

1996ல் கட்சி ஆரம்பிக்கும்போது சரத்குமார் அளித்த சுவாரஸ்யப் பேட்டி இதோ...
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று பலராலும் நினைக்கப்பட்ட சரத்குமார், முதன் முறையாக நவம்பர் மாதம் ஜூனியர் விகடனில் தமிழக முதல்வரைத் தாக்கி கொடுத்த பரபரப்புப் பேட்டிக்குப் பிறகு முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார்.
சரத்குமார் பல ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதுமாக பிஸியாக இருக்கிறார். ரஜினிகாந்தின் 'முத்து' எவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிலீஸானதோ, அதே அளவு எதிர்பார்ப்பு சரத்குமாரின் லேட்டஸ்ட் படமான 'மகாபிரபு'வுக்கும் இருந்தது. இந்தப் படத்தில் விஜயன், சண்முகசுந்தரம் போன்ற வக்கீல்கள் தாக்கப்பட்ட விஷயங்கள், அராஜகம், போலீஸின் இயலாமை ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இறுதி காட்சியில் இன்றைய நிலவரத்தை எடுத்து கூறும் விதமாக 'அரெஸ்ட் செய்தால் ஆஸ்பத்திரியில் நெஞ்சு வலி என்று படுத்துக் கொள்வேன்' என்ற ஒரு வசனம்கூட வருகிறது.ரஜினிகாந்துடன் இணைந்து அரசியல் பிரவேசம் செய்யலாம் என்று முடிவெடுத்த சரத்குமார், இப்போது 'விழிப்பு உணர்ச்சிக் கழகம்' என்ற இயக்கத்தைத் துவக்க இருக்கிறார். இது அரசியல் கட்சியாக மாறக்கூடும் என்று ஜூ.வி-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகிறார் சரத் பேட்டியிலிருந்து...
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP