Published:Updated:

“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”

துஷாரா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
துஷாரா விஜயன்

என் கேரக்டருக்கு உயிர் கொடுத்தது இரஞ்சித் சார்தான். ‘சார்பட்டா’ல நான் கமிட் ஆனதே, சுவாரஸ்யமான கதை.

“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”

என் கேரக்டருக்கு உயிர் கொடுத்தது இரஞ்சித் சார்தான். ‘சார்பட்டா’ல நான் கமிட் ஆனதே, சுவாரஸ்யமான கதை.

Published:Updated:
துஷாரா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
துஷாரா விஜயன்

‘சார்பட்டா பரம்பரை’யில் ஆர்யாவின் மனைவி மாரியம்மாவாக செம ஸ்கோர் அள்ளியவர் துஷாரா விஜயன். நேரில் சந்தித்தால் ஸ்டைலிஷ் காஸ்ட்யூமில் மாடர்ன் மாரியம்மாவாக மினுமினுக்கிறார். அவரது வாட்ஸ்அப்பில் ஹார்ட்டீன் லைக்ஸ்களும் கலர்ஃபுல் பொக்கேக்களும் குவிந்ததில் சந்தோஷமாய்ப் பூரிக்கிறார் துஷாரா.

‘`இப்பதான் ஆர்யாவுக்கு வாழ்த்து சொன்னேன். அப்பா ஆகியிருக்காரே... டபுள் ட்ரீட் கேட்டிருக்கேன். படத்துல ஒரு சீன். ஆர்யாகிட்ட, ‘உனக்குப் பொண்ணு வேணுமா, பையன் வேணுமா?’ன்னு கேட்பேன். அதுக்கு அவர் ‘நீதான் வேணும்’பார். `அப்படினா பொண்ணுதான் பிறக்கும்’னு சொல்வேன். அதே மாதிரி அவருக்குப் பொண்ணு பிறந்திருக்கு...” தலைகோதிப் புன்னகைக்கிறார்.

``மாரியம்மாவா மாறினது எப்படி?’’

“என் கேரக்டருக்கு உயிர் கொடுத்தது இரஞ்சித் சார்தான். ‘சார்பட்டா’ல நான் கமிட் ஆனதே, சுவாரஸ்யமான கதை. ட்விட்டர்ல என் போட்டோவைப் பார்த்துட்டு இரஞ்சித் சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. ‘நீங்க நாளைக்கு ஆபீஸுக்கு வந்திடுங்க’ன்னு சொன்னாங்க. ஆனா, நான் நம்பாமல், யாரோ பிராங்க் பண்றாங்கன்னு நினைச்சிட்டேன். மறுநாள் அதே நம்பர்ல இருந்து 15 மிஸ்டு கால்ஸ் வந்திருந்தது. எனக்கு செம டென்ஷன் ஆகிடுச்சு. அப்புறம் எனக்கே ஒரு டவுட்... இவ்ளோ முறை போன் செய்திருக்காங்கன்னா, ஒருவேளை உண்மையா இருக்குமோன்னு நினைச்சு, என் மேனேஜரை விட்டு அவங்ககிட்ட பேசச் சொன்னேன்.

அதற்குள் இரஞ்சித் சார் ‘அந்தப் பொண்ணுக்கு அவ்ளோ ஆட்டிடியூடா? நடிக்க விருப்பமில்லைன்னா வர வேண்டாம்’னு சொல்லிட்டார். நான் பதறிப்போய் இரஞ்சித் சார் ஆபீஸுக்குப் போனேன். அதன்பிறகு ஆடிஷன் நடந்துச்சு. லுக் டெஸ்ட் எடுத்தாங்க. அப்பவே ‘இந்த ரோல் நான்தான் பண்ணப் போறேன்’னு தெரிஞ்சிடுச்சு. இது எல்லாத்தையும் விட சந்தோஷம், டப்பிங் டைம்ல இரஞ்சித் சார் படத்தைப் பார்த்துட்டு, ‘செமையா நடிச்சிருக்கே... எல்லாரும் உன்னைக் கொண்டாடப்போறாங்க பாரு’ன்னு பாராட்டினார். ரொம்பவே சந்தோஷமான தருணம் அது.”

“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”

``துஷாரா சினிமாவுக்காக வெச்ச பேரா?’’

“இல்லை. துஷாரா எங்க தாத்தா வெச்ச பெயர். அப்பவே எனக்கு மாடர்னா பெயர் வெச்சிருக்காங்கன்னு நினைக்கும்போது ஆச்சரியமா இருக்கு. என் பெயரைக் கேட்கற யாருமே, ‘நீங்க எந்த ஊரு? சினிமாவுக்காக இப்படிப் பேர் வெச்சிருக்கீங்களா?ன்னு விசாரிப்பாங்க!”

``திண்டுக்கல் பொண்ணு... மாடலிங்ல எப்படி; ஹீரோயின் ஆனது எப்படி?’’

“திண்டுக்கல்லில் இருந்து வந்து தமிழ்நாடே கொண்டாடும் பொண்ணா ஆகியிருக்கேன். ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்ததால இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டாங்க. படிக்கப் பிடிக்கல. நிறுத்திட்டேன். அப்புறம் ஃபேஷன் டிசைனிங்ல சேர்ந்தேன். முதல் வருஷம் படிக்கும்போதே, மாடலிங் பண்ணினேன். ‘ஃபேஸ் ஆஃப் சென்னை’ டைட்டில் வின்னரானேன். சினிமா ஆஃபர் வந்துச்சு. ‘போதை ஏறி புத்தி மாறி’ வாய்ப்பு வந்ததும், காலேஜ்ல லீவு கேட்டேன். கிடைக்கல. அப்படியே டிசைனர் ஆசையையும் உதறிட்டு, நடிக்க வந்துட்டேன். நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும்னு ஆறு வருஷமா போராடியிருக்கேன். எல்லாச் சூழல்களிலும் எங்க அப்பா அம்மா என்கரேஜிங்கா இருந்திருக்காங்க. ‘சார்பட்டா’வுக்கு முன்னாடி கிட்ஸ் என்டர்டெயினர் படம் ஒண்ணிலும் நடிச்சிருக்கேன். ‘சார்பட்டா’ல நான் பெயர் வாங்கினதுல எங்க வீட்ல உள்ளவங்களுக்கு அவ்ளோ திருப்தி. அவ்ளோ ஹேப்பி.’’

“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”
“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”

``என்ன சொல்றார் ஆர்யா?’’

“முதல்நாள் நான் அவருக்குச் சோறு ஊட்டுற சீன்தான் ஷூட் பண்ணினாங்க. ஆர்யா ரொம்ப டெடிகேட்டட். ஸ்பாட்லேயும் ஃபிட்னஸ் ஒர்க்அவுட் பண்ணிட்டே இருப்பார். காலையில செட்ல இருக்கற எல்லாரையுமே ‘வாங்க சைக்கிளிங் போயிட்டு வரலாம்’னு ஏதோ கடைக்குப் போயிட்டு வரலாம்ங்கறதுபோலக் கூப்பிடுவார். அதுவும் அவர் சைக்கிளிங்னா, ஐம்பது கிலோ மீட்டர், நூறு கிலோ மீட்டர்னு போவார். அதைப் போல பசுபதி சாரும் அன்பா பழகினார்.’’

“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”
“தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் திண்டுக்கல் பொண்ணு நான்!”

``அடுத்து?’’

“வசந்தபாலன் - அர்ஜுன் தாஸ் காம்பினேஷன்ல நடிக்கறேன். அதுல புது துஷாராவைப் பார்க்கப் போறீங்க. தொடர்ந்து பர்ஃபாமென்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் கவனம் செலுத்தவே விரும்புறேன்.”