Published:Updated:

"சூர்யா குடும்பம் மட்டும் வாழணும்; 25000 குடும்பங்கள் அழியணுமா?"- கொதிக்கும் `ரோகினி' பன்னீர்செல்வம்

ஜோதிகா ( பொன் மகள் வந்தாள் )

̀̀̀̀``ஏதோ நீங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிற மாதிரி நினைக்கிறது நியாயமா? இந்தநேரத்தில் எனக்கு மட்டும் பணம் வந்தாப்போதும்னு நினைச்சா எப்படி?'' - `பொன்மகள் வந்தாள்' OTT ரிலீஸுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பன்னீர்செல்வம்.

"சூர்யா குடும்பம் மட்டும் வாழணும்; 25000 குடும்பங்கள் அழியணுமா?"- கொதிக்கும் `ரோகினி' பன்னீர்செல்வம்

̀̀̀̀``ஏதோ நீங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிற மாதிரி நினைக்கிறது நியாயமா? இந்தநேரத்தில் எனக்கு மட்டும் பணம் வந்தாப்போதும்னு நினைச்சா எப்படி?'' - `பொன்மகள் வந்தாள்' OTT ரிலீஸுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பன்னீர்செல்வம்.

Published:Updated:
ஜோதிகா ( பொன் மகள் வந்தாள் )

கொரோனாவால் சத்தம் இல்லாமல் இருந்த கோலிவுட்டுக்குள் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது ஜோதிகாவின் `பொன்மகள் வந்தாள்' திரைப்படம். மார்ச் மூன்றாவது வாரத்தில் இருந்து தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. இந்தியா மட்டுமல்லாது, உலகளவிலும் இதுதான் நிலைமை.

ஜோதிகா
ஜோதிகா
பொன் மகள் வந்தாள்

கொரோனா பிரச்னை சரியாகி மீண்டும் பழையபடி தியேட்டர்கள் இயங்க குறைந்தபட்சம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகிவிடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு கணிப்புதான். அதனால், தியேட்டர் ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்டு ரிலீஸாகாமல்போன படங்களை ஓடீடீ தளங்களுக்கு விற்க தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்துவருகிறார்கள். இதில் பெரிய திருப்பமாக சூர்யாவின் 2டி தயாரிப்பில், ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் `பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் ப்ரைமுக்கு விற்கப்பட்டு, தியேட்டர் ரிலீஸுக்கு முன்பாகவே ஒளிபரப்பாக இருக்கிறது. மே மாதம் இந்தப்படம் அமேசானில் வெளிவரும் எனத் தெரிகிறது. இதற்கிடையே `பொன்மகள் வந்தாள்' படத்தின் ஓடீடீ ரிலீஸைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளரும், சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளருமான பன்னீர்செல்வம். அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``2டி நிறுவனம் `பொன்மகள் வந்தாள்' படத்தை ஓடீடீ-க்கு விற்றுவிட்டார்கள் எனத் தகவல் கிடைத்ததும் அந்நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் கற்பூரபாண்டியனிடம் போனில் பேசினேன். `பெரிய படம் வருஷத்துக்கு நாலுதான் தம்பி வரும். அதை மட்டும் வெச்சி 365 நாளும் தியேட்டர்களை இயக்க முடியாது. சின்னப்படங்கள் மிகவும் முக்கியம். சின்னப்படங்களை நம்பித்தான் தியேட்டர்கள் இருக்கு. தியேட்டர்களை அழிக்காதீங்க. நல்லா யோசிச்சுப்பாருங்க தம்பி. சினிமா தொழிலில் நீங்கள் பல காலமாக இருப்பவர்கள். நீங்களே இப்படி செய்யலாமா?' எனக் கேட்டேன். அதற்கு அவர் `இனி ஒண்ணும் பண்ணமுடியாது சார். படத்தை அமேசானுக்குக் கொடுத்துட்டோம்'னு சொன்னார். அப்ப இனி நீங்க தயாரிக்கிற எல்லாப் படத்தையும் அவங்களுக்கே கொடுத்துடுங்க... தியேட்டருக்குக் கொண்டுவராதீங்கன்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி எஸ்.ஆர்.பிரபுவும், திருப்பூர் சுப்ரமணியனும் போன் பண்ணாங்க. நல்லபடியா பேசி முடிச்சிக்கலாம்னு சொன்னாங்க. படத்தை நெட்ல போடாம இருந்தா பேசலாம். போட்டுட்டபிறகு பேசுறதுக்கு ஒண்ணும் இல்லைன்னு சொன்னேன்.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

இப்படி இவங்க வரிசையா ஓடீடீ-ல படத்தை ரிலீஸ் பண்ணிட்டுப் போனா நாங்க தியேட்டரை மூடிட்டுப் போக வேண்டியதுதான். கொரோனா பிரச்னையால தயாரிப்பாளர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? சினிமா தொழில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம். தியேட்டர்களை மூடிவைத்துவிட்டு, எந்த வருமானமும் இல்லாமல் எல்லா ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஏதோ நீங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிற மாதிரி நினைக்கிறது நியாயமா? இந்தநேரத்தில் எனக்கு மட்டும் பணம் வந்தாப்போதும்னு நினைச்சா எப்படி? எனக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சில கோடிகள் வருதுன்ன உடனே ஓடீடீ-க்கு வித்துடலாமா?

தியேட்டர்கள் மூலம்தானே சூர்யா மேல வந்தார். `பெரியண்ணா' படம் வரும்போது தியேட்டருக்குள்ள வந்து `நான் வரும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா லைட்டிங் கொடுங்க சார்'னுலாம் சொல்லிட்டுப்போனர் சூர்யா. அப்போ உங்களுக்கு தியேட்டர்கள் தேவைப்பட்டது. இப்ப உங்களுக்குத் தேவைப்படலை. ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கலாமா?

படம் தியேட்டர்கள்ல ரீலிஸான பிறகு ஓடீடீ-ல கொடுங்க. யாரும் உங்களைத் தடுக்கலையே. ஓடீடீ-ல போட்ட பிறகு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணா யார் படம் பார்க்க வருவா?

தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் படங்களை நம்பி மட்டுமே வாழ்றோம். 25 வருஷத்துக்கு முன்னாடி தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்கள் மட்டும்தான் படத்தை ஒளிபரப்ப ஒரே சோர்ஸ். ஆனால், இப்போது அப்படியில்லை. சேட்டிலைட் ரைட்ஸ், ஓடீடீ, டப்பிங் ரைட்ஸ்னு பல வழிகளில் தயாரிப்பாளர்களுக்குப் பணம் வருகிறது. சின்னச்சின்னப் படங்கள்கூட டப்பிங் ரைட்ஸ் மூலம் 5 லட்சம், 10 லட்சம் என சம்பாதிக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அப்படியில்லை. தியேட்டருக்கு நல்ல படங்கள் வந்து மக்கள் பார்க்க வந்தால் மட்டுமே வருமானம். அவருக்குப் பணம் வேணும்னு இன்னைக்குப் படத்தை ஓடீடீ-ல ரிலீஸ் பண்ணிட்டார். ஆனா, நாங்க என்ன பண்றது?

`ராஜசேகர்... தியேட்டர் உரிமையாளர்கள், ஊழியர்கள்னு கிட்டத்தட்ட 25,000 பேரோட வாழ்வாதாரம் இதுல இருக்கு. கொஞ்சம் யோசிங்க'ன்னு சொன்னேன். அவர் `எங்க வாழ்க்கையைத்தான் சார் பார்க்கமுடியும்'னு சொல்லிட்டார்.

சூர்யா மற்றும் ராஜசேகர் கற்பூரபாண்டியன்
சூர்யா மற்றும் ராஜசேகர் கற்பூரபாண்டியன்

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1500 தியேட்டர்கள் இருக்கு. எங்க ரோகினி தியேட்டர்ல மட்டும் 130 பேர் வேலை பார்க்குறாங்க. சூர்யாவின் ஒரு குடும்பம் சம்பாதிப்பதற்காக, இவ்வளவு குடும்பங்களை ரோட்டில் கொண்டுவந்துவிடத் தயாராகிவிட்டார்கள். அவங்க வாழணும்... 25,000 பேர் அழியணுமா... இனி நான் என்ன சொல்லமுடியும்?''என்றார் பன்னீர்செல்வம்.

இதுகுறித்து 2டி நிறுவனத்தின் ராஜசேகர் கற்பூரபாண்டியனிடம் பேசினேன். ``தயவுசெய்து இந்தவிவகாரம் குறித்து எதுவும் கேட்காதீங்க. நோ கமென்ட்ஸ். எல்லாம் சரியானதும் விரிவாப் பேசலாம்'' என்றார்.