Published:Updated:

"அப்போ நிதானம் காட்டியிருந்தா, என் சினிமா ட்ராக்கே மாறியிருக்கும்!" - ரேவதி ஷேரிங்ஸ்

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம்.

"அப்போ நிதானம் காட்டியிருந்தா, என் சினிமா ட்ராக்கே மாறியிருக்கும்!" - ரேவதி ஷேரிங்ஸ்

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம்.

Published:Updated:

தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகியாகக் கொண்டாடப்பட்டவர், ரேவதி. 1980-களில் பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த நாயகி. அப்போதைய முன்னணி இயக்குநர்கள் அனைவரின் இயக்கத்திலும் நடித்து, அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர். இந்தி மற்றும் மலையாள சினிமாக்களிலும் புகழ்பெற்ற ரேவதி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k7B2my

"கேரளாவில் கொச்சியில பிறந்தாலும், ஒரு மாதத்துக்குள் வேறு ஊருக்குக் குடியேறிட்டோம். அப்பா ராணுவத்துல வேலை செய்ததால், என் குழந்தைப் பருவத்துல இந்தியாவின் பல மாநிலங்கள்ல வசிச்சேன். நான் ஏழாவது படிச்சப்ப சென்னைக்குக் குடியேறிட்டோம். அப்பாவுக்கு வருஷத்துல ஒருமுறை, மொத்தமா 40 நாள்கள் விடுமுறை கிடைக்கும். அந்த நாள்கள் அளவில்லா மகிழ்ச்சியா இருக்கும்.

அம்மா தனியாளாக என்னையும் தங்கச்சி யையும் வளர்த்தாங்க. ஏதாவதொரு கலையை கத்துகிட்டா, ஒழுக்கத்தையும் கத்துக்கலாம்னு எங்கம்மா நினைச்சாங்க. எனக்கு ஆர்வமுள்ள டான்ஸ் வகுப்புக்கு அனுப்பினாங்க. டான்ஸர், டாக்டர்னு ரெண்டு எதிர்கால கனவுகளுடன் இருந்தேன். சின்ன வயசுல ராணுவக் குடியிருப்புகளில் வசிச்சப்ப, அங்கே உணவகத்துல இருக்கும் டி.வி-யில வாரத்துக்கு ஒரு படம் திரையிடுவாங்க. குழந்தைங்க பார்க்க உகந்த படம் இல்லைன்னா, எல்லா குழந்தைகளையும் ஒரே வீட்டுல விட்டுட்டுப் பெற்றோர் எல்லோரும் படம் பார்ப்பாங்க.

revathi
revathi

நான் ப்ளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா?'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார். 'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருந்தால், என் சினிமா ட்ராக் வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படியெல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்.

revathi
revathi

விவரம் புரிஞ்ச காலத்துல இருந்து, சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் ஆறு வருஷங்கள் அரசியலிலும் ஈடுபட்டேன். ஆனா, அது எனக்குப் பொருத்தமான களம் கிடையாது என்பதால் அதிலிருந்து விலகிட்டேன். இருந்தாலும் தொடர்ந்து சமூகப் பணிகளில் கவனம் செலுத்துறேன். வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டு, பல வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வரம், என் மகள் மஹி. அவ வந்த பிறகு வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கு."

- இத்துடன், 'மண்வாசனை' வாய்ப்பு... கண்டிப்பான டீச்சர் பாரதிராஜா, ஒரே நேரத்தில் ரஜினி, கமல் ஜோடி! 17 வயதில் வெள்ளைப்புடவை ரோல்... சினிமா மீது காதல், 'திவ்யா'வும் 'மாஷா'வும், அம்மாவின் அட்வைஸ்... நோ கிளாமர், கதைதான் முக்கியம்... பாலசந்தர் சார் பாராட்டு, நிறைவேறாத ஆசைகள் என பலவற்றையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை ரேவதி. அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 17: வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கிறது! - நடிகை ரேவதி https://cinema.vikatan.com/tamil-cinema/1980s-evergreen-heroins-actress-revathi

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism