Published:Updated:

`` `மாஸ்டர்' விழால விஜய் சேதுபதி ஏன் எல்லோரையும் கலாய்ச்சார்னா..?'' - ஆர்ஜே விஜய்

பாவனா - ஆர்ஜே விஜய்
பாவனா - ஆர்ஜே விஜய்

``விஜய் சார் ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி ப்ளாக் கோட் சூட் போட்டு வந்திருந்தது புதுசா இருந்தது. அதனாலதான் அவர்கிட்டே காஸ்ட்யூம் பத்தி கேட்டேன். ஆனா, அவர் அப்போ `நண்பர் அஜித் மாதிரி'னு சொல்லுவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்கதானே?"

`மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்படி இருக்கும், விஜய் என்ன பேசுவார் என நெய்வேலி ரெய்டின்போதே பரபரப்பு பற்றிக்கொள்ள, எல்லோரும் எதிர்பார்த்த அந்த விழா கடந்த ஞாயிறு மாலை இனிதே நடந்துமுடிந்தது. விழாவுக்கான ஹைப் எப்படி இருந்ததோ, அதேபோல விழா முடிந்து இரண்டு நாள்கள் ஆன பிறகும் `மாஸ்டர்' பேச்சுகள் ஓயவில்லை. விஜய், விஜய் சேதுபதி என இரண்டு சிறந்த நடிகர்கள், நம்பிக்கைத்தரும் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைந்திருப்பதால் மாஸ்டரின் மேஜிக்கைக் காண காத்திருக்கிறது ரசிகர் கூட்டம். இந்த நிலையில் `மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய ஆர்ஜே விஜய்யிடம் பேசினேன்.

``விஜய் சார் படத்துக்கான இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க வாய்ப்பு வந்ததை மறக்கவே முடியாது. நாம பண்ற வேலையை ரொம்ப உண்மையா பண்ணா அது நம்மளை பெரிய இடத்துக்குக் கூட்டிட்டுப் போகும்னு சொல்லுவாங்கல்ல, அப்படிதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்ததைப் பார்க்குறேன். `மாஸ்டர்' இசை விழால யாரை ஹோஸ்ட் பண்ண வைக்கலாம்னு பெரிய டிஸ்கஷனே போயிருக்கு. அதுல என் பெயரும் இருக்குனு சொன்னாங்க. அதுவே எனக்கு ரொம்ப ஹேப்பி. கடைசியா, `நீங்கதான் பண்றீங்க'னு என்கிட்ட சொன்னவுடன் எனக்கு ஒரே ஷாக். இந்த மாதிரி பெரிய படங்களுடைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறது எனக்கு இதுதான் முதல்முறை. ரொம்ப பதற்றமா இருந்தது. இதுல என்ன ஸ்பெஷல்னா, எப்போவும் நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வீட்ல இருந்து கிளம்பும்போது, `போயிட்டு வர்றேன்பா'னு அப்பாக்கிட்ட சொல்லுவேன். அவரும் `ம்ம்...'னு சொல்லுவார். சில நேரம் அவர்கிட்ட சொல்லாமல் கூட கிளம்பி வந்திடுவேன். `மாஸ்டர்' விழாவை நான்தான் தொகுத்து வழங்கப்போறேன்னு என் அப்பாவுக்கும் தெரியும். இந்த முறை `போயிட்டு வர்றேன்பா'னு சொன்னப்ப, `நீ கலக்கு சித்தப்பு'னு `பருத்திவீரன்' ஸ்டைல்ல சொன்னார். அதுவே எனக்குப் பெரிய எனர்ஜியா இருந்தது" என்றவர் விழா பற்றி பேசினார்.

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா
'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா
``விஜய் சார்... `மாஸ்டர்’க்கு வந்தேன்...  ஆனா, நான் ஏன் `மெர்சல்’-க்கு வரலைன்னு தெரியுமா?’’ - பாவனா

``எனக்கு மேடை ஏறுற வரைக்கும்தான் ரொம்ப பதற்றமா இருக்கும். அதுக்குப் பிறகு, எப்படியும் சமாளிச்சுடுவேன். அதனால ஏறுற வரை விஜய் சாரை பார்க்கவேயில்லை. மேடை ஏறிட்டு, அவரைப் பார்த்து வணக்கம் சொன்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஹாய் சொன்னார். அப்போதான் எனக்குள்ள நம்பிக்கை அதிகமாக ஆரம்பிச்சது. விஜய் சேதுபதி அண்ணா செமையா பேசுனார். அவர் அப்படி பேசி, கலாய்ச்சதுக்குக் காரணம் அன்னைக்கு செம ஜாலி மூட்ல இருந்தார். அவர் மேடையேறுன ஸ்டைலைப் பார்க்கும்போதே தெரியும் செம கன்டென்ட் கிடைக்கப்போகுதுன்னு. மனசுக்குள்ள இருந்த எல்லா விஷயங்களையும் பேசி, எல்லோரையும் கலாய்ச்சு மாஸ் பண்ணிட்டார். `விஜய் சார் அழகா இருக்கார், க்ளோஸ் அப் வைங்க வெட்கப்படுவார்'னு சேது அண்ணா சொன்னவுடன், நான் `விஜய் சேதுபதி அண்ணனுக்கும் க்ளோஸ் அப் வைங்க, அவரும் வெட்கப்படுவார்'னு சொன்னேன். அவரும் `அப்போ ஒரு ஒன் மோர் போய்க்கலாம். இப்போ க்ளோஸ் வைங்க'னு கேட்டு செம க்யூட்டா வெட்கப்பட்டார்.

எல்லோரையும் மாதிரி நானும் விஜய் சார் என்ன பேசுவார்னு ஆவலா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அவருக்குனு மேடையோட சென்டர்ல மைக் செட் பண்ணவுடன் எனக்குள்ள இருந்த ஆர்வம் இன்னும் அதிகமாகிடுச்சு. அவர் மேடை ஏறினதும் சைடுல நின்னு நான் ஒரு ஆங்கர்கிறதையே மறந்து கைத்தட்டி விசில் அடிச்சு அவரை ரசிச்சுட்டு இருந்தேன். அவர் ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி ப்ளாக் கோட் சூட் போட்டு வந்திருந்தது புதுசா இருந்தது. அதனாலதான் அவர்கிட்டே காஸ்ட்யூம் பத்தி கேட்டேன். ஆனா, அவர் அப்போ `நண்பர் அஜித் மாதிரி'னு சொல்லுவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்கதானே?" என்று அந்த நிமிடங்களை பகிர்ந்துகொண்டார்.

``விஜய் சேதுபதி அண்ணன் மேடைக்கு வர்றதுக்குள்ள விஜய் சார் கீழே போய் அவருக்கு முத்தம் கொடுத்த காட்சி ஹைய்யோ...! செம மொமன்ட்! மொத்தத்துல என் வாழ்க்கையில இருக்கிற முக்கியமான நாள்கள்ல மார்ச் 15, 2020-ம் சேர்ந்திடுச்சு. இந்த சமயத்துல பாவனா பத்தியும் சொல்லியே ஆகணும். அவங்ககூட ஷோவை ஹோஸ்ட் பண்ணது ரொம்ப கம்ஃபர்ட்டா இருந்தது. எனக்கான இடத்தைக் கொடுத்தாங்க. அவங்க இப்போ ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல கலக்கிட்டு இருக்காங்க. எல்லா கிரிக்கெட் வீரர்களையும் பேட்டி எடுக்கிறாங்க. நான் பெரிசா கிரிக்கெட் எல்லாம் ஃபாலோ பண்ணமாட்டேன். ஆனா, தோனியை ரொம்பப் பிடிக்கும். தோனிகூட போட்டோ எடுக்கணும்னு அவங்கக்கிட்ட சொல்லி வெச்சிருக்கேன். ஏற்கெனவே, ஒருமுறை மிஸ் ஆகிடுச்சு. அடுத்தமுறை விட்டுடக் கூடாது" என்று ரேடியோ ஜாக்கியாவே மாறி படபடவெனப் பேசிக்கொண்டிருந்தவரிடம் சில கேள்விகள் கேட்டேன்.

'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா
'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா

``இப்போ எந்தெந்தப் படங்களுக்கு பாடல் எழுதிட்டு இருக்கீங்க?"

``இப்போ இசையமைப்பாளர் தரண் இசையில ஒரு படத்துக்கு பாட்டு எழுதிட்டு இருக்கேன். அப்புறம், `மீசைய முறுக்கு' படத்துல `ஹிப் ஹாப்' ஆதி ப்ரோவுக்கு உடன்பிறப்பா நடிச்ச ஆனந்த் இயக்கிற படத்துல பாடல்கள் எழுதிட்டு இருக்கேன். அதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாருடைய உறவினர் காசிஃப் ப்ரோதான் இசை. "

``விஜய் சார் என்னைக் `கொழந்த'னு கூப்பிடுவார்; ஏன்னா?!" - `மாஸ்டர்' கௌரி கிஷன்

`` `ஸ்மைல் சேட்டை'யில உங்களை அதிகமா பார்க்கமுடியுறதில்லையே?"

``ஆமா ப்ரதர். ஜீ தமிழ் சேனல்ல ஷோ பண்ணிட்டு இருக்கிறதுனால கொஞ்சம் கேப் விழுந்திடுச்சு. அடுத்தடுத்து பண்ண ஆரம்பிச்சிடுவேன் "

``கல்யாண வாழ்க்கை எப்படி போய்க்கிட்டிருக்கு?"

மனைவியுடன் ஆர்ஜே விஜய்
மனைவியுடன் ஆர்ஜே விஜய்

``சூப்பரா போய்க்கிட்டு இருக்கு. நான் அப்போ எப்படி இருந்தேனோ அதே மாதிரி இப்பவும் ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கேன். என்னையும் என் வேலையையும் புரிஞ்சுட்டு எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க, என் மனைவி. என் வாழ்க்கையில நான் பண்ண ஒரு சில நல்ல விஷயங்கள்ல இவங்களை கல்யாணம் பண்ணதும் ஒண்ணு."

``டிவி, சினிமானு வந்தாச்சு. இன்னமும் `மிர்ச்சி' விஜய்னு கூப்பிடுறது எப்படி இருக்கு?"

``ஆர்ஜே விஜய்னு கூப்பிட்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது என் அடையாளம். அதனால நான் எங்க போனாலும் எவ்வளவு உயரம் போனாலும் ஆர்ஜே விஜய்தான்"

அடுத்த கட்டுரைக்கு