Election bannerElection banner
Published:Updated:

புளி மாங்க புளிப்பே... சந்தானத்தின் சிரிப்பே... `பாரிஸ் ஜெயராஜ்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

பாரிஸ் ஜெயராஜ்
பாரிஸ் ஜெயராஜ்

முந்தைய படமான 'A1'-ன் அதே டிரீட்மென்ட்டில் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார் ஜான்சன். படத்தின் ப்ளஸும் அதுதான் மைனஸும் அதுதான். இரண்டு படங்களுக்கும் அத்தனை ஒற்றுமைகள்!

சந்தானத்தின் 'ஏ 1' படத்தை இயக்கி ஹிட் அடித்த ஜான்சன், கிட்டத்தட்ட அதே டைப் எக்ஸ்ட்ரா மேரிட்டல் கதையோடு களமிறங்கி கலகலக்க வைத்திருக்கும் படமே 'பாரிஸ் ஜெயராஜ்'. சந்தானம் கானா பாடல்கள் மூலம் வைரலான யூ-டியூப் செலிபிரிட்டி. சந்தானத்தின் அப்பா ஒரே நேரத்தில் 'டபுள் இன்னிங்ஸ்' ஆட, அது சந்தானத்தின் காதலில் குழப்பமாய் வந்து முடிய... எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.
பாரிஸ் ஜெயராஜ்
பாரிஸ் ஜெயராஜ்

சில படங்களுக்குப் பிறகு மீண்டும் ஃபுல் ஃபார்மில் சந்தானம். தொய்வான முதல் பாதியை கடக்க வைப்பது சந்தானமும் அவரது கவுன்டர்களும்தான். வழக்கமான சந்தானம் ஸ்டைல் ஹுயூமர்தான் என்றாலும் பல இடங்களிலும் வெடித்து சிரிக்கவைக்கிறார். சந்தானத்துடன் டைகர் தங்கதுரை, 'மொட்டை' ராஜேந்திரன், வினோத் எனப் பலரும் இணைந்திருப்பதால் கலகலப்புக்குப் பஞ்சமே இல்லை. சந்தானத்தின் நண்பர்களாக வருபவர்கள் தொடங்கி சிறு சிறு கதாபாத்திரங்களாக ஒரு காட்சியில் வந்துபோகும் நடிகர்கள் கூட கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்கின்றனர். ஆனால், ஓர் அளவுக்கு மேல் ரைமிங்கில் மட்டுமே காமெடி செய்வது சலிப்பு தட்டுகிறது. படமா, 'குக் வித் கோமாளி' செட்டா என்ற குழப்பம் வருமளவுக்கு ரைமிங் காமெடி செய்திருக்கிறார்கள்.

சந்தானம் பார்க்க ஸ்லிம்மாக இருந்தாலும் 'உடம்புக்கு ஏதும் பிரச்னையோ' என்பதுபோல சில இடங்களில் சோர்வாகத் தெரிகிறார்.

சந்தானத்தின் தந்தையாக ப்ருத்வி ராஜ். இரண்டாம் பாதியில் இரட்டை இன்னிங்ஸால் சிக்கலில் சிக்கிக்கொண்டு அவர் செய்யும் அட்ராசிட்டீஸ்தான் படத்தையே நகர்த்துகிறது. ஆனால், இதெல்லாம் உண்மையிலேயே நடக்குமா எனக் கேள்வியும் எழாமல் இல்லை.

பாரிஸ் ஜெயராஜ்
பாரிஸ் ஜெயராஜ்

கதாநாயகியாக அனைகா சோதி. 'நடிப்புனா க்யா?' எனக் கேட்பார் போல. லிப் சிங்க்கும் இல்லை, எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவும் இல்லை. டெம்ப்ளேட் தமிழ் சினிமா கதாநாயகியாக திரையில் வந்துபோகிறார். டூயட் இல்லை என்பது சந்தோஷம்!

படத்தில் ஹீரோவே கானா பாடகர் என்பதால் 'கானா ஸ்பெஷலிஸ்ட்' சந்தோஷ் நாராயணனுக்கு இறங்கி கலக்கும் வாய்ப்பு. அனைத்துமே கானா பாடல்கள்தான். ஆனால், மெட்ராஸ் கானா மிஸ்ஸிங். 'புளி மாங்கா புளிப்' பாடல் மட்டும் தியேட்டரைவிட்டு வெளியே வந்தப் பிறகும் முணுமுணுக்கவைக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட படமே முடிந்த பிறகு வருகிறது இந்தப் பாடல்.

நலன் செம நச், கௌதமும் கூல்... ஆனால், வெங்கட் பிரபு, விஜய்?! `குட்டி ஸ்டோரி' - ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்
முந்தைய படமான 'A1'-ன் அதே டிரீட்மென்ட்டில் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார் ஜான்சன். படத்தின் ப்ளஸும் அதுதான் மைனஸும் அதுதான். இரண்டு படங்களுக்கும் அத்தனை ஒற்றுமைகள்!
பாரிஸ் ஜெயராஜ்
பாரிஸ் ஜெயராஜ்

படத்தின் முக்கிய கரு முடிந்த பின்னும் 10-15 நிமிடங்கள் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் படம் தொடர்வது அலுப்பு, சலிப்பு! ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வலிந்துபோய் கலாய்ப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

காமெடிக்குக் குறைவில்லை என்பதால் பாஸாகிறான் இந்த 'பாரிஸ் ஜெயராஜ்'.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு