Published:Updated:

``அந்த நொடியிலதான் சநீஷை நான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு நினைக்கிறேன்!'' - `நாதஸ்வரம்' ஸ்ரித்திகா!

serial actress srithika
serial actress srithika

``ரெண்டு நாள் வெளியே லன்ச் போனோம். நிறைய பேசினோம். போன்ல பேசினதைவிட ஒருத்தரை ஒருத்தர் நேர்ல பார்த்துப் பேசினப்போ இன்னும் கம்ஃபர்டபிளா உணர்ந்தோம்.''

`நாதஸ்வரம்' சீரியல் புகழ் நடிகை ஸ்ரித்திகாவுக்குச் சென்ற மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. எல்லா அரேஞ்டு மேரேஜ்களிலும் காதலை முதன்முதலாக உணர்ந்த தருணம் ஒன்று இருக்கும்.

கணவர் சநீஷிடம் அப்படி முதன்முதலாகக் காதலை உணர்ந்த தருணம் பற்றி ஸ் ரீத்திகாவிடம் கேட்டோம். கொஞ்சம் வெட்கம், நிறைய புன்னகையுடன் அந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

serial actress srithika and her husband
serial actress srithika and her husband

``சநீஷ், என் அக்கா கணவரின் ஃப்ரெண்ட். சநீஷுக்கும் எனக்கும் மேரேஜ் பண்ணலாம்னு வீட்ல பேச்சு ஆரம்பிச்சதும், `ரெண்டு பேரும் பேசிப் பாருங்க. பிடிச்சிருந்தா அடுத்துப் பேசலாம்'னு சொன்னாங்க. நாங்களும் பேச ஆரம்பிச்சோம். ரெண்டாவது முறை அவர்கிட்ட பேசும்போதே மனசுக்குள்ள கம்ஃபர்டபிளா உணர்ந்தேன். அவரும் அப்படித்தான் ஃபீல் பண்ணியிருப்பார்போல. தொடர்ந்து பேசிக்க ஆரம்பிச்சோம். உங்க ரெண்டு பேருக்கும் மனசுக்குப் பிடிச்சிருந்ததுனா கல்யாண வேலைகளை ஆரம்பிப்போம்னு வீட்ல சொன்னாங்க.

`முத்தத்தில் எண்ணிக்கை பார்க்காதே' காதலர் தினக் கவிதைகள்! #ValentineDay #VikatanPhotoCards

அந்த நேரத்துல எனக்கு துபாய்ல ஒரு ஷூட்டிங் இருந்துச்சு. சநீஷ் துபாய்லதான் இருக்கார். ஸோ, அவரையும் மீட் பண்ணேன். ரெண்டு நாள் வெளியே லன்ச் போனோம். நிறைய பேசினோம். போன்ல பேசினதைவிட ஒருத்தரை ஒருத்தர் நேர்ல பார்த்துப் பேசினப்போ இன்னும் கம்ஃபர்டபிளா உணர்ந்தோம். அவருக்கு என் ஃபீல்டை பத்தி எதுவுமே தெரியாது. அதனால, என்னோட ஜாப் நேச்சரைப் பத்தி அவருக்கு விளக்கமா சொன்னேன். அவரும் அவரோட வேலையைப் பத்தி சொன்னார்.

serial actress srithika and her husband
serial actress srithika and her husband
பெருங்காதலின் தூது, அன்பின் மன்றாட்டு - இரு கடிதங்களின் கதை! #ValentineDay

ரொமான்ஸெல்லாம் எதுவுமில்லை. புதுசா அறிமுகமானவங்க எப்படி பேசிப்பாங்களோ அப்படித்தான் பேசிட்டு இருந்தோம். அந்த நேரத்துலதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. நான் ரொம்ப வளவளன்னு பேசமாட்டேன். ஃப்ரெண்ட்ஸோட வெளியே அவுட்டிங்கெல்லாம் பெருசா கிடையாது. அவரும் என்னை மாதிரியே பார்ட்டி கோயிங் கேரக்டர் கிடையாதுன்னு தெரிஞ்சப்போ அப்பாடான்னு இருந்துச்சு. ஐ திங்க் அந்த நேரத்துலதான் சநீஷ் மேல லவ் ஸ்டார்ட் ஆச்சுன்னு நினைக்கிறேன்" என்றார்

காதல் தோன்றுவது ஒரு மேஜிக் நொடி. அதுக்கு தெய்விகக் காரணமெல்லாம் தேவைப்படாது. அந்தக் காதலை வாழ்க்கை முழுக்க எடுத்துட்டுப் போறதுதான் முக்கியம்!''

பின் செல்ல