சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம், 'ஓ பேபி'. தென் கொரியப் படமான 'மிஸ் கிரானி' படத்தின் ரீமேக்தான் இப்படம். இந்தப் படத்தில் பாட்டியாக லட்சுமியும் பேத்தியாக சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தெலுங்கில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. முக்கியமாக படத்தின் ரிலீஸ் சமயத்தில் சமந்தாவின் ரசிகர்கள் 60 அடி உயரத்துக்கு கட்அவுட் வைத்திருந்தனர். குறிப்பாக, தெலங்கானா கவர்னர் நரசிம்மன் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார். இதையடுத்து, அவரின் குடும்பத்துக்கும் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் இப்படத்தை திரையிட்டுக் காட்டினார். படம் பார்த்த பின், சமந்தாவின் நடிப்பைப் பாராட்டினார், புகழ்ந்தார், கவர்னர்.

அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படமானது, தற்போது தமிழிலும் டப் செய்யப்பட இருக்கிறது. மேலும், ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் நந்தினி ரெட்டி இயக்கியிருந்த இப்படம், பாலிவுட்டிலும் ரீமேக் ஆக இருக்கிறது. சமந்தா கேரக்டரில் ஜான்வி கபூர் அல்லது ஆலியா பட் நடிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.