Published:Updated:

மற்றுமொரு `ஓ சொல்றியா...' பாடலில் சமந்தா... விஜய் தேவரகொண்டாவின் படத்தில் இடம்பெறும் குத்துப்பாடல்!

சமந்தா

அல்லு அர்ஜுனுடன் சமந்தா ஆடிய 'ஓ சொல்றியா...' பாடல் மில்லியன்களில் ட்ரெண்டானது. அதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மற்றுமொரு பாடலுக்கு ஆடத் தயாராகிறார் சமந்தா.

மற்றுமொரு `ஓ சொல்றியா...' பாடலில் சமந்தா... விஜய் தேவரகொண்டாவின் படத்தில் இடம்பெறும் குத்துப்பாடல்!

அல்லு அர்ஜுனுடன் சமந்தா ஆடிய 'ஓ சொல்றியா...' பாடல் மில்லியன்களில் ட்ரெண்டானது. அதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மற்றுமொரு பாடலுக்கு ஆடத் தயாராகிறார் சமந்தா.

Published:Updated:
சமந்தா

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படத்தில், நடிகை சமந்தா அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஆடிய பாடலான 'ஓ சொல்றியா...' பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. பாடல் வெளியீட்டின் போது பல சர்ச்சைகள் வந்தாலும் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி கொண்டாடப்பட்டு ஹிட் அடித்து வருகிறது. தற்போது பல படங்களில் கமிட்டாகி இருக்கும் சமந்தா வெளிநாட்டுப் பயணங்களில் உள்ளார். அண்மையில் அவர் ஸ்விட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடுவது போல் வெளியான காணொலிகளும் புகைப்படங்களும் ட்விட்டரில் வெளியாகி, அதுவும் மில்லியன்களில் ட்ரெண்டானது.

Samantha & vijay Devarakonda
Samantha & vijay Devarakonda

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஓ சொல்றியா...' என்னும் பாடலுக்குப் பிறகு சமந்தாவின் எல்லா ட்வீட்களும் புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வரிசையில் சமந்தா தற்போது கமிட் ஆகியுள்ள அடுத்த பாடல் தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன. 'ஓ சொல்றியா...' பாடல் போல மற்றுமொரு குத்துப் பாடலில் சமந்தா, தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஆடவுள்ளார். இந்தப் பாடல் அவரின் பேன் இந்தியா படமான 'லிகர்' படத்துக்கு எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ள சமந்தா ஹாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார். ஹாலிவுட் இயக்குநரான பிலிப் ஜானுடன் இணைந்து 'Arrangements of Love' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism