Published:Updated:

"வைரமுத்துவுடன் பணியாற்றியதால் இளையராஜா என்னை ஒதுக்கலாமா" - கலங்கிய இயக்குநர் சீனு ராமசாமி!

சீனு ராமசாமி

மாமனிதன் படத்தின் பாடலின் ரீ-ரெகார்டிங் மற்றும் கம்போசிங்கில் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் இளையராஜா தன்னை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

"வைரமுத்துவுடன் பணியாற்றியதால் இளையராஜா என்னை ஒதுக்கலாமா" - கலங்கிய இயக்குநர் சீனு ராமசாமி!

மாமனிதன் படத்தின் பாடலின் ரீ-ரெகார்டிங் மற்றும் கம்போசிங்கில் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் இளையராஜா தன்னை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

Published:Updated:
சீனு ராமசாமி

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் `மாமனிதன்'. இப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முதல்முறையாக இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி செய்தியாளர் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, மாமனிதன் படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது தன்னை அழைக்கவில்லை என்றும் வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றியதால் இளையராஜா தன்னை நிராகரித்ததாகவும் வருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

இளையராஜா - யுவன் சங்கர் ராஜா
இளையராஜா - யுவன் சங்கர் ராஜா

இது பற்றிக் கூறிய அவர், "மாமனிதன் பாடலின் ரீ-ரெக்கார்டிங் மற்றும் கம்போஸிங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு இல்லை; நான் அழைக்கப்படவும் இல்லை. இதற்குக் காரணம் என்னவென்று எனக்குத் இன்னமும் தெரியவில்லை. ஆனால் இப்படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன்தான் அவர்கள் வேலை செய்வார்கள் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. என் படத்தில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். இது என்ன நியாயம்" என்று வருத்தத்துடன் கூறினார் சீனு ராமசாமி. மேலும், படத்தின் புரொமோஷனுக்குக் கூட இளையராஜாவும் யுவனும் வரவில்லை. யுவன் மீது எந்தத் தப்பும் இல்லை, அவர் பாவம். அவர் அப்போது எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார்" என்று கூறினார்.