Published:Updated:

"விஜய்க்கு ஒரு வரலாற்றுக்கதை ரெடி பண்ணியிருக்கேன்!"- சசிகுமார் | கதைப்போமா with பர்வீன் சுல்தானா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதைப்போமா with பர்வீன் சுல்தானா
கதைப்போமா with பர்வீன் சுல்தானா

சமீபத்தில் வெளியான 'உடன்பிறப்பே' படத்திலிருந்து உரையாடலைத் தொடங்கினார் பர்வீன். மிகவும் மனம்திறந்து அந்தப்படம் பற்றிப் பேசினார் சசிகுமார்.

ஸ்டூடியோவுக்கு உள்ளே நுழைந்ததுமே அத்தனை பேருடனும் மனசுக்கு நெருக்கமாகிவிட்டார் சசிகுமார். 'வணக்கம் டீச்சரம்மா' என்று பர்வீனை பார்த்து அடக்கமாகச் சிரித்த சசிகுமார், ஒரு சகோதரனைப் போல கேமராமேன்களை கையாளத் தொடங்கிவிட்டார். ஒன்றரை மணி நேரம் பர்வீன் சுல்தானாவுக்கும் சசிகுமாருக்கும் இடையே நிகழ்ந்த அந்த உரையாடல் சிரிப்பும் சிலிர்ப்புமாக கடந்தது.
அரசியல், இலக்கியம், சினிமாவென பலதுறைகளிலும் முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் இதுவரை பேசப்படாத தங்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், 'கதைப்போமா With பர்வீன் சுல்தானா' என்ற நிகழ்ச்சி ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவருகிறது. முதல் நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான சசிகுமாரோடு உரையாடினார், பேராசிரியையும் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா.

சசிகுமார்
சசிகுமார்

சமீபத்தில் வெளியான 'உடன்பிறப்பே' படத்திலிருந்து உரையாடலைத் தொடங்கினார் பர்வீன். மிகவும் மனம்திறந்து அந்தப்படம் பற்றிப் பேசினார் சசிகுமார். கொரோனாவுக்குப் பிறகு திரைப்பட வணிகம் தியேட்டரிலிருந்து ஓடிடி பக்கம் நகர்வது பற்றிய கேள்விக்கும் மிகவும் விரிவாகப் பதிலளித்தார் சசிகுமார்.

உரைடாயல் நெகிழ்வாக நகர்ந்துகொண்டிருந்த சூழலில் பர்வீன் சசிகுமாரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். 'எல்லாப் படங்களிலும் ஒரேமாதிரி கெட்டப் சேஞ்சே இல்லாம நடிக்கிறீங்களே ஏன்?'

அதே புன்னகையுடன் அந்தக் கேள்வியை எதிர்கொண்டு சிரிக்க சிரிக்க பதில் சொன்னார் சசிகுமார்.

சினிமாவை சசிகுமார் தேர்வு செய்ததற்கான காரணங்களையும் கேட்டு வாங்கினார் பர்வீன் சுல்தானா. இரண்டு படங்களோடு இயக்குநர் சசியைக் காணவில்லையே என்ற கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக பதில் சொன்னார் சசிகுமார். தான் எதிர்கொண்ட பொருளாதார ஏற்ற இறக்கம், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் பற்றியெல்லாம் விரிவாகப் பேசினார்.
அடுத்ததாக, சற்று வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும் 'ஏன் ஜாதியைத் தூக்கிப்பிடிக்கிற மாதிரி படங்களைத் தேர்வு செய்றீங்க' என்று கேட்டார் பர்வீன். அந்தக் கேள்வியையும் முகச்சுழிப்பில்லாமல் எதிர்கொண்டு வெகு இயல்பாகவும் நேர்மையாகவும் பதில் சொன்னார் சசிகுமார்.

சசிகுமார்
சசிகுமார்

அவர் சொன்ன பதிலில் பர்வீன் திருப்தியடையவில்லை. சில உதாரணங்களை முன்வைத்து, 'நீங்கள் இன்னும் விரிவாகப் பதில் சொல்ல வேண்டும்' என்றார். தயக்கமில்லாமல் பதில் சொன்னார் சசி. தமிழ்ச்சினிமாவில் கதை பஞ்சம் இருப்பதை ஒப்புக்கொண்டார் சசிகுமார். அது தொடர்பாக பர்வீனும் சசிகுமாரும் விரிவாக உரையாடினார்கள். இடையே விஜய் குறித்த ஒரு ரகசிய செய்தியையும் பகிர்ந்துகொண்டார் சசிகுமார்.

சசிகுமார் இதுவரை கொடுத்த எந்த நேர்காணலிலும் குடும்பத்தைப் பற்றி பேசியதில்லை. இதைக் குறிப்பிட்டே, 'ஒரு ரசிகையாக உங்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என்றார் பர்வீன். சசிகுமார் தன் குடும்பத்தைப் பற்றியும் தன் பிள்ளைகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
பர்வீன் சுல்தானா- சசிகுமார் இடையிலான முழு உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக இன்று வெளியாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என சினிமா உலகின் பல்துறைகளிலும் ஆளுமை செலுத்தும் சசிகுமார், பர்வீன் சுல்தானாவுடனான இந்த நேர்காணலில் மனம் திறந்து தன் வாழ்க்கை பற்றியும் சினிமா பற்றியும் நண்பர்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த உரையாடல் வீடியோவைப் பார்த்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு