Published:Updated:

`என் நண்பர்' அஜித்; `அற்புதம்' விஜய்... தமிழ்ப் படம்! - ஷாருக் கான் ஷேரிங்ஸ்

`ஜீரோ' படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் ஷாருக் அவ்வப்போது ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

இந்திய வெள்ளித்திரையின் தவிர்க்க முடியாத ஸ்டார் ஷாருக் கான். பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கானுக்கும் தமிழ் சினிமா வட்டாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கமல்ஹாசனின் `ஹே ராம்' படத்தில் சிறிய ரோலில் நடித்த அதே ஷாருக் கானின் மற்ற படங்களில் தமிழ் ஹீரோக்கள் ரஜினி, அஜித் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படி, தமிழ் சினிமாவுக்கும் ஷாருக் கானுக்கும் நிறையவே பந்தம் உள்ளது. `ஜீரோ' படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் ஷாருக் அவ்வப்போது ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Ajith
Ajith

#AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து வரும் அவர் இன்றும் அதுபோல் உரையாடினார். அப்போது தமிழ் ரசிகர்கள் சிலர் ஷாருக்கிடம் அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து கேட்க, அதற்கு சுவாரஸ்யமாகப் பதில் கொடுத்துள்ளார். தனுஷ் ரசிகர் ஒருவர் தனுஷ் குறித்து ஒரு வார்த்தை கேட்க, ``அவரை நான் நேசிக்கிறேன்'' எனக் கூற அதைத் தொடர்ந்து அஜித் குறித்து கேட்க, `என் நண்பர்' என்றும் விஜய் குறித்து, `அற்புதம்' என்றும் பேசியுள்ளார். இதேபோல் இன்னும் ஒரு ரசிகர் நேரடி தமிழ் படத்தில் நீங்கள் நடிப்பீர்களா எனக் கேட்க, ``நிச்சயமாக நடிப்பேன். ஏனென்றால் தமிழ் மொழி எனக்கு நன்றாகப் பரிச்சயமாகிவிட்டது" எனப் பதில் கொடுத்துள்ளார்.

`கான்'களை விஞ்சும் `மான்’ - யார் இந்த ஆயுஷ்மான்?