கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“சிக்னலில் பாராட்டுறாங்க!” - “இவர் அடி வாங்கினதைப் பார்க்க முடியலை!”

பூஜா, ஜான்
பிரீமியம் ஸ்டோரி
News
பூஜா, ஜான்

வெரி ஹேப்பி! எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன், எவ்வளவோ முயற்சிகள். பளிச்சுன்னு தெரிஞ்சபாடில்லை.

ஒரே ஒரு படம்தான், ‘சார்பட்டா பரம்பரை.’ அதில் வேம்புலியாக பளிச்சென்று தெரிந்தார் ஜான் கொகெய்ன். முரட்டு மீசை சுமக்கும் உதடுகள், ‘ஜிம்’மில் மெருகேறிய உடம்பு. உடன் காதல் மனைவி பூஜா. இருவரையும் சந்தித்தேன்.

“வெரி ஹேப்பி! எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன், எவ்வளவோ முயற்சிகள். பளிச்சுன்னு தெரிஞ்சபாடில்லை. வெற்றி கண்ணாமூச்சி காட்டிட்டிருந்தது. இவ்வளவு நாள் கழிச்சு ‘சார்பட்டா’வில் அங்கீகாரம் கிடைச்சிருக்கு. ஏராளமான போன் கால்கள், தாராளமான பாராட்டுகள். தேங்க்ஸ் டு இரஞ்சித்...” எனச் சிரிக்கிறார் ஜான்.

 “சிக்னலில் பாராட்டுறாங்க!” - “இவர் அடி வாங்கினதைப் பார்க்க முடியலை!”

“வேம்புலின்னு ஒரு கேரக்டர். படத்தை ரொம்பத் தாங்குகிற ஒரு கேரக்டர். வில்லன்னு சொல்ல முடியாது. இந்தப் படத்தில் வில்லனே கிடையாது. அவன் ரிங்ல ஏறிட்டா வெற்றி மட்டும்தான் பார்ப்பான். ரசிகர்கள்கிட்டே கிடைக்கிற கைத்தட்டலும் ஆரவாரமும் தான் அவனுக்கு வெகுமதி. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் இயக்குநர் என்னை வைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பவும் அதே மீசை, அதே ஜான்தான். இப்பத்தான் ஓடி வந்து கைகுலுக்குறாங்க, காரில் சிக்னலில் நின்னால் ஓடிவந்து ‘சூப்பரா பண்ணுனீங்க’ன்னு சொல்றாங்க. எனக்கு கண்ணாடியைத் தாண்டிக் கண்ணீர் வருது” என்று மகிழ்ச்சியில் நெகிழ்கிறார் ஜான்.

அதே மகிழ்ச்சியுடன் பூஜா. “கோவை வீரகேரளத்தில் பிறந்து, கோவையில் படித்து மாடலிங், ராம்ப் ஷோ, அழகிப் போட்டின்னு கொஞ்சம் கொஞ்சமா என் கரியரை வளர்த்துக்கிட்டேன். மிஸ் கோவை, மிஸ் கேரளா ரன்னர் அப்னு அடுத்தடுத்து விருதுகள் வாங்கினேன்.

சின்ன வயதிலிருந்தே கிக்பாக்ஸிங் பிடிக்கும். சென்னைக்கு வந்தபிறகும் மாடலிங், ஆங்கரிங்னு இருந்தாலும் உடற்பயிற்சியிலும் ஒரு நாளும் தவறமாட்டேன். அப்படி இருக்கும்போது ஜானை எங்க ஜிம்ல பார்த்தேன். பொதுவாக ஜிம்ல ஒர்க் அவுட் பண்றவங்க தன் உடம்பைப் பற்றியே கவனமா இருப்பாங்க. இவர் வந்தால் தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். ஏதோ ஒரு ஈர்ப்பு, பேச ஆரம்பிச்சோம். புது அத்தியாயம் தொடங்கி விட்டது.

 “சிக்னலில் பாராட்டுறாங்க!” - “இவர் அடி வாங்கினதைப் பார்க்க முடியலை!”

இங்கே காதல், அன்பு, நட்பு என மூன்றையும் சேர்த்துக் குழப்பிப்கொண்டவர்கள் அதிகம்.நட்பைக் காதலாகப் புரிந்துகொண்டவர்கள், அன்பைக் காதலாகப் புரிந்துகொண்டவர்கள் மத்தியில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இரண்டு பேரின் வீட்டிலும் பேசியபிறகே திருமணம் எளிமையாக நடந்தது. எனக்கென்று ரசனைகள் இருக்கு. அவருக்கென்று விருப்பங்கள் உண்டு. யாரும் யார் மீதும் விருப்பங்களைத் திணிப்பது கிடையாது. ‘சார்பட்டா’வில் நடிக்கும்போது ரிங்ல ஏறிட்டாலே வேம்புலியாக மாறிடுவார். அப்புறம் அவர் வாங்குற அடியைப் பார்த்துட்டு ஒருநாள் ஷூட்டிங் போனதோடு சரி, மறுபடியும் போகலை” என்று பூஜா சொல்ல, “சார்கிட்டே உண்மையைச் சொல்லப்போறேன் பூஜா. சார் இவங்க பாக்ஸிங்ல கெட்டி. ஒவ்வொரு குத்தும் சரியான அடியா, இடியா இறங்கும்” என்கிறார் ஜான். “ஐயோ... அப்படியெல்லாம் இல்லை” எனச் சிரித்தபடி மறுக்கிறார் பூஜா.

வெற்றியை ருசித்த உவகை அது.