Published:Updated:

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

எந்தெந்தப் படங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எந்தெந்தப் படங்கள்

#SecretUpdates

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

#SecretUpdates

Published:Updated:
எந்தெந்தப் படங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எந்தெந்தப் படங்கள்

வ்வொரு வருடமும் முடியும் தறுவாயில் இருக்கும்போது அடுத்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் என்ற பட்டியலை எழுதுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் எந்தெந்தப் படங்கள் எதிர்பார்ப்பில் இருந்தனவோ அதே படங்கள்தான் அடுத்த வருடமும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களாக பெரும்பாலும் இருக்கின்றன. அந்தப் படங்களின் தற்போதைய நிலை என்ன, எப்போது வெளியாகும்? ஆரம்பிக்கலாங்களா?

அண்ணாத்த

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்துவிட்டன. மூன்றாவது ஷெட்யூலுக்காகச் செல்லவிருந்த சமயத்தில்தான் லாக்டெளன் வந்துவிட்டது. அக்டோபர் மாதம் ஷூட்டிங்கிற்குச் செல்லலாம் என்று நினைத்த ரஜினி, ‘இப்போது வேண்டாம். டிசம்பர் மாதம் கொரோனா தாக்கம் குறைந்தவுடன் போகலாம்’ என்று முடிவெடுத்தார். ஆனால், அவர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஜனவரி ஆகிவிடும் என்கிறார்கள். ஷூட்டிங் ஆரம்பித்தாலும் நயன்தாரா - கீர்த்தி சுரேஷுக்கான பகுதிகள்தான் முதலில் எடுக்கப்படவிருக்கிறதாம். ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில்தான் ஷூட்டிங் என்பது உறுதியாகிவிட்டது. தீபாவளிக்கு வெளியாகும் என்று நினைத்த சமயத்தில், பொங்கல் 2021 படம் ரிலீஸ் என்று அறிவித்தது படக்குழு. ஆனால், அதற்கும் வாய்ப்பில்லை.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!
சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

விக்ரம்

ந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக ஆரம்பமானது கமல்ஹாசனுக்கு ஒரு வகையில் ப்ளஸ். காரணம், ஜனவரி வரை அவருக்கு இதுவே பிரசார மேடையாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் ‘இந்தியன் 2’ படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று நினைத்தவருக்கு எதிர்பாராத திருப்பமாக அமைந்துவிட்டது 2020. இதற்கிடையில், ‘தலைவன் இருக் கின்றான்’ படம்வேறு இருந்தது. ஆனால், இப்போது எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’ படத்திற்காகக் கைகோத்துள்ளார். கேங்ஸ்டர் கதை என்கிறார்கள். 32 நாள்தான் ஷூட்டிங். ‘கைதி’ படத்தைப் போல அனைத்துமே இரவில் எடுக்கப்பட இருக்கிறதாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கைக் கருத்தில்கொண்டுதான் கமல்ஹாசனுக்கான கால்ஷீட்டைத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, திட்டமிட்டபடி 2021 சட்டமன்றத் தேர்த லுக்குள் படம் திரையரங்குகளில் இருக்க வேண்டும் என்பதுதான் லோகேஷுக்குக் கொடுக்கப்பட்டுள்ள டார்கெட்.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

மாஸ்டர்

ப்ரல் 9, 2020 ரிலீஸ் எனத் திட்டமிட்டிருந்த ‘மாஸ்டர்’ படக்குழு, குறி வைத்திருப்பது பொங்கலை. ஒவ்வொரு வருடமும் தீபாவளிதான் விஜய்யின் ஏரியா. ஆனால், இந்த தீபாவளிக்கு ஒன்றுமில்லையே என்று கவலையாக இருந்த ரசிகர்களுக்குப் பல நாள்கள் பாதுகாத்து வைத்திருந்த டீசரை இறக்கிவிட்டனர். ஆனால், அதில் விஜய்க்கு ஒரு வசனம்கூட இல்லை. வழக்கமான விஜய் படமாக இருக்காது என்று லோகேஷ் சொன்னதற்கு சாம்பிள் இதுதான்போல. ‘எத்தனை மாதங்க ளானாலும் பரவாயில்லை. மாஸ்டர் தியேட்டருக்குத்தான்’ என்பதில் தீர்க்கமாக இருந்த படக்குழுவுக்குக் காலம் வழிகொடுத்துவிட்டது என்றே சொல்லலாம். விஜய்யின் படம் வெளியான சில நாள்களில் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அப்படித்தான் இந்தமுறையும் நடக்கும்.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

வலிமை

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் வெயிட்டிங். அப்டேட் கொடுக்கச் சொல்லி மதுரையில் போனி கபூருக்கு போஸ்டரே ஒட்டிவிட்டார்கள். ஆனால், இந்த தேதியில் இத்தனை மணிக்கு வரும் என்றெல்லாம் சொல்லி அப்டேட் கொடுப்பது இவர்களது ஸ்டைல் அல்ல. திடீரென்றுதான் வரும். ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு எடுத்து முடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. படத்தின் 30 சதவிகிதக் காட்சிகள் வெளிநாடுகளில்தான் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் இயக்குநர் வினோத். இந்தியாவில் எடுக்கவேண்டிய பகுதிகளை முடிப்பதற்கும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கிடைப்பதற்கும் சரியாக இருக்கும் என்று எண்ணி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் முடிவதற் குள்ளாவது போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ‘வலிமை’யான அறிவிப்பு வருகிறதா என்று பார்ப்போம்.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

கோப்ரா

ஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், நிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கும் படம் இது. பல லுக்கில் அதிரடி காட்டவிருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க ரஷ்யா சென்றிருந்த போதுதான் லாக்டெளன் வந்தது. இன்னும் 25 நாள்கள் மீதம் இருக்கிறதாம். அதில் விக்ரமிற்கு 20 நாள் கால்ஷீட் இருக்கிறது என்கிறார்கள். டிசம்பர் இறுதியில் இதற்கான படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள். அந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காக வெளிநாடும் செல்லவிருக்கிறார்கள். இதனை முடித்துவிட்டு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்குச் செல்லவிருக்கிறார் விக்ரம்.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

சூர்யா - பாண்டிராஜ் படம்

ல்லா முன்னணி நடிகர்களும் தனது படங்கள் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என்றிருந்த சமயத்தில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘சூரரைப் போற்று’ என்று தனது தயாரிப்பில் உருவான இரண்டு படங்களை அமேசான் பிரைமுக்குப் கொடுத்துவிட்டார் சூர்யா. ஒரு தயாரிப்பாளராக அவருடைய முடிவு நல்லதுதான் என்றாலும் ‘சூரரைப் போற்று’ தியேட்டரில் வெளியாகியிருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும் என்பதுதான் பலரின் கருத்து. தற்போது ‘நவரசா’வில் கெளதம் மேனன் இயக்கும் பகுதியில் நடிக்கிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கிராமத்துக் கதை. எமோஷனில் ஸ்கோர் செய்யும் பாண்டிராஜ், இந்தமுறை கொஞ்சம் ஆக்‌ஷனையும் கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ தொடங்கும்.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்.’ திருநெல்வேலியில் ஷூட்டிங் நடைபெற்றது. இன்னும் ஒரு ஷெட்யூல் மீதமிருக்கும் நிலையில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் ‘அத்ரங்கி ரே’ எனும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்றுவிட்டார் தனுஷ். லாக்டெளன் முடிந்தவுடன் சென்னையில் செட் அமைத்து ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தனுஷ் இல்லாத சில பகுதிகள் திருநெல்வேலியில் ஒரு சில நாள்கள் எடுக்க வேண்டியுள்ளதாம். மற்றபடி படம் ரெடி. தற்போது ‘அத்ரங்கி ரே’ படத்திற்காக டெல்லியில் இருக்கிறார் தனுஷ். ஏற்கெனவே, கையிலிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தை, 75% இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தவுடன் வெளியிடலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். ‘ஜகமே தந்திரம்’ படமும் 2021 என்றால் நான்கு படங்கள் தனுஷிற்கு அடுத்த வருடம் வெளியாகும்.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

ஈஸ்வரன்

ன்மிகம், உடல் எடை குறைப்பு என லாக்டெளனை பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டார், சிம்பு. 33 நாள்களில் சிம்புவை வைத்து ‘ஈஸ்வரன்’ படத்தை எடுத்து முடித்துவிட்டார், இயக்குநர் சுசீந்திரன். ‘கோவில்’ படத்திற்குப் பிறகு, சிம்பு நடிக்கும் முழு நீள கிராமத்துக் கதை. திரு ஒளிப்பதிவு, தமன் இசை. நிதி அகர்வால், நந்திதா என இரண்டு ஹீரோயின்கள். பாரதிராஜா, முனீஷ்காந்த், பாலசரவணன் என பலர் உள்ளனர். கொஞ்சம் ஹீரோயிசம், நிறைய எமோஷன் என ரெடியாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ். தனக்கான டப்பிங்கையும் முடித்துவிட்டு ‘மாநாடு’ படத்திற்குச் சென்றுவிட்டார், சிம்பு. பயங்கர சேஞ்ச் ஓவர், வேகமாக முடித்த படம் என்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

டாக்டர்

‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு, நெல்சன் இயக்கும் படம் இது. இதுவும் அவருடைய ஜானரில் ஹியூமராகவே இருக்கும் என்கிறார்கள். தெரியாமல் நடக்கும் ஒரு சம்பவத்தில் சிலர் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை. இந்தப் படத்திற்கான கடைசி ஷெட்யூல் மீதம் இருந்த நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இடையில் இந்தப் படத்தை ஓடிடி தளத்திற்குக் கேட்கிறார்கள் என்ற தகவலெல்லாம் வந்தன. ஆனால், படம் மே 2021 ரிலீஸ் என அறிவித்துவிட்டனர். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படமும் முடியும் தருவாயில் இருக்கிறது.

சினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்!

லாபம்

ல படங்கள் கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு முதலில் வெளியாகும் படம் ‘லாபம்.’ எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாள்களே உள்ளன. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார். கம்யூனிசம் பேசும் விவசாய சங்கத்தலைவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதே சமயத்தில், ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் தங்கையாக மஞ்சிமா மோகனும் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களில் ஏதோ ஒன்றுதான் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’, ரோகாந்த் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படமும் இருக்கின்றன. தற்போது, நித்யா மேனனுடன் ‘19 (1)(a)’ என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார், விஜய் சேதுபதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism