Published:Updated:

``ஓ.டி.டி-யில ரிலீஸ் பண்ணமாட்டோம்; ஏன்னா..." - ஆர்.ஜே.பாலாஜி லாஜிக்

ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி

மே 1 சம்மர் ரிலீஸ் பண்ணலாம்னுதான் ப்ளான் வெச்சிருந்தோம். ஆனா, இப்போ நடந்துட்டிருக்கும் நிகழ்வுகள் நம்ம வாழ்க்கையோடு, நம்ம வாழ்வாதாரத்தோடு நடந்துட்டிருக்கும் பயங்கரமான போராட்டம்

"அரசியல் நையாண்டியுடன் 'எல்.கே.ஜி'யில் அட்மிஷன் கிடைத்த ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம், புராணப் படத்தில் நடித்திருந்தாலும் நயன்தாரா அம்மன் அவதாரம் எடுக்கும் முதல் படம்...

`மூக்குத்தி அம்மன்!' படம் முடிந்து ரிலீஸுக்குக் காத்திருக்கும்போது கொரோனா குறுக்கிட, தவிப்புடன் காத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜியிடம் பேசினோம்.

'மூக்குத்தி அம்மன்' படம் எப்படி வந்திருக்கு?

சொன்ன தேதிக்கு முன்னாடியே 'மூக்குத்தி அம்மன்' படத்தை முடிச்சாச்சு. ஷூட்டிங் மொத்தம் 42 நாள் நடந்தது. நாகர்கோவிலில்தான் ஷூட்டிங். இந்தப் படத்துல எனக்கு அம்மாவா நடிச்ச ஊர்வசி மேடம், வில்லன் அஜய்கோஷ், நயன்தாரான்னு எல்லாருமே முழு ஒத்துழைப்பைக் கொடுத்தாங்க. தமிழ்சினிமாவுல அம்மனுக்கு எதிரான ஒரு வில்லன்னா என்ன மாதிரியான ஒரு தாக்கம் இருக்குமோ அது அஜய்கோஷ் கதாபாத்திரத்துக்கு இருக்கும். அம்மன் பாடல்கள்னாலே எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாதான். அவங்களும் இந்தப் படத்துல பாடியிருக்காங்க. அம்மன் புண்ணியத்துல படம் ரொம்ப நல்லா வந்திருக்கு."

"படத்துடைய ஒன்லைன்?"

``நாகர்கோவில்ல அம்மா, அப்பா, தாத்தா, மூணு தங்கச்சிகளோடு குடும்பத்துல மூத்த பையனா குடும்பத்தை நடத்தக் கஷ்டப்படக்கூடிய ஒருத்தன்தான் ஹீரோ, அதாவது நான். இந்தக் குடும்பத்துல அம்மன் வந்தா என்ன நடக்கும்கிறதுதான் கதை. நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமா இருக்கும்."

``ஓ.டி.டி-யில ரிலீஸ் பண்ணமாட்டோம்; ஏன்னா..." -  ஆர்.ஜே.பாலாஜி லாஜிக்

"படம் எப்போ ரிலீஸ்? கொரோனா, லாக்டௌனால் தள்ளிப்போகுமா?"

"மே 1 சம்மர் ரிலீஸ் பண்ணலாம்னுதான் ப்ளான் வெச்சிருந்தோம். ஆனா, இப்போ நடந்துட்டிருக்கும் நிகழ்வுகள் நம்ம வாழ்க்கையோடு, நம்ம வாழ்வாதாரத்தோடு நடந்துட்டிருக்கும் பயங்கரமான போராட்டம். அதனால், இந்த உலகம் எப்போ பாதுகாப்பானதாக மாறுதோ, மக்கள் எல்லாரும் பயப்படாமல் எப்போது குடும்பத்தோடு தியேட்டருக்கு வர்றாங்களோ அப்பதான் `மூக்குத்தி அம்ம'னும் ரிலீஸ் ஆகும். இதை நானும் என் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாரும் பேசியே முடிவு பண்ணினோம். இப்போ படம் ஃபைனல் டிரிம் முடிஞ்சு போட்டுப்பார்த்தோம். செமயா வந்திருக்கு. தியேட்டர்ல வந்து மக்கள் என்ஜாய் பண்ணிப் பார்க்கும் படம் இது. அதனால, ஓ.டி.டி-யில ரிலீஸ் பண்ணமாட்டோம்.''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்! https://bit.ly/3cyk7ib

`` `எல்.கே.ஜி' படத்துல நோயை எதிர்த்துப் போராடின மாதிரியான காட்சிகள்தான் இப்ப `கோ கொரோனா'ன்னு நாடு முழுக்க நடந்தன. அதை எப்படிப் பார்க்கறீங்க?''

``படத்துல அந்த சீன் வைக்கும்போதே, 'இப்படியெல்லாம் நடக்குமா? ஓவரா இருக்கு'ன்னு என் டீம்லயே சொன்னாங்க. ஆனா, படம் பார்த்த நிறையபேர், `நல்லா வந்திருக்கு'ன்னு கமெண்ட்ஸ் கொடுத்தாங்க. அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்ப போயிட்டிருக்கு. 'கோ கொரனோ'ன்னு போராட்டம் பண்றதைத் தாண்டி, அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமா இருக்கணும்."

``ஓ.டி.டி-யில ரிலீஸ் பண்ணமாட்டோம்; ஏன்னா..." -  ஆர்.ஜே.பாலாஜி லாஜிக்

> "ராம நாராயணன் காலத்துக்குப் பிறகு யாரும் அம்மன் படம் எடுக்கிறதில்லையே, உங்களுக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு ஆசை?"

> 'எல்.கே.ஜி' படக் கதாசிரியர் டு 'மூக்குத்தி அம்மன்' இயக்குநர். இடைப்பட்ட பயணம் பற்றிச் சொல்லுங்க..."

> "முதல்முறையா நயன்தாரா அம்மன் வேஷத்துல நடிக்கறாங்க. அவங்க என்ன ஃபீல் பண்ணுனாங்க, நீங்க என்ன ஃபீல் பண்ணுனீங்க?"

> "படத்துடைய ஃப்ர்ஸ்ட் லுக் வந்தபோது சோஷியல் மீடியாவுல ட்ரெண்டிங்ல இருந்த அதேசமயம் பல விமர்சனங்களும் வந்தன. இதை எப்படிப் பார்க்கறீங்க?"

> "உங்க நண்பர் விக்னேஷ் சிவன் என்ன சொன்னார்?"

> "சோஷியல் மீடியா பக்கம் இப்போ அதிகம் உங்களைப் பார்க்க முடியறதில்லையே?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்! https://bit.ly/3cyk7ib

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு