Published:Updated:

ராகத்தில் கரைந்த ராகவன்!

ஏ.எல்.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.எல்.ராகவன்

2014-ல் வெளியான ‘ஆடாம ஜெயிச் சோமடா’ படத்திலும் பாடியிருக்கிறார் ராகவன்.

கொரோனா மகத்தான கலைஞனை நம்மிடமிருந்து பறித்திருக்கிறது. புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன் 87வது வயதில் மரணம் அடைந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் நாடகங் களில் நடித்து புகழ்பெற்ற தஞ்சை `அய்யம் பேட்டை’ லட்சுமணனின் மகன்தான் ஏ.எல்.ராகவன். தந்தை போலவே இவரும் நடிகராகவும் சங்கீதத்திலும் சிறந்து விளங்கினார்.

ஏ.எல்.ராகவன்
ஏ.எல்.ராகவன்

பதினான்கு வயதில் ‘ஜூபிடர் பிக்சர்’ சோமுவின் கண்களில் பட்ட ராகவனை, அவர்தான் ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் நடிக்க வைத்தார். சிறுவன் ராகவனின் குரல் உடையாமல் பெண் குரல் போல் இருந்ததால், அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தவும் செய்தது ஜூபிடர் பிக்சர்ஸ். ‘மோகினி’, ‘வேலைக்காரி’ ஆகிய படங்களில் பெண்கள் பாடும் கோரஸில் ராகவனின் குரலும் கலந்திருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1950-ல் வெளியான ‘விஜயகுமாரி’ படம் மூலம் ராகவனுக்குப் பின்னணிப் பாடகர் என்கிற அந்தஸ்தைத் தந்தார் சி.எஸ்.ஜெயராமன். அப்போதும்கூட குமாரி கமலாவுக்கே பின்னணி பாடினார். இப்படிப் பெண் குரலாய் ஒலித்த குரலின் பன்முகத்தன்மையைக் கண்டுபிடித்தார் எம்.எஸ்.வி. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி நடித்த ‘புதையல்’ படத்தில் ‘ஹலோ மை டியர் ராமி... எங்கம்மா உனக்கு மாமி’ என்ற பாடலை சந்திரபாபுவுடன் இணைந்து பாடினார்.

தமிழ் தாண்டி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பாடினார். நாகேஷுக்கு ஏற்ற பொருத்தமான குரலாகப் பார்க்கப்பட்டது ராகவனின் குரல். குழந்தைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், `காதல் கசந்த’ பாடல்கள் என ஏ.எல்.ராகவனின் குரல் நீண்ட நெடியதொரு பயணத்தை மேற்கொண்டது. காதல் பாடல்களுக்கு ‘பாஞ்சாலி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருமுறை பார்த்தாலே போதும்’ பாடலை உதாரண மாகச் சொன்னால், காதல் தோல்விக்கு ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் ‘எங்கிருந் தாலும் வாழ்க’ பாடலைக் குறிப்பிடலாம். 2014-ல் வெளியான ‘ஆடாம ஜெயிச் சோமடா’ படத்திலும் பாடியிருக்கிறார் ராகவன்.

தன் நடிப்பார்வத்துக்குத் தீனி போடுவதற்காக ஒருசில படங்களில் நடித்தார். ‘கல்லும் கனியாகும்’ படத்தைத் தயாரிக்கவும் செய்தார். `புதையல்’ படத்தில் பாடகராக அறிமுகமானபோதே அதில் நடித்த நடிகை எம்.என்.ராஜத்துடன் காதல் அரும்பி அவரையே மணந்தார்.

1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போர் நடந்தபோது, எல்லையிலிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் கலைநிகழ்ச்சி நடத்தச் சென்ற திரைக் கலைஞர்கள் குழுவில் ஏ.எல்.ராகவனும் ஒருவர். அன்றைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன்பாக ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ பாடலைப் பாடியிருக்கிறார் ஏ.எல்.ராகவன்.

திரையில் பாடுவது நின்ற பிறகும்கூட தொடர்ந்து இசைக் கச்சேரிகளை நடத்திக் கொண்டிருந்தவரின் குரல் இப்போது காற்றில் கலந்திருக்கிறது!