Published:Updated:

`போயட்’ விக்கி, `மாஸ்’ மாஸ்டர், விரைவில், `RRR’ அப்டேட்! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

Vijay - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்
Vijay - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு.

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்து வரும் படம் `ஆடுஜீவிதம்’. கடந்த மார்ச் மாதம் இதன் படப்பிடிப்புக்காக, ஜார்டன் சென்ற படக்குழு கொரோனாவால் படப்பிடிப்பும் நடத்த முடியாமல் கேரளாவும் திரும்ப முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அங்கேயே மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தன் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வருத்ததையும், கொரோனா சூழல் சீக்கிரமே சரியாக வேண்டும் எனத் தனது விருப்பத்தையும் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தார் பிரித்விராஜ்.

தற்போது கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், `ஆடுஜீவிதம்’ படத்திற்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதாகத் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்துள்ளார் பிரித்வி. இந்த நிலையில், சீக்கிரமே படக்குழு கேரளா திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, அவர் எழுதும் பாடல்களுக்குமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. `நானும் ரெளடிதான்’, `தானா சேர்ந்த கூட்டம்’, `மாஸ்டர்’ என இவரது ஹிட் லிஸ்ட் பாடல்கள் ஏராளம்.

தற்போது லாக்டெளனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கவிதைகளைப் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். Wikkipoems என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்துள்ள தனது கவிதைக்கு ‘SO WHAT YOU THOUGHT WAS WRONG’ எனத் தலைப்பிட்டுள்ளார் விக்கி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கைதி’ படத்தில் தனது மிரட்டல் குரலாலும் மாஸ் நடிப்பாலும் வில்லனாக மிரட்டியவர் அர்ஜூன் தாஸ். தற்போது, `மாஸ்டர்’, `அந்தகாரம்’, `துருவ நட்சத்திரங்கள்’ என இவர் நடித்துள்ள பல படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். இந்த நிலையில், நேற்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாட லைவ் வந்தார் அர்ஜூன் தாஸ்.

View this post on Instagram

📸 @a.killer.eye Styling @dirtya.aa41

A post shared by Arjun Das (@imarjundas) on

இதில் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படம் குறித்தும் அதன் டிரெய்லர் குறித்தான அப்டேட் கேட்க அதற்குப் பதிலளித்துள்ளார் அர்ஜுன். “ரசிகர்கள் இவ்வளவு நாள்கள் காத்திருந்ததுக்கு ஏத்த மாதிரி ‘மாஸ்டர்’ படமும் டிரெய்லரும் செம மாஸா இருக்கும். டிரெய்லர்ல விஜய் சார் பேசற வசனம் கண்டிப்பா ஹிட் அடிக்கும். அதுமட்டுமல்ல, ‘மாஸ்டர்’ முதல்ல தியேட்டர்லதான் ரிலீஸ் ஆகும். ரசிகர்களோட சேர்ந்து முதல் நாள் படம் பார்க்க நானும் ஆர்வமா இருக்கேன்.” என்று தெரிவித்துள்ளார்.

லாக்டெளனால் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக சினிமா ஷூட்டிங் உட்பட எந்தவிதமான பணிகளும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு நிபந்தனைகளோடு அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், சில நாள்கள் மட்டுமே எடுத்து முடிக்கப்பட வேண்டிய பல படங்கள் அப்படியே இருப்பதால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலையும், தொழிலாளர்களின் வாழ்வாதரங்களையும் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்களுடன் மீண்டும் ஷூட்டிங் தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என இன்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

`பாகுபலி’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகும் படம் `ஆர்.ஆர்.ஆர்.’ அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியாபட் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் ராம்சரண் பிறந்தநாள் அன்று படக்குழு அவரது கதாபாத்திரம் குறித்தான லுக், பெயர், டீசர் ஆகியவற்றை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து மே 20 ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளன்று படக்குழுவிடமிருந்து சிறப்பு அறிவிப்பு வருமென ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில், ’லாக்டெளனால் பணிகள் தடைபட்டுள்ளதால், வீடியோ மற்றும் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிட இயலவில்லை என்பது எங்களுக்கும் வருத்தமளிக்கிறது. ஆனால், உங்கள் காத்திருப்புக்கு நிச்சயம் பலன் உள்ளது’ என அறிவித்துள்ளது படக்குழு.

அடுத்த கட்டுரைக்கு