Published:Updated:

``தேவதைக் கதைகளை இப்போது நம்புகிறேன்!''- மனைவிக்குத் திருமண வாழ்த்து சொன்ன ஷாரூக்

ஷாரூக்கின் இந்தச் சமூக வலைதளப்பதிவைப் படித்தவர்களெல்லாம், `நிஜத்தில் நல்லதொரு காதலனாக, கணவனாக இருப்பதால்தான், சினிமாவிலும் அவருடைய காதல் படங்கள் தோல்வியடைவதில்லை' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியுடன் ஷாரூக்
மனைவியுடன் ஷாரூக்

பாலிவுட்டின் `ரொமான்ஸ் கிங்' ஷாரூக்கானின் இன்ஸ்டா பதிவு ஒன்று பரபரவென டிரெண்ட் ஆகி வருகிறது. ஷாரூக் - கெளரி தம்பதியருக்கு இன்று 28-வது திருமண நாள். இதற்காக, தன் மனைவி கெளரி கானுக்கு தன் இன்ஸ்டாவில் பேரன்பு சொட்டும் வார்த்தைகளால் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஷாரூக்.

``எனக்கென்னவோ, நம் திருமணம் நேற்று நடந்ததுபோலத்தான் இருக்கிறது.

Shahrukh khan family
Shahrukh khan family

அதற்குள் நம் உறவுக்குக் கிட்டத்தட்ட 30 வயதாகப் போகிறது. நமக்கு மூன்று அருமையான குழந்தைகள் இருக்கிறார்கள். நானும் எத்தனையோ தேவதைக் கதைகளைச் சொல்லியிருக்கிறேன். அந்தக் கதைகளை நான் இப்போது நம்புகிறேன். ஏனென்றால், அப்படியோர் அழகான வாழ்க்கை எனக்கும் அமைந்திருக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஷாரூக்கின் இந்தச் சமூக வலைதளப் பதிவைப் படித்தவர்களெல்லாம், `ஷாரூக் நிஜத்தில் நல்லதொரு காதலனாக, கணவனாக இருப்பதால்தான், சினிமாவிலும் அவருடைய காதல் படங்கள் தோல்வியடைவதில்லை' என்றும், 'உங்கள் மனைவி மீதான மரியாதையை எவ்வளவு அழகான வெளிப்படையான வார்த்தைகளால் சொல்லியிருக்கிறீர்கள். மனைவியின் பெருமை பற்றிய உண்மையைச் சொல்வதற்கு நீங்கள் பயப்படவேயில்லை. நீங்கள் ஜென்டில்மேன் ஷாரூக்' என்றும் திருமண வாழ்த்துகளை பொழிந்து வருகிறார்கள்.

ஷாரூக்கும் கெளரியும் காதலித்துக் கரம் பிடித்தவர்கள். 6 வருடங்கள் காதலில் இருந்தபோதுதான் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தது, பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்தது என ஷாரூக்கின் லட்சியத்துக்கான அத்தனை போராட்டங்களும் நிகழ்ந்தன. 1991-ல் இவர்கள் திருமணம் நடந்தபிறகுதான் ஷாரூக்கின் முதல் படமான 'தீவானா' வெளியானது.

படம் ஹிட்டடிக்கவே, ஷாரூக்கை பாலிவுட் ரொமான்ஸ் கிங் என்று கொண்டாட ஆரம்பித்தது. கெளரி கானும் ஃபிலிம் புரொடியூசர், இன்ட்ரீயர் டிசைனர், காஸ்ட்யூம் டிசைனர், ஃபேஷன் டிசைனர் எனத் தன்னுடைய பிசினஸில் பயங்கர பிஸி.

Shahrukh - Gauri
Shahrukh - Gauri

'ஷாரூக் நல்ல கணவர், நல்ல அப்பா. அவர் குடும்பத்துக்காக யோசிப்பவர். என் பிசினஸில் எனக்கு உதவி செய்பவர். எல்லா மனிதர்களையும்போல அவரிடமும் சில குறைகள் இருந்தாலும், அவருடைய மனைவியாக அவரைப்பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே நான் வெளியில் சொல்லுவேன். நோ நெகட்டிவ் அபவுட் ஷாரூக்'' என்றிருக்கிறார்.

எவ்வளவு நேர்மையான வார்த்தைகள்!