Published:Updated:

`3டி'யில் உருவாகும் சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு 3'!

தார்மிக் லீ

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஏ1', ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பாசிட்டிவ்வாக பேசப்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து, 'டகால்டி' படத்தை முடித்துவிட்டு, 'தில்லுக்கு துட்டு 3' படத்தை உடனடியாகத் தொடங்க திட்டுமிட்டுக்கொண்டிருக்கிறார், சந்தானம்.

Santhanam
Santhanam ( Dhillukku Dhuddu )

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலா, 'தில்லுக்கு துட்டு' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 'ஹாரர் ஸ்பூஃப்' ஜானரில் உருவான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சந்தானம்
சந்தானம்
தில்லுக்கு துட்டு

முதல் பாகம், கடந்த 2016-ல் வந்த நிலையில், இப்படத்தின் 2-ம் பாகம் 2019-ல் வெளியானது. மாறுபட்ட பேய் படம் என்பதால், இந்தப் பாகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக ரீச் இருந்தது. 'ஏ1' வெளிவந்த பிறகு, சூட்டோடு சூடாக 'தில்லுக்கு துட்டு 3' -ன் பணிகளையும் ஆயத்தப்படுத்தும் முயற்சியில் இயக்குநர் ராம் பாலாவும் சந்தானமும் மும்மரமாக இருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது, யோகி பாபுவுடன் 'டகால்டி' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சந்தானம். அந்தப் படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரி, 'தில்லுக்கு துட்டு 3' ஐயும் தயாரிக்கிறார். படத்தின் இயக்குநரான ராம் பாலா எழுத்துப் பணிகளுக்காக, ஜெய்ப்பூர் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது. மேலும், இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு. படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.