Published:Updated:

`என்னை அசிங்கமானவனாக உணர்ந்தேன்; நடிகனாவேன் என்று நினைக்கவில்லை!’ - மனம் திறந்த ஷாருக்கான்

``அவர்கள் இருவரும் என்னிடம் பொய் சொன்னார்கள். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. வழக்கம்போலத்தான் இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. காரணம் மக்கள் என் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில் புகழ்பெற்ற பி.வி.ஆர் அனுபம் திரையரங்கம் புதுப்பிக்கும் பணிக்காகத் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்தியாவின் முதல் மல்டிபிளக்ஸ் என்ற பெருமை இந்தத் திரையரங்கத்துக்கு உண்டு. இதில் கலந்துகொண்ட ஷாருக்கான் தன் ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 1992-ம் ஆண்டு அஜிஸ் மிர்ஸா இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த படம் `ராஜூ பேன் கயா ஜென்டில்மேன்’ (Raju Ban Gaya Gentleman). படம் திரைக்கு வருவதற்கு முன்னதாக, படத்தின் காட்சிகள் மும்பையில் உள்ள ஆர்.கே.ஸ்டூடியோவில் ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான்

அப்போது இதை நினைவுகூர்ந்த ஷாருக், ``நான் நடித்த படத்தின் காட்சிகளை முதன்முறையாகத் திரையில் ரஷ் வீடியோக்களில் பார்த்தேன். நீங்கள் ஒரு காட்சியில் நடித்து பின், அதிலுள்ள நெகட்டிவ் மட்டும் உங்களுக்குத் தெரியும். அப்போது, உங்களுக்குள் முழுமையான எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும். நான் என்னை அசிங்கமாக இருப்பவனாக உணர்ந்தேன். என்னுடைய தலைமுடி மோசமானதாக இருந்தது. நானா படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதற்றமடைந்தேன்.

படத்தில் நான் நடித்த காட்சிகளைப் பார்த்தும், `என்னால் நடிகனாக முடியாது’ என்று தோன்றியது. அந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல 25 சதவிகித டிக்கெட் ஆஃபர் எங்களுக்குக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி ஏர்போர்ட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போது, படத்தின் இயக்குநர் அஜிஸ் மிர்சா என்னை சமாதானப்படுத்தினார். படத்தின் இறுதி வடிவம் நன்றாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார். அஜய் பிஜிலி, `திரையரங்குகளில் வரவேற்பு பெறும்' என்றார்.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான்

அவர்கள் இருவரும் என்னிடம் பொய் சொன்னார்கள். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. வழக்கம்போலத்தான் இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. காரணம் மக்கள் என் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர்” இவ்வாறு தனது தொடக்க காலத்தை நினைவுகூர்ந்தார் ஷாருக்கான்.

``என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை. நான் இன்றளவும் என்னை ஒரு நடிகனாக எண்ணியதில்லை. சில நேரங்களில் நான் ஒரு நடிகனாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். இது சுவாரஸ்யமானதல்ல. ஆனால், என்னுடைய பணியை நான் விரும்புகிறேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிவிஆர் தியேட்டர் குறித்து அவர் பேசுகையில், ``இந்தத் திரையரங்கத்தின் வெளியே நின்றுகொண்டிருப்பேன். இந்தச் சாலைகளில்தான் சுற்றிக்கொண்டிருப்பேன். என்னுடைய மனைவியின் வீடு பஞ்சில் பகுதியில் உள்ளது. அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக, என்னுடை மாமாவின் ஸ்கூட்டரில் அந்தப் பகுதியைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருப்பேன்.

பி.வி.ஆர்
பி.வி.ஆர்

டெல்லி மக்களால் நான் விரும்பப்படுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆரம்பத்தில் என்னிடம் இருந்த பெரிய விஷயம் `நான் டெல்லிக்காரன் மற்றும் பெரிய மனதுடையவன்’ (‘Main Dilliwala hoon, dilwala hoon’). இன்றளவும் அது அப்படியேதான் இருக்கிறது. நான் ஒருபோதும் திரைப்படத்தில் நடிப்பேன் என்று நினைத்ததேயில்லை. இது என்னால் நம்ப முடியவில்லை. நான் இன்றும் ஒரு டெல்லி பையன்தான்” என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு