Published:Updated:

`நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துக்குப் பின் ரியோ நடிக்கும் புதிய படம்!

இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த இயக்குநரின் முந்தைய படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ
ரியோ

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'ப்ளாக் ஷீப்' கார்த்திக் வேணு கோபால் இயக்கத்தில் ரியோ கதாநாயகனாக அறிமுகமான படம், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இந்தப் படத்தைத் தொடர்ந்து, புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், ரியோ. இந்தப் படத்தை அதர்வாவை வைத்து 'பாணா காத்தாடி', 'செம போத ஆகாதே' ஆகிய படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்.

பத்ரி வெங்கடேஷ்
பத்ரி வெங்கடேஷ்
"ரியோவை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தவுடனே கண் கலங்கிட்டேன்!" - ஸ்ருதி ரியோ நெகிழ்ச்சி

இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த இயக்குநரின் முந்தைய படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பாலசரவணன், முனீஷ்காந்த், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னை, கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட இடங்களில் ஷூட் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பயணத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளது படக்குழு.