Published:Updated:

அப்போ இப்போ 3: "அஜித் சார் மச்சின்னு கூப்பிடுவார்; ஆனா அமர்க்களத்துக்கு அப்புறம்..."- தேவ் ஆனந்த்

தேவ் ஆனந்த்

பலரும் இவன் கதை முடிஞ்சதுன்னு சொன்னாங்க.. ஆனா, என்னால முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்தேன்!

அப்போ இப்போ 3: "அஜித் சார் மச்சின்னு கூப்பிடுவார்; ஆனா அமர்க்களத்துக்கு அப்புறம்..."- தேவ் ஆனந்த்

பலரும் இவன் கதை முடிஞ்சதுன்னு சொன்னாங்க.. ஆனா, என்னால முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்தேன்!

Published:Updated:
தேவ் ஆனந்த்

` பலரும் இவன் கதை முடிஞ்சதுன்னு சொன்னாங்க.. ஆனா, என்னால முடியும் என்கிற தன்னம்பிக்கையோடு எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்தேன்! ' என்கிறார் தேவ் ஆனந்த். 90களில் இருந்து சின்னத்திரையில் பல தொடர்களில் இவரை பார்த்திருக்கிறோம். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `ரோஜா' தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `தென்றல் வந்து என்னைத் தொடும்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். `அப்போ இப்போ' தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

தேவ் ஆனந்த்
தேவ் ஆனந்த்

``சின்ன வயசிலேயே நாம செத்தப் பிறகு நம்மைப் பார்க்க மக்கள் கூட்டம் வரணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு நாம என்ன பண்ணனும்னு யோசிக்கும்போது ஒன்று, அரசியல்வாதி ஆகணும். இல்லைன்னா, சினிமாவுக்கு போகணும்னு முடிவெடுத்தேன். நான் நார்த் இந்தியனாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான்! எங்கக் குடும்பத்தில் யாரும் மீடியா துறையைச் சேர்ந்தவங்க இல்லை. என் அப்பாவுக்கு சினிமாவில் பலரைத் தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கலைஞர்னு எல்லா பெரிய தலைவர்களும் என் அப்பாவுக்கு நல்ல பரிச்சயமானவங்க. சரி சினிமாவில் டிரை பண்ணிப் பார்ப்போம்னு தான் அந்தத் துறையைத் தேர்வு பண்ணினேன். என் அப்பா ரெண்டு வருஷம் எனக்கு டைம் கொடுத்தார். அதுக்குள்ள மீடியாவில் நடிக்க ஆரம்பிச்சிடணும். இல்லைன்னா பேசாம அப்பாவுடைய பிசினஸை கவனிச்சிக்கணும்னு சொல்லிட்டார். சரி முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு நானே டிரை பண்ண ஆரம்பிச்சேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்குக் கிடைச்ச சின்ன, சின்ன கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிச்சிட்டு இருந்தேன். `தாஜ் மஹால்' படத்துக்காக ஆடிஷனுக்குப் போனேன். என் பெயர் சொல்லவும் பாரதிராஜா சார் வடநாட்டு பையனான்னு கேட்டார். ஆமான்னு சொல்லவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. தொடர்ந்து நான்கு, ஐந்து முறை அதே பட ஆடிஷனுக்காகப் போனேன். என் ஃப்ரெண்ட் மூலமா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தருக்கு பதிலா நான் அந்தப் படத்தில் நடிக்கப் போனேன். ஷூட்டிங் ஸ்பார்ட்டில் என்னைப் பார்த்துட்டு நான் தான் உன்னை அங்கேயே வேண்டாம்னு சொல்லிட்டேனேன்னு சொன்னார். சார், உங்கப் படத்தில் நடிக்கணும்னு விரும்புறேன்னு சொன்னேன். அதுக்கப்புறமாகத்தான் அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமில்லாம, நான் சொன்னேன்னு எனக்காக கேமரா ஆங்கிள் எல்லாம் மாற்ற பாரதிராஜா சார் சம்மதம் சொன்னாரு. அந்தப் படம் நான் விரும்பின மாதிரியே எனக்குன்னு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்துச்சு.

தேவ் ஆனந்த்
தேவ் ஆனந்த்

அதுக்குப் பிறகு, அஜித் சாருடன் `உல்லாசம்' படத்தில் நடிச்சேன். அந்தப் படம் மூலமா அஜித்தின் நட்பு கிடைச்சது. `மச்சி'ன்னு தான் அஜித் என்னை கூப்பிடுவார். அவரோட ஆபிஸூக்கெல்லாம் போய் மணிக்கணக்கா பேசியிருக்கேன். `அமர்க்களம்' படத்துக்குப் பிறகு என்ன ஆச்சுன்னு தெரியல.. அப்படியே கான்டாக்ட் இல்லாம ஆயிடுச்சு!" என்றவரிடம், சின்னத்திரை பயணம் குறித்துக் கேட்டோம்.

``சீரியலில் தொடர்ந்து கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். `சித்தி' சீரியல் எனக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொடுத்துச்சு. இன்னைக்கு வரைக்குமே பலர் என்னை `அரிசிமூட்டை'ன்னு தான் கூப்பிடுறாங்க. கதாநாயகனா ஒரு பத்து சீரியலில் தான் நடிச்சிருப்பேன். நெகட்டிவ் கதாபாத்திரம் தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, அதுல மட்டுமே கவனம் செலுத்தினேன். அதுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைச்சது. வெளியில் எங்கேயாவது பார்த்தாங்கன்னா கண்டபடி திட்டுவாங்க. அதுதான் என் வெற்றி! நாங்க ஒரு ஐந்து பேர் ஃப்ரெண்ட்ஸ் கேங் இருக்கோம். ஒரு கேரக்டர் எனக்கு வருது அதை என்னால பண்ண முடியலைன்னா அந்த ஐந்து பேருக்குள்ள மாத்திக்குவோம். எங்க ஐந்து பேரைத் தாண்டி அந்தக் கேரக்டர் வெளியில யாருக்கும் போகாது. அப்படித்தான் ரொம்ப வருஷமா நாங்க பயணிச்சிட்டு இருந்தோம்!" என்றவரிடம் இடையில் அவர் மீடியாவில் இருந்து விலகியிருந்தது குறித்துக் கேட்டோம்.

தேவ் ஆனந்த்
தேவ் ஆனந்த்

``ஒரு விஷயம் நம்ம கையில் இருக்கும்போது அதோட அருமை நமக்குத் தெரியாது. இல்லாதப்ப தான் அது புரியும்னு சொல்லுவாங்க. அப்படித்தான் எனக்கும் ஆச்சு. ஒரு மூணு வருஷம் எதுவுமே இல்லாம வீட்டுல சும்மா இருந்தேன். 2,3 தடவை இவன் காலின்னு சொன்னாங்க. ஆனா, என்னுடைய குடும்பத்தினரால் மட்டுமே எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்தேன். `பந்தம்' சீரியலில் தான் எனக்குன்னு ஒரு கம்பேக் கிடைச்சது. தொடர்ந்து எனக்கு கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டேன். `ரோஜா' சீரியலில் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன். பொண்டாட்டிக்கு பயப்படுற மாதிரியான கதாபாத்திரம். அந்த `பாலு' என்கிற கேரக்டர் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்திருக்கு. தொடர்ந்து படங்கள், சீரியல்னு மக்களை என்டர்டெயின் பண்ண விரும்புறேன்!" என்றார்.

படங்கள் - இ. பிரவின் குமார்