Published:Updated:

`அந்த ஸ்டைல்னால ரஜினி இழந்தது என்ன தெரியுமா?' - மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி

தாட்சாயணி
தே.அசோக்குமார்
மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி
மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி

ஒப்பனைத் துறையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அனுபவம் கொண்டவர், ஆர்.சுந்தரமூர்த்தி.

ஒப்பனைத் துறையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அனுபவம் கொண்டவர், ஆர்.சுந்தரமூர்த்தி. 72 வயதான இவர் ஒப்பனைத் துறைச் சார்ந்த தம்முடைய நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

கே.பாலச்சந்தருடன் பணியாற்றிய அனுபவம்?

``கே.பி சார் பயங்கர கோபக்காரர். நிறைய சிகரெட் பிடிப்பார். ஒரு சீன் எழுதணும்னா, கொஞ்சம் காபியும் நிறைய சிகரெட்டும் அவருக்கு வேணும். அவர் சிகரெட் பிடிச்சிக்கிட்டு எழுதிக்கிட்டே இருப்பார். ஜெமினி கணேசன் நடிச்ச `வெள்ளி விழா’ ஷூட்டிங் அப்போ ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, `டேய் என்னன்னு தெரியல. உடம்பெல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு’னு சொல்லிட்டு, பக்கத்துல இருந்த ஏ.சி ரூம்ல போய் உட்கார்ந்தார். அங்கேயும் அவருக்கு குப்புன்னு வியர்க்க ஆரம்பிச்சது. பயந்துப்போன நாங்க, உடனே அவரோட ஃபேமிலி டாக்டருக்குப் போன் பண்ணிட்டோம். டாக்டர் வந்து பார்த்துட்டு, `இது ஹார்ட் அட்டாக். உடனே ஹாஸ்பிட்டலுக்குப் போகணும்’னு சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போயிட்டார். டிரீட்மென்ட் எடுத்துக்கிட்ட பிறகுதான், அவருக்குச் சரியாச்சு. அங்கே இருந்தப்போவும் அவர் சும்மா இல்லை. ஹாஸ்பிட்டலேயே அனந்து சார்கூட டிஸ்கஸ் பண்ணி, ஒரு கதை எழுதினார். அதுதான், `அரங்கேற்றம்’ படம். கே.பி சார் படம்னா நான் செட்லேயே இருப்பேன். உரிமையா எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுப் பார்ப்பேன். `தெய்வம் தந்த வீடு’ பாட்டு எடுத்தப்போ டிராலிகூட தள்ளியிருக்கேன்.

இப்படி அவரோட ஆரம்பகால படங்கள்ல இருந்து கடைசி காலத்துல அவர் இயக்கிய டிவி சீரியல்கள் வரை நான் மேக்கப் போட்டேன். கமல் சார்கூட அவரோட ஆரம்பகாலத்துல `ராஜபார்வை', `சலங்கை ஒலி'னு பெரும்பாலான படங்களுக்கு நான் மேக்கப் போட்டிருக்கேன். கே.பி சார்கூட அடிக்கடி `இவனையும், கமலையும் அனுப்பி `தாடி வெச்சுக்கிட்டு வாங்கடா'னு சொன்னா, இவன் ஒட்டிக்கிட்டே இருப்பான்; அவனும் காட்டிக்கிட்டே இருப்பான். ஷூட்டிங் கிழிஞ்சுடும்’னு கிண்டல் பண்ணுவார். கே.பி. சார் மாதிரியே மணிரத்னம் சாருக்கும் என்னோட வேலை ரொம்பப் பிடிக்கும். அவரோட முதல் படமான `பகல் நிலவு’ படத்துல இருந்து `நாயக'னைத் தவிர்த்து, `ராவணன்’ வரை நான் மேக்கப் போட்டிருக்கேன். அவருக்கு எப்போவுமே ஹெவி மேக்கப் பிடிக்காது. இயல்பா இருக்கணும்னு எதிர்பார்ப்பார்."

'பாட்ஷா' படத்துக்கு ஆனந்த விகடன்ல விமர்சனம் எப்படி வந்தது தெரியுமா? எதிர்பார்க்காத மார்க்... எதிர்பார்த்த 'பன்ச்' வச்சிருக்காங்க அப்போ!

பாட்ஷா
பாட்ஷா

அந்த ரிவ்யூவை இப்போ படிக்கணும்னா APPAPPO இன்ஸ்டால் பண்ணுங்க! -> http://bit.ly/BaashaBhai

ரஜினியின் முதல் படத்தில் அவருக்கு மேக்கப் போட்டது நீங்கதானாமே... அவரோட வேலை பார்த்ததில் மறக்க முடியாத அனுபவம்?

மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி
மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி

"ரஜினியின் 100வது படமான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில், ராகவேந்திரா சுவாமிகள் எப்படி இருப்பாரோ, அதே தோற்றத்தை நகலெடுத்த மாதிரி இருக்கணும்னு மெனக்கெட்டு அந்த மேக்கப் போட்டோம். `பாட்ஷா’ படத்துல வர்ற டான் கேரக்டருக்கு ஒரு வித்தியாசமான லுக் வேணும்னு சுரேஷ் கிருஷ்ணா சார் சொன்னார். அப்போ எனக்கு பிபிசி பேஷன் ஷோவுல ஒருத்தர் ஃபிரேம் இல்லாத கண்ணாடி போட்டுக்கிட்டு நடந்து வந்தது ஞாபகம் வந்துச்சு. அதை டைரக்டர்கிட்ட சொல்லி, அதேமாதிரி ஒரு ஃப்ரேம் இல்லாத கண்ணாடியை ரெடி பண்ணி வரவெச்சோம். தாடியும், இந்தக் கண்ணாடியும் சேர... அந்த லுக்கே வேற மாதிரி இருந்தது. ரஜினி சாருக்கும் அது ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ரஜினி சாரோட தலைமுடி ஒரு தனி அழகு. உண்மையைச் சொல்லணும்னா, அவரோட முடி சீக்கிரம் கொட்டுனதுக்குக் காரணம் அவரேதான். தலையைக் கோதிவிட்டுக்காம அவரால இருக்கவே முடியாது. அதேமாதிரி, ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையிலேயும் முள் சீப்பை வெச்சு முடியைச் சீவிக்கிட்டே இருப்பார். இப்படி எந்த ஆர்ட்டிஸ்ட்டுமே பண்ணமாட்டாங்க. பின்னாடி அவர் பயன்படுத்துன ஹேர் டையும் அவருக்கு செட் ஆகல.’’

கிடைச்ச பாராட்டுகள்?

`` `படையப்பா’ படத்துக்கு மாநில விருது கிடைச்சது. கலைஞர் ஆட்சியில `கலைமாமணி’ விருது கிடைச்சது. இது எல்லாத்தையும் தாண்டி, பெரிய பெரிய ஜாம்பவான்களோட சேர்ந்து வேலை பார்த்ததையும், அவங்களோட மனசுல ஒரு நல்ல பெயரை சம்பாதிச்சதையும்தான் நான் பெரிய கௌரவமா நினைக்கிறேன்."

 “ரஜினி சொன்ன ரகசியம்!” - இயக்குநர் பி.வாசு

இப்போ என்னென்ன படங்கள்ல வேலை பார்க்குறீங்க?

"அரவிந்த் சாமி ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நடிச்ச ஒரு காபி விளம்பரத்துல இருந்து இப்போவரைக்கும் அவருக்கு நான்தான் மேக்கப் போட்டுக்கிட்டிருக்கேன். இப்போ அவர் நடிக்கிற `புலனாய்வு’ படத்துல அவருக்கு நான்தான் மேக்கப் மேன்."

அடுத்த கட்டுரைக்கு