Published:Updated:

'டிக்: டிக்: டிக்' லாரி... 'மிஷன் மங்கல்' பூரி... எது சயின்ஸ் ஃபிக்‌ஷன்? #VikatanDiwaliMalar2019

சயின்ஸ் ஃபிக்‌ஷன்
சயின்ஸ் ஃபிக்‌ஷன்

'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என ஹாலிவுட்டுக்கு டிக்கெட் எடுத்தால், அங்கேயும் இப்படிபட்ட கலவரங்கள்தான்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'ஜூராசிக் பார்க்' ஒரு ஃபேன்டஸிதான். ஆனால், அதுவும், அழிந்துபோன ஓர் உயிரினத்தை அதன் டிஎன்ஏ கொண்டு மீளுருவாக்கம் செய்வது என ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசியிருக்கும். 'பிளேடு ரன்னர்' தந்த எழுத்தாளர் பிலிப் கே. டிக்-கின் பெரும்பாலான கதைகளும் அறிவியல் புனைவுக் கதைகள்தாம். ஆனால், அறிவியலின் இலக்கணத்தை அவர் எதிலேயும் மீறியது இல்லை. இல்லாத ஒன்றை அறிவியல் என்று முன்வைத்ததும் இல்லை. புனைவு என்றும் வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படாது. மேஜிக்/ஃபேன்டஸி என்றுமே அறிவியல் ஆகாது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகியவற்றின் பல படங்கள் இதுவரை உடைத்த அறிவியல் ஃபர்னிச்சர்களெல்லாம் அனபாண்டு போட்டாலும் ஒட்ட முடியாத அளவுக்கு டேமேஜ் ஆனவை. அதிலும் இவ்வகைப் படங்களில் இடம்பெறும் வசனங்களிலிருந்து சில வார்த்தைகளை உருவி, தம்பி கூகுளிடம் கொடுத்தால் போதும். ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகம்கூட, தண்டவாளத்தில் தலையை வைத்துக்கொள்ளும்.

'டிக்: டிக்: டிக்' லாரி... 'மிஷன் மங்கல்' பூரி... எது சயின்ஸ் ஃபிக்‌ஷன்? #VikatanDiwaliMalar2019

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'2.0' படத்தில் 'This is beyond Science!' என்று ஆரம்பித்துவிட்டு, பிறகு, 'இதெல்லாம் அறிவியலில் உண்டு' என்று இல்லாத ஒரு ஃபோர்ஸுக்கு, 'ஆரா தெரியாதா?' என விளக்கம் தந்தார்கள். 'நெகட்டிவ் சார்ஜ்னா தப்பான குணங்கள் கொண்டவையா இருக்கும்; பாசிட்டிவ் சார்ஜ்னா நல்ல எனர்ஜி; அது நன்மை செய்யும்' என்று அது நீளூம். நெகட்டிவ் சார்ஜுடு விஷயங்களெல்லாம் கெட்டதைத்தான் செய்யுமா என்ன? ஓர் ஆற்றலின் சார்ஜுக்கும் அதன் குணாதிசயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இது வெறும் பேய்க் கதை. அறிவியல் அல்ல!

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட 'டிக்: டிக்: டிக்' வேற லெவல். நிலாவில் இறங்கியவர்கள் மீண்டும் அங்கிருந்து சைனீஸ் ஸ்பேஸ் ஸ்டேஷன் நோக்கிச் செல்ல எத்தனிப்பார்கள். ஹார்டு லேண்டிங்கில் (Hard Landing) இறங்கிய அவர்களின் கலத்தை, ஜஸ்ட் லைக் தட் ஏதோ லாரியை மீண்டும் ஸ்டார்ட் செய்து நகர்த்துவதுபோல எடுத்துக்கொண்டு பறப்பார்கள். (சந்திரயான் டீம் கவனிக்க!) சரி, உண்மைக் கதை என பாலிவுட்டின் 'மிஷன் மங்கல்' பக்கம் ஒதுங்கினால், அங்கே பூரி சுடுவதைவைத்து ராக்கெட் அறிவியலுக்கு இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு, 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என ஹாலிவுட்டுக்கு டிக்கெட் எடுத்தால், அங்கேயும் இப்படிபட்ட கலவரங்கள்தான். ஏலியன் என்றால், ஏதோ ஒரு மிருகத்தின் உடல் தோற்றம்கொண்டு வலிமையுடன் இருப்பார்கள்; இல்லையென்றால், மிரட்டும் பாணியில் கொம்புகள், நீளமாகப் பற்கள் என வில்லன்களாக இருப்பார்கள் என்பதுதான் ஹாலிவுட்டின் எழுதப்படாத விதி.

'டிக்: டிக்: டிக்' லாரி... 'மிஷன் மங்கல்' பூரி... எது சயின்ஸ் ஃபிக்‌ஷன்? #VikatanDiwaliMalar2019

சயின்ஸ் ஃபிக்‌ஷனோ, சயின்ஸ் கலந்த ஃபேன்டஸியோ அல்லது வெறும் ஃபேன்டஸியோ இங்கே சிக்கல் இல்லை. ஆனால், இவை அனைத்தும் அதனதன் எல்லையிலிருந்துவிட்டால் பிரச்னையே கிடையாது. ஃபேன்டஸியை சயின்ஸ் என்றோ, ஏற்கெனவே இது சயின்ஸ் இல்லை என்று ஒதுக்கிவைத்த ஒன்றை வேண்டுமென்றே விடாப்பிடியாக, 'இதுவும் அறிவியல்தான்' என்று முட்டுக்கொடுப்பதோதான் பிரச்னை.

சரி, அதற்காக சயின்ஸ் ஃபிக்‌ஷனே எடுக்கக் கூடாதா என்ன? 'இப்படியெல்லாம் எதிர்காலத்தில் நிகழலாம்' எனும் கதைகளே வரக் கூடாதா என்ன? தாராளமாக வரலாம். தாராளமாகக் கற்பனைக் குதிரையை ஓயாமல் ஓவர்டைம் பார்க்கவிட்டு, 'எதிர்கால உலகம் இப்படி இருக்கும்' எனச் சொல்லாம். - '2001: A Space Odyssey', 'இன்டர்ஸ்டெல்லார்', 'கான்டாக்ட்' 'அரைவல்' உள்ளிட்ட படங்களை மேற்கோள்காட்டி விவரிக்கும் சினிமா திறனாய்வுக் கட்டுரையை, விகடன் தீபாவளி மலரில் 'சயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல!' எனும் தலைப்பில் வாசிக்கலாம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'டிக்: டிக்: டிக்' லாரி... 'மிஷன் மங்கல்' பூரி... எது சயின்ஸ் ஃபிக்‌ஷன்? #VikatanDiwaliMalar2019

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

அடுத்த கட்டுரைக்கு