Published:Updated:

`` `சூரரைப் போற்று' படத்தோட கதையை நாங்க பாட்டுலயே சொல்லிடுவோம்!''- ராஜி, செந்தில்கணேஷ்

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

”சூப்பர் சிங்கர் முடிஞ்ச தறுவாயில எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ‘மண்ணுருண்டையோட பாடலாசிரியர் ஏகாதேசி அய்யா எனக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொன்னார்."

`` `சூரரைப் போற்று' படத்தோட கதையை நாங்க பாட்டுலயே சொல்லிடுவோம்!''- ராஜி, செந்தில்கணேஷ்

”சூப்பர் சிங்கர் முடிஞ்ச தறுவாயில எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ‘மண்ணுருண்டையோட பாடலாசிரியர் ஏகாதேசி அய்யா எனக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொன்னார்."

Published:Updated:
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

“எங்களை மாதிரியான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மார்ச் மாதம் தொடங்கிட்டாலே பயங்கர குஷி ஆகிடும். குறிப்பா, மே மாசம்லாம் கச்சேரி களைகட்டும். ஆனா, இந்த வருஷம் அதெல்லாம் அப்படியே தலைகீழா மாறிடுச்சு. இந்த மாசம் சிங்கப்பூர்ல ஒரு நிகழ்ச்சிக்கு போறதா இருந்தது. இந்த மாதிரி பல நிகழ்ச்சிகள் அப்படியே கொரோனாவால போயாச்சு. உள்ளூர்ல இருக்கோமா வெளியூர்ல இருக்கோமான்னு தெரியாம ஒரு மாசமா ஒரே இடத்துலயே இருக்கோம். ஒரு பக்கம் இப்படின்னா, மறுபக்கம் குடும்பமா ரொம்ப நாளைக்கு பிறகு ஒண்ணா இருக்கோம்.

 செந்தில் கணேஷ் -  ராஜலட்சுமி!
செந்தில் கணேஷ் -  ராஜலட்சுமி!

சும்மா நாள்ல நானும் அவரும் ஒண்ணாவே சுத்திட்டு இருப்போம். இப்போ, குழந்தைகளோட, அம்மா அப்பா, மாமனார் மாமியார், நாத்தனார்னு எல்லார்கூடவும் இப்போ கிராமத்துல நேரம் செலவிடறோம். சந்தோஷமா இருக்கு. அதுமட்டுமில்லாம எங்க யூடியூப் சேனல்ல மக்களிசைப் பாடல்களைப் பாடி வீடியோ போட்டுட்டு இருக்கோம்” என கொரோனா சூழலில் தங்களுக்கான சவால்கள், சந்தோஷங்களை பேசத் தொடங்குகிறார்கள் ராஜி- செந்தில் கணேஷ் தம்பதி.

லாக்டெளன்ல எந்த விஷயத்தை மிஸ் பண்றீங்க?

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

”மக்களோட மக்களா இசை நிகழ்ச்சிகள் பண்ணதைத்தான், இப்போ வெளிய போய் அந்த மாதிரி எதுவும் பண்ண முடியாம, இணையதளம் வழியாவே மக்கள்கிட்ட எங்க பாட்டு போய் சேருது. அந்த விஷயத்தை ரொம்ப மிஸ் பண்றோம். எனக்கு இப்போ ஓய்வு நேரம் நிறைய கிடைச்சுருக்கு. ஆனா, பக்கத்து ஊர்ல இருக்கிற அம்மா வீட்டுக்குப் போக முடியலை. அப்படியே போனாலும், ஒரு மணி நேரத்துல இவரு கூட்டிட்டு வந்துடறாரு” என ராஜலட்சுமி கணவரை பார்த்து முறைக்க, “ஏங்க! ஒரு மணி நேரம் அம்மா வீட்டுல இருந்துருக்காங்க. அது போதாதா?” என சிரிக்கிறார்.

“இதுவரைக்கும் நாங்க ஒருத்தரைப் பிரிஞ்சு ஒருத்தர் கச்சேரி பண்ணினதே இல்லை. சேர்ந்தேதான் இருப்போம். இப்போ, வீட்டு வேலைகள் செய்யறது, குழந்தைகளைப் பார்த்துக்கறதுன்னு நேரம் சரியா இருக்கு. அதனால, இவரை கண்டுக்கறதே இல்லைன்னு கோபப்படறார். இவர், இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் சொன்னதே இல்லை. எனக்கு கேட்க புதுசா இருக்கு” என ராஜி சொல்ல, சிரிக்கிறார் செந்தில்.

“கச்சேரிகள் ஊர்ல, வெளிநாடுகள்ல இருந்தாலும் மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் சென்னைக்கு போயிட்டு வந்துருவோம். வேலை இருக்கோ இல்லையோ அந்தக் கடைவீதிகள்ள சும்மாவாச்சும் ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம். ஆனா, இப்போ எங்களை வாழ வச்ச ஊரை பார்க்க முடியாம இருக்கு.”

ரெண்டு பேருல யாரு ரொம்ப ரொமான்டிக்?

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி

”நான்தான்” என முதலில் பதில் வருகிறது செந்திலிடம். “அப்போல்லாம் நம்ம வாத்தியார் எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரை மாதிரி இருக்கணும்னு நினைப்பேன். அதான்” என மீசையை முறுக்கி ராஜியைப் பார்க்க, “வெளிய வீராப்பா இருந்தாலும் உள்ள வெள்ளந்தியாம்” என சிரிக்கிறார் ராஜி. “ஆனாலும், அடிக்கடி கோபப்படுவார். அதுமட்டுமில்லாம, காசை தண்ணியா செலவு பண்ணுவார். ஒரு முறை கலைவாணர் அய்யாவும் மதுரம் அம்மாவும் வீட்டு வாசல்ல உட்கார்ந்து இருந்தாங்களாம்.

அப்போ, ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பொண்ணு அவங்க கிட்ட வந்து, ‘அய்யா உதவி பண்ணுங்க’ன்னு கேட்க, கலைவாணர் கையில இருந்த 10 ரூபாயைக் குடுத்தாராம். அதைப் பார்த்த மதுரம் அம்மா, ’ஏங்க அந்தப் பொண்ணு நடிக்குது, அதுக்கு போய் காசு குடுக்கறீங்க?’ன்னு கேட்க, அதுக்கு கலைவாணர் அய்யா, ‘நாமளும்தான் நடிக்கிறோம். மக்கள் நமக்கு காசு குடுக்கலையா? அந்த பொண்ணு நடிக்குதுன்னு தெரியும். நல்லா நடிச்சதனாலதான் காசு குடுத்தேன்’னு சொன்னாராம். அந்தமாதிரி, இவரு யாராவது ‘கஷ்டப்படுறேன்’னு நடிச்சா போதும் உடனே தாராள பிரபு, கையில இருக்கிற காசையெல்லாம் எடுத்துக் கொடுத்துருவாரு. ‘நாம செய்யற தர்மம் சரியானவங்களுக்கு போய் சேரணும். எல்லாருக்கும் கொடுத்தா அதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்’னு பலமுறை அவர்கிட்ட சொல்லிட்டேன். ஆனாலும், மாத்திக்கிற மாதிரி இல்லை இவரு” என மீண்டும் ஒருமுறை ஸ்ட்ரிக்ட் வாத்தி ஆகிறார் ராஜி.

முதல் கிஃப்ட்?

ராஜலட்சுமி - செந்தில்கணேஷ்
ராஜலட்சுமி - செந்தில்கணேஷ்

”நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்த சமயத்துல, இவரு எனக்கு ரெண்டு பறவைகள் சேர்ந்திருக்கிற மாதிரி ஒரு கிஃப்ட் குடுத்தாரு. அப்பறம், இப்ப வரைக்கும் எதுவும் இல்லை.”

“எது... இல்லையா? கல்யாணம் ஆனதும் வந்த உன்னோட முதல் பிறந்தநாளுக்கு ஒரு புடவை வாங்கிக் குடுத்தேன். ஞாபகம் இல்லையா? போன வருஷம் ராஜியோட பிறந்தநாளுக்கு மலேசியால இருந்தோம். அங்க இருக்கிற தமிழர்களோட சேர்ந்து கொண்டாடினோம். இந்த வருஷம், சிங்கப்பூர்ல கச்சேரி முடிச்சுட்டு அங்கயே கொண்டாட ஒரு ப்ளான் வச்சிருந்தோம். ஆனா, அது நடக்காம போயிருச்சு” என செந்தில் வருத்தப்பட, “அதனால என்ன? அதைவிட பெரிய பாக்கியமா, இந்த வருஷம் என் குழந்தைகளோட கொண்டாடுறேன். அதுவே பெரிய சந்தோஷம்” என நெகிழ்ந்தவரிடம், சமீபத்துல ரெண்டு பேரும் பொறாமைப்பட்ட ஒரு விஷயம் என்ன என்றால், ராஜியிடம் இருந்து முந்திக் கொண்டு பதில் வருகிறது.

“சமீபத்துல ‘வேள்பாரி’ புத்தகம் படிச்சோம். பாரியைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டதுக்குப் பிறகு, இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமாங்கிற கேள்வியும் பொறமையும் இருந்துட்டே இருக்கு. எங்க ஊர் புதுக்கோட்டைக்கு பக்கத்துலதான் பாரியோட பறம்பு மலை இருக்கு. ஊரைத் தாண்டும்போதுலாம் அங்க போகணும்னு தோணும். இதுவரைக்கும் எந்தவொரு படமோ, புத்தகமோ தராத பிரமிப்பை இந்த நாவல் எங்களுக்கு தந்துருக்கு. இந்த நாவலோட ஆசிரியர் சு.வெங்கடேசன் அய்யாவை நேர்ல பார்க்கும்போது, இன்னும் பாரியைத் பத்தி நிறைய கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஆவலா இருக்கு. குறிப்பா, கடைசி அத்தியாயம் படிக்கும்போதெல்லாம் ‘கடவுளே, பாரிக்கு எதுவும் ஆகக்கூடாது’னு வேண்டிட்டு இருந்தோம். அந்த அளவுக்கு பாரியும் பறம்பும் எங்களுக்கு பிடிச்சுப் போச்சு”.

’சூரரைப்போற்று’ மண்ணுருண்டை பாடலுக்கான வாய்ப்பு வந்த கதையைச் சொல்லுங்க?

”சூப்பர் சிங்கர் முடிஞ்ச தறுவாயில் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ‘மண்ணுருண்டையோட பாடலாசிரியர் ஏகாதேசி அய்யா எனக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஜி.வி பிரகாஷ் இசையில பாடப்போறோம்னு கேட்டதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆகிடுச்சு. சுதா மேமுடைய ஆபீஸில் இருந்து எனக்கு கால் வந்ததும் ஜி.வி-யை போய் பார்த்தேன். பாடினதை ரொம்ப ரசிச்சுக் கேட்டு என்கரேஜ் பண்ணினார். கிரிக்கெட் விளையாடிட்டு வந்த விடலைப்பையன் மாதிரியே பயங்கர எனர்ஜியாவும் இருப்பார். ‘சூரரைப்போற்று’ படத்தோட ஓப்பனிங் சாங் இதுங்கிறதால, மொத்தக் கதையும் எதை நோக்கி இருக்குங்கிற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களுக்கு மாஸா இந்த பாடல் கொடுத்துரும்.”