Published:Updated:

6-வது முறையாக இணைகிறார்கள்!- சிபி-சத்யராஜ் மிரட்டப்போகும் த்ரில்லர் படம்!

தார்மிக் லீ

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான `சைத்தான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அதற்குப்பின் சிபி நடித்த `சத்யா' படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் சிபி - சத்யராஜை வைத்து த்ரில்லர் ஜானர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

Sathyaraj- Sibiraj
Sathyaraj- Sibiraj

2016-ல் வெளியான படம் `சைத்தான்'. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த இப்படத்தில், அருந்ததி இவரின் ஜோடியாக நடித்திருந்தார். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இப்படத்தை, ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்தார். அதற்குப்பின் தெலுங்கில் வெளியான `ஷனம்' படத்தை சிபியை வைத்து `சத்யா'வாக ரீமேக் செய்து இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் சிபி சத்யராஜோடு கை கோக்கிறார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

Director Pradeep Krishnamoorthy
Director Pradeep Krishnamoorthy

`வெற்றிவேல் சக்திவேல்', `ஜோர்', `மண்ணின் மைந்தன்', `கோவை பிரதர்ஸ்', `ஜாக்ஸன் துரை' படத்தைத் தொடர்ந்து பிரதீப் இயக்கும் இப்படத்தில் சத்யராஜ், சிபியோடு இணைந்து நடிக்கிறார். `சத்யா' படத்தில் பணியாற்றிய இயக்குநர் பிரதீப்பின் வேலைகள் சிபிக்கு பிடிக்க, இந்தப் படத்தில் கேட்டு கமிட்டாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங், வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர். படத்தின் டைட்டில் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.