சினிமா
தொடர்கள்
Published:Updated:

“சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை!”

கிருஷ்ணா - சாயா சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணா - சாயா சிங்

தன்னுடைய நிஜப்பெயரையே மறந்து ‘தெய்வமகள்’ பிரகாஷாகப் பல வருடம் வாழ்ந்தவர், கிருஷ்ணா.

2010-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது காதலாகி, திருமணம் செய்து கொண்டவர்கள் கிருஷ்ணா மற்றும் சாயா சிங். தற்போது, கிருஷ்ணா ‘ரன்’ சீரியலிலும், சாயாசிங், சுந்தர்.சி படத்திலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஓர் ஓய்வு நேரத்தில் அவர்களைச் சந்தித்தோம்.

 “சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை!”

இருவருக்குமான காதல் தருணங்களைச் சொல்ல ஆரம்பித்தார் சாயாசிங். ‘` ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தில் நாலு மாசம் நானும் இவரும் வேலை பார்த்தோம். முதல் மூணு மாசம் இவர் யார்னு எனக்குத் தெரியாது. நாலாவது மாசம், ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்ல இவர் காலீத் ஹொசைனியோட புக் படிச்சிட்டிருந்தார். நானும் காலீத் புக்ஸ் படிச்சிருக்கேன் என்பதால், ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம். அப்படியே பேச ஆரம்பிச்சு நண்பர்களானோம்.

அதுக்குப்பிறகு இரண்டு நாள் போனில் தெரியாத மாதிரியே பேசிட்டிருந்தோம். மூணாவது நாள் இவர், ‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. ஏதோ ஒரு ஃபீலிங் உங்கமேல இருக்கு. உங்களுக்கும் அப்படி இருந்தா நாம பேசிக்க வேண்டாம்’னு சொல்லிட்டார்’’ என்று சாயாசிங் சொல்லி நிறுத்த, தொடர்ந்தார் கிருஷ்ணா.

 “சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை!”

‘`ஷூட்டிங் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். ஷூட்டிங் முடிஞ்சபிறகு பேசுவதில் எதுவும் தப்பில்லைன்னு தோணுச்சு. அதுக்குப் பிறகு அவங்க பேசவே இல்லை. என்னால் பேசாமல் இருக்க முடியலை. நான்தான் அவங்களுக்கு, ‘சாப்டியா, தூங்குறியா..?’ன்னு மெசேஜ் பண்ண ஆரம்பிச்சேன். என்னால் பேசாமல் இருக்க முடியலன்னு சரண்டர் ஆகிட்டேன். அப்புறம் எங்க ரிலேசன்ஷிப் செம்ம சீரியஸ் ஆகிடுச்சு’’ எனச் சொல்லிச் சிரித்தவரைப் பார்த்து வெட்கப்பட்ட சாயா, ‘`எங்க இரண்டு பேருக்குக்கும் பெரிய பிளானிங் எல்லாம் இல்லை. என்ன முயற்சி பண்ணினாலும், வாழ்க்கையில் நடப்பது நடந்தே தீரும். பிரச்னைனா அதைச் சந்திச்சுட்டுப் போயிட்டே இருக்கணும்னுதான் நினைப்போம்’’ என்றார்.

‘`ஒருவரை ஒருவர் மிஸ் பண்ணும்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கும்..?’’ என கிருஷ்ணாவிடம் கேட்டோம்.

‘`அவங்க இல்லாத நாள்கள் நான் ரொம்ப சிரமப்படுவேன். எனக்கான எல்லா விஷயங்களையும் அவங்ககிட்ட போன் பண்ணிக் கேட்பேன். சில நேரங்களில் வெளியூரில் இருந்தால் போன் பண்ணி, சாப்பாடு ஆர்டர் பண்ணச் சொல்லுவேன். அந்த அளவுக்கு அவங்களைச் சார்ந்துதான் இருக்கேன்னு நினைக்கிறேன்’’ எனக் கிருஷ்ணா சாயாவை அணைத்துக் கொள்ள, சாயா தொடர்கிறார்.

 “சின்னத்திரையில் ஒரு வெள்ளித்திரை!”

‘`அவர் என்ன கலர் டிரஸ் போடணும், ஹேர் ஸ்டைல் எப்படிப் பண்ணணும்னு வீடியோ கால் பண்ணிக் கேட்பாங்க. ஒருவேளை நான் போனை எடுக்கலைனா அவ்வளவுதான். ரொம்ப டென்சன் ஆகிடுவாங்க. என் அம்மா ‘என்னடி ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க’ன்னு சிரிப்பாங்க’’ என்று காதலோடு கிருஷ்ணாவைப் பார்க்கிறார் சாயாசிங்.

‘ரன்’ சீரியலுக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது எனக் கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, ‘`இது ஒரு த்ரில்லர் சீரியல். கிட்டத்தட்ட ஒரு ஆக்‌ஷன் படம் பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும். முதல் நாள் ஒளிபரப்பானபோது, என்னுடைய போர்சன் எப்போ வரும்னு ஆவலா பார்த்துட்டிருந்தேன். மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இன்னும் சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்க்கலாம்’’ என்று நம்பிக்கையோடு சொல்ல, அதை சாயாசிங் ஆமோதிக்கிறார்.