லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்

செம்மலர் அன்னம்
பிரீமியம் ஸ்டோரி
News
செம்மலர் அன்னம்

லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் இயக்கின ‘அம்மணி’தான் எனக்கு அறிமுகப் படம்.

அறிமுகப் படத்திலேயே நிராகரிப்பையும், அதை மீறிய பாராட்டுகளையும் சந்தித்தவர் நடிகை செம்மலர் அன்னம். நிறம் முக்கியத் தகுதியாகப் பார்க்கப்படுகிற நடிப்புத் துறையில், அதைப் புறந்தள்ளி முன்னேறிக் கொண்டிருப்பவர். ‘செந்நாய்’ படத்தில் நடித்ததற்காக, தாகூர் சர்வதேச திரைப்பட விழா மற்றும் போர்ட் பிளேர் சர்வதேச திரைப்பட விழாவில் 2021 வருடத்துக்கான சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார். லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் ‘மாடத்தி’ படத்தில் கவனிக்கத்தக்க கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘வலிமை’, பேச்சிலர்’, ‘அயலான்’, ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘கட்டில்’ என பிசியாக இருக்கிறார்.

நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்

‘`மூன்றரை வருஷங்களுக்கு முன்னாடி நடிச்ச ‘மாடத்தி’ படத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டறாங்க. அறிமுக இயக்குநர் ஜெயகுமார் சேது ராமனின் ‘செந்நாய்’ படத்துல வெட்டியாள் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அந்த கேரக்டர் ஆஸ்துமா நோயாளியும்கூட. எழுத்தாளர் பவா செல்லத்துரைதான் எனக்கு ஜோடி. பிணங்களை எரிக்கிற, புதைக்கிற இடத்துல கூட சாதிய பாகுபாடு இருக்கறதைப் பேசும் படம் அது. எதிர்பார்க்காத தருணங்கள்ல கிடைக்கிற இந்த மாதிரியான வாய்ப்புகளும் பாராட்டுகளும் அங்கீகாரமும்தான் அடுத் தடுத்து ஓடறதுக்கான உற்சாகத்தைக் கொடுக்குது...’’ - அமைதியாகச் சொல்பவர், கோயம்புத்தூரிலிருந்து சினிமா கனவுகளோடு கோடம்பாக்கம் வந்தவர்.

‘`விஷுவல் கம்யூனிகேஷன்ல யுஜியும் மாஸ் கம்யூனிகேஷன்ல பிஜியும் முடிச்சிருக் கேன். கரகாட்டம் கந்தசாமி என் தாத்தா. அம்மாவோட அப்பாவான அவரை நான் பார்த்ததில்லை. ரொம்ப சின்ன வயசுலயே இறந்துட்டார். பிரபலமான ட்ரூப் வெச்சு நடத்தினதா அவரை பத்தி நிறைய கேள்விப் பட்டிருக்கேன். அந்தத் தாக்கம்தான் எனக்குள்ளயும் வந்திருக்கணும்.

நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்

நடிகையாகணும் என்ற எண்ணம் ஆரம் பத்துல கொஞ்சமும் இல்லை. டைரக்‌ஷன் கனவுதான் பெருசா இருந்தது. வசந்த் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த் திட்டிருந்தேன். எதிர்பாராதவிதமா அந்த புராஜெக்ட் பாதியிலயே நின்னுடுச்சு. அப்புறம் ஆக்டிங் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருண் மொழி சார் அறிமுகம் கிடைச்சு, நடிப்புப்பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்படியே நடிப்பார்வமும் வந்திருச்சு.

லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் இயக்கின ‘அம்மணி’தான் எனக்கு அறிமுகப் படம். புதுமுகம், பெரிய மார்க்கெட் இல்லை, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கிற வயசுமில்லைனு ஏதேதோ காரணங்கள் சொல்லி அந்தப் படத்துல என்னை எல்லாருமே வேண்டாம்னு சொன்னதா படம் ரிலீசான பிறகு கேள்விப்பட்டேன். லட்சுமி மேடம் மட்டும்தான் அந்தக் கேரக்டருக்கு நான்தான் பொருத்தமா இருப்பேன்னு நம்பியிருக்காங்க. படம் ரிலீசானதும் என்னைத் தேடி வந்து பாராட்டின பலரும், ‘நீங்க இவ்வளவு பிரமாதமா நடிப்பீங்கனு எங்களுக்கு நம்பிக்கையே இல்லை... உங்களைப் போய் வேண்டாம்னு சொன்னோமே’னு வருத்தப்பட்டு சொன்னாங்க...’’ - முதல் படத்திலேயே நம்பிக்கை நாயகியானவர், அடுத்து ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘சில்லுக் கருப்பட்டி’ உள்ளிட்ட படங்களிலும், மம்மூட்டி நடித்த ‘ஸ்ட்ரீட் லைட்’ மலையாளப் படத்திலும் நடித்திருக் கிறார். குறும்பா என்ற பழங்குடி மொழியில் முதன்முதலாக எடுக்கப் பட்ட ‘ம்’ என்ற படத்திலும் இவரே நாயகி.

நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்
நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்

சரும நிறத்தை நம்பர் ஒன் தகுதி யாகப் பார்க்கும் தமிழ் சினிமாவில், மாநிற முகங்களும் ஜெயிக்கும் என்ப தற்கான உதாரணமாகத் தொடர்பவர் செம்மலர்.

‘`சமீபகாலத்துல சினிமாவுக்கு வந்திருக்கிற இயக்குநர்கள்கிட்ட நிறம் குறித்த அந்த பார்வை ரொம்பவே மாறியிருக்கு. அந்த இயக்குநர்கள் வெற்றிபெறும்போது அவங்ககூடவே சேர்ந்து இந்த நிற பேதமும் மாறும்னு நம்பறேன். என் கலரை காரணம் காட்டி இதுவரை எனக்கு எந்த நிராகரிப்பும் நிகழலை. இப்படி கலரைவெச்சு வாய்ப்பு கொடுக்கிற விஷயம் ஹீரோக்களுக்கு நடக்கறதில்லை. பசங்களுக்கான சுதந்திரம் என்பது இங்கே வேற மாதிரியா பதிஞ்சிருக்கு. பசங்க பண்ணா சரிங்கிற மனோபாவம் பெண்களுக்கே கூட இருக்கு.

நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்
நிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்! - செம்மலர் அன்னம்

இதையெல்லாம் ஒரே நாள்ல மாத்திட முடியாது. என்னை மாதிரி ஆட்கள் ஜெயிச்சுக் காட்டறதுதான் மாற்றத்துக்கான ஆரம்பமா இருக் கும்னு நினைக்கிறேன். நாளைக்கு நான் இயக்குநராகும்போது நான் எதிர்பார்த்த மாற்றங்களை நிச்சயம் செயல்படுத்துவேன். நடிகைகள்னா இப்படித்தான் இருக்கணும்ங்கிற சராசரி இலக்கணங்களை உடைச்ச ஐஸ்வர்யா ராஜேஷ், ஷீலா, மலை யாளத்துல நிமிஷா சஜயன்னு நிறைய பேர் நிறைய படங்கள் பண்ணிட்டிருக் காங்க. அந்த மாற்றம் முழுமையா வர கொஞ்சம் காலம் எடுக்குமே தவிர, அது நடக்காத விஷயமெல்லாம் இல்லை. யதார்த்தமான படங்களை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. யதார்த்த முகங்களையும் நிச்சயம் ஏத்துப்பாங்க...’’ - நம்பிக்கை பகிர்பவர் இயக்கியிருக்கும் `ஃபர்ஸ்ட் ரெயின்’ என்ற குறும்படம் நிறைய விருதுகளை வென்றிருக்கிறது.

‘`என் கிளாஸ்மேட் அரசுவும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் பத்திரிகையாளரா இருக்கார். எங் களுக்கு மூணு வயசுல சுடர்க்கொடினு ஒரு மகள் இருக்கா.அடுத்து ஒரு படத் துக்கான ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக் கேன். பிடிச்ச துறையில பிடிச்ச வேலைகளைப் பார்த்துக்கிட்டு, பிடிச்ச வாழ்க்கையை வாழறது ஒரு வரம். அது எனக்கு அமைஞ்சிருக்கு’’

- அகமும் முகமும் மலர்கின்றன அழகிக்கு.