Published:Updated:

``நான் லெப்ட், ரைட், சென்டர் எதுவுமே இல்லை!" - `பாலிட்டிக்ஸ்' பாலாஜி

மூக்குத்தி அம்மன்
மூக்குத்தி அம்மன்

"சமூக வலைதளங்களில் பாராட்ட ஆட்கள் இருந்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா போறபோக்குல திட்டுற ஆட்களும் இருப்பாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்." - `பாலிட்டிக்ஸ்' பாலாஜி

``மூக்குத்தி அம்மன் டிரைலருக்கு செம ரெஸ்பான்ஸ் போல... ஆனா, ஆங்காங்கே அரசியல் நெடி தூக்கலா இருக்கே பாஸ்... யாரையோ டார்க்கெட் பண்ணுற மாதிரியெல்லாம் இருக்கே..?''

'`நான் லெப்ட், ரைட், சென்டர் எதுவுமே இல்லை. சத்தியமா அப்படியெல்லாம் நினைச்சு இந்தப்படம் பண்ணல. எல்.கே.ஜிக்குப் பிறகு அடுத்த படம்னதும் வித்தியாசமான ஒரு கதை பண்ணணும்னுகூட நான் யோசிக்கலை.

முன்னாடியெல்லாம் பண்டிகைக் காலங்களில் பேமிலியா தியேட்டருக்குப் போவோம்ல. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் மாதிரி ஜாம்பவான்களோட படம்னா எவ்ளோ உற்சாகமா தியேட்டருக்குப் போவோம் இல்லையா..? ஒவ்வொரு கேரக்டர்ஸ்க்கும் டீட்டெய்லிங்கா ஒர்க் பண்ணி மிரட்டியிருப்பாங்க.

இப்ப வர்ற சினிமாக்கள் சீரியஸா ஆகிடுச்சோன்னு தோணும். ஏன்னா நாம சீரியஸான படங்களைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். அப்படி இல்லாம நம்ம குடும்பத்தோட தியேட்டருக்குப் போயி கொண்டாட்டமா சினிமா பார்க்குற மாதிரி ஸ்டைல்ல படங்கள் பண்ணணும்னு ஆசைப்படுறேன். `பின்னே உன்னால அவதாரா எடுக்க முடியும்?'னு உங்க மைண்ட் வாய்ஸ் நல்லாக் கேக்குது. கடவுள் வந்தா நீங்களோ நானோ கேட்க நினைக்கிற கேள்விகளை இதுல கேட்டிருக்கேன்.''

மூக்குத்தி அம்மன்
மூக்குத்தி அம்மன்

" 'லாக்டௌன் முடிஞ்சதும் போராளி மோடுக்கு வந்துட்டாரு', 'வாய்ச்சொல் வீரர்' அது இதுன்னு எதிர்மறை விமர்சனங்கள் உங்க மேல வைக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

``முன்னாடியெல்லாம் ரொம்பவே வருத்தமா இருக்கும். ஏன்னா, ஆரம்பத்துல நான் என்ன பண்ணினாலும் பாராட்டுவாங்க. ஆனா, திடீர்னு சிலர் என்னைத் திட்ட ஆரம்பிச்சதும் வருத்தமா இருந்துச்சு. நாம மனசால யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கல. ஆனா, இப்படி நம்மளைத் திட்டுறாங்களேன்னு தோணும். அப்புறமாதான் ஒரு விஷயம் புரிஞ்சது. இப்படித் திட்டுறவங்க யாரையும் வாழ்க்கைல நாம எங்கேயும் பார்த்திருக்கக்கூட மாட்டோம்.

சமூக வலைதளங்களில் பாராட்ட ஆட்கள் இருந்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா போறபோக்குல திட்டுற ஆட்களும் இருப்பாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவங்க சொல்றதை மனசுல ஏத்திக்கிட்டா நிஜவாழ்க்கையில நம்மகூட நம்ம பக்கத்துல இருக்குறவங்களை நாம சந்தோஷமா வெச்சுக்க முடியாது."

- மூக்குத்தி அம்மன் முதல் ஐ.பி.எல் வரை பல விஷயங்கள் குறித்தும் ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்துள்ள முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "இப்பதான் சி.எஸ்.கே-வுக்கு வயசாச்சா?" - ஆர்ஜே பாலாஜி https://bit.ly/3mC4NXf

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு