Published:Updated:

"அவர் ஊர்ல அவர் ராஜா" - புனித் ராஜ்குமாருடனான நினைவுகள் பகிரும் சமுத்திரக்கனி

நடிகர் புனித் ராஜ்குமார்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் இருந்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சமுத்திரக்கனி

"அவர் ஊர்ல அவர் ராஜா" - புனித் ராஜ்குமாருடனான நினைவுகள் பகிரும் சமுத்திரக்கனி

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் இருந்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சமுத்திரக்கனி

Published:Updated:
நடிகர் புனித் ராஜ்குமார்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு இந்திய சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி பல சினிமா நட்சத்திரங்கள் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் ரசிகர்கள் திரண்டு அவரது உடலைக் காண வந்ததால் பெங்களூரே ஸ்தம்பித்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ் திரையுலகில் பலர் புனித்திற்கு நெருக்கமானவர்கள். அவர்களுள் முக்கியமானவர் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி. இவர் இயக்கிய 'போராளி' படத்தின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார்தான் ஹீரோ. இவருடன் இருந்த நினைவுகள் குறித்து சமுத்திரக்கனி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

'போராளி' கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார்
'போராளி' கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார்

''ரொம்ப அற்புதமான மனிதர். அத்தனை பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமங்கள்னு அவர் செஞ்சதெல்லாம் அளவேயில்லை. 'போராளி' கன்னட ரீமேக் 'யாரே கூகடளி' படத்துல அவர்கூட வேலை பார்த்தது எப்பவும் நீங்கா நினைவுகளா எனக்குள்ள இருக்கும். அவருடைய இறப்பு செய்தி எப்படி எடுத்துக்கிறதுனு தெரியலை. ஷூட்டிங்காக ரொம்ப தூரத்துல இருக்கேன். அப்படியே அவர்கூட இருந்த நேரத்தை நினைச்சு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன்.

'போராளி' ஷூட்டிங் போய்க்கிட்டிருந்தது. தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் வந்து இங்க படம் எடுத்துக்கிட்டு இருக்கான்னு 100 பேர் கிளம்பி ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்துட்டாங்க. அவங்களை பார்த்து, கை நீட்டி நிற்க சொன்னார், நின்னாங்க. என் தோள் மேல கை போட்டு 'என் ப்ரதர். எல்லோரும் திரும்பி போங்க'னு சொன்னதும் அத்தனை பேரும் மறுவார்த்தை பேசாமல் திரும்பி போய்ட்டாங்க. அவர் மேல அவ்வளவு மரியாதையும் பாசமும் வெச்சிருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கன்னட சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் பண்ணாத வொர்க் அவுட்டே கிடையாது. அவ்வளவு ஃபிட்டா இருப்பார். அவர் ஊர்ல அவர் ராஜா. 'நாடோடிகள்' கன்னட ரீமேக்கை இயக்க சொல்லி கேட்டாங்க. நான் அப்போ தெலுங்கு 'நாடோடிகள்' ஷூட்டிங்ல இருந்ததனால என்னால பண்ண முடியலை. வேறொரு இயக்குநர் இயக்கினார். அப்புறம், ''போராளி' ரீமேக் பண்ணணும். இந்த முறை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்'னு கூப்பிட்டார். நான் போய் வொர்க் பண்ணினேன். அந்த 75 நாள்கள் பொக்கிஷம். புனித் எங்கேயோ ஒரு இடத்துல இருக்கார்னுதான் தோணுது. இந்த மாதிரியான இழப்புகள் பல விஷயங்கள் நமக்கு கத்துக்கொடுக்குது.

புனித் ராஜ்குமாருடன் சமுத்திரக்கனி
புனித் ராஜ்குமாருடன் சமுத்திரக்கனி

'விநோதய சித்தம்' பார்த்துட்டு அவருடைய மேனேஜர் குமார் பேசினார். 'சார் இன்னும் படம் பார்க்கணும்னு சொன்னார்'னு சொன்னாங்க. நான் அவர்கிட்ட பேசி ஆறு மாசம் இருக்கும். நான் நடிச்ச ஒரு தெலுங்கு படத்தை பார்த்துட்டு எனக்கு கூப்பிட்டு, 'நல்லாயிருக்கு சார். உங்களுடைய இந்த முகத்தை எதிர்பார்க்கலை'னு சொன்னார். 'அடுத்து ஒரு படம் பண்ணுவோம்' னு சொன்னேன். 'நிச்சயமா பண்ணலாம். எப்போனு சொல்லுங்க'னு சொன்னார். இனி அது நடக்காது. எப்போ என்னவேணாலும் எதுவும் நடக்கும்னு இயற்கை நமக்கு சொல்லிக்கிட்டே இருக்கு. அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism