Published:Updated:

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

சார்பட்டா பரம்பரை
பிரீமியம் ஸ்டோரி
சார்பட்டா பரம்பரை

கபிலனாய் ஆர்யா. தலைமுதல் கால் வரை தேவைக்கதிகமாய் பிடி சதைகூட இல்லாமல் நெருப்பில் வார்த்ததுபோல நிமிர்ந்து நிற்பதில் தெரிகிறது அவர் சிந்திய வியர்வை

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

கபிலனாய் ஆர்யா. தலைமுதல் கால் வரை தேவைக்கதிகமாய் பிடி சதைகூட இல்லாமல் நெருப்பில் வார்த்ததுபோல நிமிர்ந்து நிற்பதில் தெரிகிறது அவர் சிந்திய வியர்வை

Published:Updated:
சார்பட்டா பரம்பரை
பிரீமியம் ஸ்டோரி
சார்பட்டா பரம்பரை

உச்சத்தையும் சரிவையும் சந்தித்து, தன்னையும் தன் குழுவின் பெருமையையும் மீட்டெடுக்கும் குத்துச்சண்டை வீரனின் வாழ்க்கையே இந்த ‘சார்பட்டா பரம்பரை.’

வடசென்னையின் சுமைதூக்கும் தொழிலாளி கபிலன். தன் அப்பாவிடமிருந்து பற்றிக்கொண்ட பாக்ஸிங் காதல் ரத்தத்திலேயே ஊறிவிட, அப்பாவின் நண்பரான ரங்கன் வாத்தியாரிடம் வித்தை கற்றுக்கொள்ள நினைக்கிறார். ஆனால், கணவனைப் பலிவாங்கிய பாக்ஸிங் வன்முறை தன் மகனையும் காவு வாங்கிவிடக்கூடாது எனத் தடைபோடுகிறார் கபிலனின் அம்மா. ஒருகட்டத்தில் இடியாப்பப் பரம்பரையைச் சேர்ந்த வேம்புலி, சார்பட்டா பரம்பரையின் அத்தனை பாக்ஸர்களையும் வரிசையாய்த் தோற்கடிக்க, சார்பட்டாவின் ரங்கன் வாத்தியாருக்குத் தேவையாய் இருக்கிறது ஒரே ஒரு பெருவெற்றி. காலம், கபிலனை வாத்தியாரிடம் கொண்டு வந்து நிறுத்துகிறது. குருவும் சிஷ்யனும் தங்கள் முயற்சிகளில் வென்றார்களா என்பதே மீதிக்கதை.

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்
சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

கபிலனாய் ஆர்யா. தலைமுதல் கால் வரை தேவைக்கதிகமாய் பிடி சதைகூட இல்லாமல் நெருப்பில் வார்த்ததுபோல நிமிர்ந்து நிற்பதில் தெரிகிறது அவர் சிந்திய வியர்வை. ரிங்கிற்கு உள்ளே கபிலனாய் மனம் கவர்கிறார். ஆனால், ரிங்கிற்கு வெளியே... உடலைச் செதுக்குவதில் ஆர்யா காட்டிய அக்கறையை கூடவே உடல்மொழியைக் கொண்டுவருவதிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் காட்டியிருக்கலாம்.

ரங்கன் வாத்தியார். பசுபதி எனும் மகாநடிகனுக்கு இது பெருமைமிகு முத்திரை. வேறு யாரும் இவ்வளவு பொருத்தமாய் ரங்கன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்க முடியாது எனக் காட்சிக்குக் காட்சி நிரூபித்துவிட்டுச் செல்கிறார். அவரின் எதிராளியான ஜி.எம்.சுந்தரும் கச்சிதமான தேர்வு.

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்
சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

மாரியம்மாவாக துஷாரா. பா.இரஞ்சித் படைப்புலகின் துறுதுறு பெண். ‘என்னான்னு திரும்பியாவது பாக்குறீயா நீ?’ என ஆண்களின் உலகில் தனக்கான இருப்பைத் தன் மொழியிலேயே தக்கவைத்துக்கொள்ளும் மனைவி.

ஜான் விஜய்க்கென ஒரு பிரத்யேக உடல்மொழி உண்டு. அதுவே ஒருகட்டத்தில் வழக்கமாகிவிட, இந்தப் படத்தில் அதை உடைத்து வேறொருவராய் வெளியே வந்து அதகளப்படுத்துகிறார். உடல்மொழி தாண்டி, வார்த்தைப் பிரயோகத்தில் மெனக்கெட்டதில் தெரிகிறது அவரின் அபார உழைப்பு. கபிலனின் டாடிதான் ‘சார்பட்டா’ படத்தின் காட்பாதர்.

டான்ஸிங் ரோஸ் - பா.இரஞ்சித் ஸ்பெஷல். எதிரியாய் அறிமுகமாகி, நாயகனோடு மோதி, அதன்பின்னும் பார்ப்பவர்களை இயல்பாய்க் கவரும் கதாபாத்திர வரைவு தமிழ்சினிமாவில் அரிதாக நிகழும் அதிசயம். அதற்குத் திரையில் உயிரூட்டியிருக்கிறார் சபீர் கலரக்கல். பொறாமையில் புழுங்கி, தாழ்வு மனப்பான்மையில் மாட்டித் தவிக்கும் கலையரசன், அவரை ஆற்றுப்படுத்தும் மனைவியாக சஞ்சனா இருவரும் தங்களுக்கான வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இத்தனை பேருக்கு மத்தியிலும் அசராத தோரணையில் வில்லத்தனத்தைத் தெறிக்கவிட்டு கதையை நகர்த்திச் செல்கிறார் தணிகாவாக வரும் வேட்டை முத்துக்குமார். மாறன், காளி வெங்கட், ஜான் கொக்கென் என சார்பட்டாவின் பெரும்பலம், பா.இரஞ்சித் - தமிழ்ப்பிரபா கூட்டணி உருவாக்கி உலவவிட்டிருக்கும் கதைமாந்தர்கள்.

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்
சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்
சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

கதாபாத்திரங்கள், பீரியட் படங்களின் பெரிய சவால் கலை இயக்கமும் ஆடை வடிவமைப்புமே. ராமலிங்கத்தின் படைப்பாற்றல் 70களின் உலகத்தை நம்முன் அப்படியே கொண்டுவந்து நிறுத்த, அதில் 70களின் மாந்தர்களை அசப்பில் அப்படியே உலவ விட்டிருக்கிறது ஏகன் ஏகாம்பரத்தின் ஆடை வடிவமைப்பு. படத்தின் டெம்போ சற்றும் குறையாமல் பார்த்துக்கொள்ளும் சந்தோஷ்நாராயணனின் இசையும், கபிலனின் வரிகளில் ‘வானம் விடிஞ்சிருச்சு’, அறிவு வரிகளில் ‘நீயே ஒளி’ பாடல்களும் கச்சிதமான கையுறைகள்.

முரளியின் கேமரா காலக்கருவியாகவே மாறி நம்மை எமர்ஜென்சி காலத்திற்குக் கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது. அன்பறிவின் சண்டைக்காட்சிகள் யதார்த்தம். படத்தின் நீளம் பிற்பாதியில் அயர்ச்சியை ஏற்படுத்துவதால் செல்வா படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நேரடி அரசியல் கட்சிகளும் காட்சிகளும் இவ்வளவு விரிவாக இடம்பெறுவது தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை. நெருக்கடிநிலைக் காலகட்டம், தி.மு.க சந்தித்த சவால்கள், எம்.ஜி.ஆர் அரசியலின் எழுச்சி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இவை அந்த வட்டார மக்களின் வாழ்வில் ஒட்டாமல் தீவிர தி.மு.க பிரமுகரான ரங்கன் பாத்திரச் சித்திரிப்புடன் நின்றுபோவது பெருங்குறை.

வேம்புலியைக் கபிலன் வீழ்த்தும்போதே படம் முடிந்துவிடுவதைப் போல் உணர்வு. அதற்குப்பிறகும் நீளும் கதை, இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது. வசனங்களும் கதைக்கு வலிமை சேர்க்கவில்லை. பயிற்சியற்ற கபிலன் திடீர் வீரனாக மாறுவது, அலுத்துப்போன அம்மா சென்டிமென்ட் என்று பல உறுத்தல்கள்.

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்
சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

இது கபிலன் என்கிற தனிமனிதனின் எழுச்சியைப் பற்றிய படமா, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியைப் பேசும் படமா, சார்பட்டா பரம்பரையின் கெளரவம் பற்றிய படமா, ரங்கன் வாத்தியாரின் சபதம் குறித்த படமா என்ற குழப்பம் எஞ்சுகிறது.

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்

கதைக்களம் எதை நோக்கி என்பதில் தெளிவில்லை என்றாலும், விதவிதமான மனிதர்கள், 70களின் காலகட்டத்துக்கான உழைப்பு, கதைசொல்லலின் நேர்த்தி ஆகியவற்றால் ‘சார்பட்டா பரம்பரை’ கெலிக்கிறது.