Published:Updated:

`தளபதி 67 இல்லைன்னா 77,87...' கதை சொன்ன RJ பாலாஜி; வழிசொன்ன விஜய்; தயாராகிறதா ஸ்டைலிஷான காமெடி படம்?

விஜய்க்கு கதை சொன்ன RJ Balaji

"ஜனவரி 27 விஜய்க்கு கதை சொல்லுற வாய்ப்பு கிடைச்சது. அது மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு..." - அப்டேட் பகிர்ந்த RJ Balaji

`தளபதி 67 இல்லைன்னா 77,87...' கதை சொன்ன RJ பாலாஜி; வழிசொன்ன விஜய்; தயாராகிறதா ஸ்டைலிஷான காமெடி படம்?

"ஜனவரி 27 விஜய்க்கு கதை சொல்லுற வாய்ப்பு கிடைச்சது. அது மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு..." - அப்டேட் பகிர்ந்த RJ Balaji

Published:Updated:
விஜய்க்கு கதை சொன்ன RJ Balaji
RJ பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான `வீட்ல விசேஷம்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் RJ பாலாஜி நடிகர் விஜய்க்கு கதை சொன்னது குறித்துத் தெரிவித்திருந்தார்.

அவர் பேசும்போது "ஜனவரி 27 விஜய்க்கு கதை சொல்லுற வாய்ப்பு கிடைச்சது. அது மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு. 2 மாசம் தயாரிப்புக்குப் பிறகு ஒரு 40 நிமிஷம் ஸ்டோரி லைன் மட்டுமே சொல்லுற அளவுக்கு தான் என்னிடம் கதை இருந்தது. அவருக்கு அந்த லைன் பிடிச்சுருந்தது. `நான் காமெடியா, ஸ்டைலா உங்க மூக்குத்தி அம்மன் படம் மாதிரி எதிர்பார்த்தேன். இது பெரிசா இருக்கு. கதை முடிக்க எவ்வளவு நாளாகும்' எனக் கேட்டார். நான் ஒரு வருஷமாகும் என்று சொன்னேன். வீட்டுல விசேஷம் படம்னு ஒரு ரீ-மேக் பண்றோம். அதுக்கு கதை எழுதவே 5 மாசம் எடுத்தது. காரணம் என்னன்னா படம் செமையா வரணும். எல்லோருக்கும் பிடிக்கணும். இவனை நம்பி வந்தோம் படம் இப்படி இருந்துருச்சேன்னு யாரும் யோசிச்சிடக் கூடாது."

வீட்ல விசேஷம்
வீட்ல விசேஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், "சின்ன ஸ்கேல் படத்துக்கே இப்படின்னா உங்கள வச்சு எடுக்கிற படத்துக்கு இன்னும் நேரம் எடுக்கும். `சூப்பரா இருந்தது' என்கிற ஃபீல் தான் எல்லோருக்கும் வரணும் அதுக்கு ஒரு வருஷம் நிச்சயமா தேவைப்படும்னு சொன்னேன். `இது மட்டுமில்லை எதுவாயிருந்தாலும் வந்து உடனே சொல்லுப்பா' எனச் சொன்னார். எனக்கு எந்த அவசரமும் இல்ல. தளபதி 67 இல்லைன்னா 77, 87 இப்படி படம் பண்ணிக்கலாம். நாங்க இங்க தான் இருக்கப் போறோம். எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. நிறைய நாள் இந்த சினிமாவில் ஒரு குழுவாக பயணிக்க ஆசைப்படுகிறோம். அதற்கான உந்துசக்தி மக்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை. அது தான் எங்களுக்கான முதலீடு" என்று தெரிவித்தார்.

RJ பாலாஜி கதையில் தளபதி விஜய் இணையும் படம் கூடிய விரைவில் நடக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism