ஜீ தமிழ் சேனலில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் திங்கள் - வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘இரட்டை ரோஜா’. இந்தத் தொடர் இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

கதைப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் கந்தசாமி என்பவருக்கு அனு - அபி என்கிற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கின்றன. அக்காவான அனு, தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவர், சுயநல குணம் கொண்டவர்.

அனுவுக்கு நேரெதிர், அபி. குடும்பத்துக்காகவே யோசித்து, அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் துணியும் தன்மையுள்ளவளாக இருக்கிறார். இருவரும் ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும், எதிரெதிர் துருவங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

அனுவின் பிடிவாதத்தால் கந்தசாமி இரண்டு குழந்தைகளையும் தனியார் பள்ளியில் படிக்கவைக்க இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து பள்ளிப் படிப்பை நிறுத்தும் அபியை கந்தசாமி வெறுக்க ஆரம்பிக்கிறார். அப்பா செல்லத்தில் அனுவும் அம்மா அரவணைப்பில் அபியும் வளர்கின்றனர். தந்தையின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளும் அபி, டெய்லரிங் கற்றுக்கொண்டு குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறார். அனுவோ, தான் படித்தே ஆக வேண்டும் என்கிற பிடிவாதத்தில் படித்து, வழக்கறிஞர் ஆகிறார். அதேநேரம், டெய்லரிங் தொழிலில் முன்னேற்றம் காண்கிறார், அபி. இருவரின் வாழ்க்கையும் இப்படிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், ராமசந்திரன் - சீதா தம்பதிக்குப் பிறந்த சகோதரர்களான சந்தோஷ் மற்றும் சஞ்சீவ் ஆகியோரின் வாழ்க்கை ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கிறது. சந்தோஷ், அப்பாவின் மோட்டார் நிறுவனத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார். அண்ணன் சந்தோஷ் ஒழுக்கமான பையனாக வளர்ந்துவரும் நேரத்தில், தம்பி சஞ்சீவ் கோபக்கார இளைஞனாக வளர்கிறார்.

ஒரு சூழலில் சந்தோஷ், அனுவைச் சந்திக்கும்போது காதலில் விழுகிறார். அதேபோல, சஞ்சீவ் அபியைச் சந்திக்கிறார்... காதல் மலர்கிறது.

இந்த இரு ஜோடிகளின் காதலும் எப்படி திருமணத்தை நோக்கிச் செல்கிறது? இந்த இரட்டை ரோஜாக்களின் வாழ்க்கை திருமணத்துக்குப் பிறகு எப்படி இருக்கும்? இதுதான், ‘இரட்டை ரோஜா’ தொடரின் கதை. இந்தத் தொடரின் நாயகியாக ஷிவானி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்ஷய் நடிக்கிறார்கள். ஷிவானியின் அப்பாவாக பூவிலங்கு மோகன் நடிக்கிறார். அம்மாவாக சபிதா ஆனந்த் நடிக்கிறார். நாயகனின் அப்பாவாக ராஜாவும், அம்மாவாக தமிழ்ச்செல்வியும் நடிக்கிறார்கள்.

‘பூவே பூச்சூடவா’ தொடரை இயக்கிய மணிகண்ட குமார் இந்தத் தொடரை இயக்குகிறார். ‘பூவே பூச்சூடவா’ தொடரைத் தயாரித்த நாராயணன், இந்தத் தொடரையும் தயாரிக்கிறார். ஸ்ருதி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ‘இரட்டை ரோஜா’ தொடர் நிச்சயம் மக்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை!