Published:Updated:

சீரியல் நடிகர் இப்போது சீரியஸ் சிங்கர்... யுவன் இசையில் பாடகர் அனுபவம் சொல்லும் ஷ்யாம்!

ஷ்யாம்

'ஆனந்த கண்ணன்', 'கோலங்கள்', 'தென்றல்' என மெகா சீரியல்களில் நடித்த ஷ்யாம், தற்போது பாடகர் அவதாரம் எடுத்திருக்கிறார். யுவன் இசையில் பாடகரான அனுபவம் சொல்கிறார்.

சீரியல் நடிகர் இப்போது சீரியஸ் சிங்கர்... யுவன் இசையில் பாடகர் அனுபவம் சொல்லும் ஷ்யாம்!

'ஆனந்த கண்ணன்', 'கோலங்கள்', 'தென்றல்' என மெகா சீரியல்களில் நடித்த ஷ்யாம், தற்போது பாடகர் அவதாரம் எடுத்திருக்கிறார். யுவன் இசையில் பாடகரான அனுபவம் சொல்கிறார்.

Published:Updated:
ஷ்யாம்

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம், 'ஹீரோ'. படத்தின் இசையமைப்பாளர், யுவன் ஷங்கர் ராஜா. டிசம்பர் இறுதியில் படம் ரிலீஸாக இருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த சிங்கிளைப் பாடியிருப்பவர், டி.வி நடிகர் ஷ்யாம். நடிகர் எப்போது பாடகரானார் என்கிற ஆர்வத்தில் உடனடியாக அவரிடம் பேசினோம்.

''ஒரு நிகழ்ச்சிக்காக திருவள்ளூர் போயிருந்தேன். அப்போ, பின்னணி பாடகர் செந்தில்தாஸ் போன் பன்ணி, 'ஒரு பாட்டு பாடணும்'னு சொன்னார். பாட்டுதானே பாடிடலாம்னு சொல்லிட்டு வேலையைக் கவனிச்சேன். 'உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க, யுவன் இசையில் பாடணும்'னு அவர் சொன்னவுடனே ஆச்சர்யமாச்சு. ஏன்னா, இதுவரைக்கும் சினிமால நான் பாடினதே கிடையாது. முதல் பாட்டே யுவன் இசையில் பாட கூப்பிடுறாங்கன்னு சந்தோஷம். அன்னைக்கு நைட் முழுக்க தூக்கமே வரல. அடுத்த நாள் காலையில், என்ன நடக்கப்போகுதுனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலையில், யுவன் சார் ஸ்டூடியோ போனேன். பாடுறதுக்கு வரிகள் கொடுத்தாங்க. ஹை பிட்ச் பாட்டு. ரெக்கார்டிங்ல சவுண்டு இன்ஜினீயர் இருந்தார். அரை நாள்ல பாட்டை பாடி முடிச்சேன். அப்போ, அந்த இடத்துல யுவன் சார் இருந்தாரா இல்லையான்னுகூட தெரியல. ஏதோ கனவு மாதிரியிருந்தது. பாடி முடிச்சிட்டு யார்கிட்டயும் சொல்லல. வீட்டுல அம்மாவுக்கும் மனைவிக்கும் மட்டும்தான் தெரியும். ஏன்னா, சிங்கிள் ட்ராக் ரிலீஸாகுற வரைக்கும் எதுவும் நடக்கலாம்னு கொஞ்சம் பயம். அப்புறம், யுவன் ஸ்டூடியோவுல இருந்து போன் வந்தது. பாட்டு கரெக்‌ஷனுக்காகப் போனேன்.

அப்போ, யுவன் சார் என்னைப் பார்த்து ஹாய் சொல்லியிருக்கார். அது அவர்தான்னு எனக்குத் தெரியல. நானும் வெறும் ஹாய் சொல்லிட்டு ஸ்டூடியோக்குள்ள போயிட்டேன். அப்புறம், அவர் கரெக்‌ஷன் சொல்றப்போ பார்க்குறேன்... ஹாய் சொன்னது யுவன். 'அய்யோ சாரி சார் சரியா கவனிக்கல'னு சொல்லி அப்புறம் அவர்கிட்ட அறிமுகம் ஆனேன். 'ரொம்ப நல்ல பாடியிருக்கீங்க பாஸ்'னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. பாடுறப்போ கம்ஃபோர்ட் ஸோன்ல வெச்சிக்கிட்டார். சிவகார்த்திகேயன் சார் பாட்டு கேட்டுட்டு இன்னும் கமென்ட் சொல்லல. அவரோட கமென்ட்ஸுக்காக வெயிட்டிங்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமால பின்னணிப் பாடகரா வரணும்னு நினைச்சேன். ஆனா, அது நடக்க இத்தனை வருஷம் ஆகியிருக்கு. காலேஜ் படிச்ச காலத்துல இருந்தே மேடைகள்ல பாடுவேன். கானா பாட்டுதான் எப்பவும் பாடிட்டு இருப்பேன். கருணாஸ் சாரோட மியூசிக் பேண்ட்ல கொஞ்சநாள் கானா பாடிட்டிருந்தேன். அதுக்குப் பிறகு இயக்குநர் பத்ரி நாராயணன் சார்கிட்ட கிரேஸ் கருணாஸ் என்னை அறிமுகப்படுத்துனாங்க. நிறைய நாடகங்கள்ல தொடர்ந்து நடிச்சேன். இருந்தாலும் சினிமால பாட முடியலங்கிற வருத்தம் இருந்துக்கிட்டே இருந்தது.

நான் கண்ட கனவு இப்போதான் நிறைவேறியிருக்கு. திருமணம் முடிஞ்சு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. ரெண்டு பேருமே நடிச்சிட்டு வர்றாங்க. சின்னப் பொண்ணு ரக்‌ஷா சிவகார்த்திகேயன் சார் நடிச்ச 'ரெமோ' படத்துல நடிச்சிருப்பா. அவளை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டு போறப்போ, சிவா எனக்கு பழக்கமானார். இப்போ, அவரோட படத்துக்கு சிங்கிள் டிராக் பாடியிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்று படபடவெனப் பேசி முடித்தார் ஷ்யாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism