கு

அரியணை ஏறி

துரைத்தனம் நடத்தும்

உரிமை பெற்றுத் தந்தவனே!

தமிழ்நாட்டு இலையுதிர் காலத்து

எழுந்த வசந்தமே! தத்தவ மூலதனமே! தமிழர்க்கு மொத்தமாய்

கிடைத்த முகவரியே!

-எனப் பெரியார் குறித்து அவர் எழுதிய புதுக்கவிதை என் கல்லூரி காலத்தில் நெஞ்சத்துக் கல்வெட்டாய் இருந்தது. அவருடைய மகன் புகழேந்தி அவர்கள் என்னுடன் மாநிலக் கல்லூரியில் பயின்றவர். கல்லூரியில் படிக்கும்போது நான் வெளியிட்ட ‘பூமிக்குப் புரியவைப்போம்’ என்ற புதுக்கவிதைத் தொகுப்பை அவருக்கு வழங்கச் சொல்லி புகழேந்தி மூலமாகக் கொடுத்தனுப்பினேன். படித்துவிட்டு என்னை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார். இறுதி வரை அவரை நான் நேரில் சந்திக்கவே இல்லை. நெஞ்சில் துயரம் அப்புகிறது.

புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும் அ.தி.மு.க அவைத் தலைவராகவும் பதவி வகித்தது பதவிக்குப் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னைகளில் முன்னின்று குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் புலமைப்பித்தன்.

போற்றத் தக்க மா கவிஞரைத் தமிழகம் இழந்துவிட்டது.