Published:Updated:

ஆணின் அந்தரங்கம் இணையத்தில் லீக் ஆனால்..! - கலகலக்கும் `மீக்கு மாத்ரமே செப்தா'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Meeku Maathrame Cheptha - மீக்கு மாத்ரமே செப்தா
Meeku Maathrame Cheptha - மீக்கு மாத்ரமே செப்தா

`அர்ஜுன் ரெட்டி', 'கேர் ஆஃப் காஞ்சேரபாலெம்', ஏஜென்ட் சாய் ஶ்ரீனிவாச ஆத்ரேயா' என நீளும் தெலுங்கு சினிமாவின் நியூ வேவ் யுகத்தின் அடுத்த உயரம்தான் 'மீக்கு மாத்ரமே செப்தா'. இதன் பொருள், 'உனக்கு மட்டுமே சொல்றேன்.'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டேவிட் ஃபிஞ்சரின் 'ஃபைட் க்ளப்' வெளியானபோது அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் எப்படி வர்ணிப்பது எனத் தெரியவில்லை என்றே பல விமர்சகர்கள் கூறுகிறார்கள். உங்களிடம் ஒரு கதையைக் கூறிக்கொண்டு இருக்கும்போதே, அதைக் குறித்த ஒரு கண்ணோட்டம் உங்களுக்குள் படமாக்கப்படும். கதையின் முடிவு நெருங்க நெருங்க அந்தக் கண்ணோட்டம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உங்களை உச்சக்கட்ட உணர்ச்சி விளிம்பில் கொண்டுசேர்க்கும்.

Fight Club
Fight Club

அந்த உச்ச நிலையில்... உங்களுடைய மொத்த கண்ணோட்டமும் தவறானது, இந்தக் கதை இப்படி நடக்கவில்லை, வேறு விதமாக நடந்தது என்று சொன்னால், எப்படி இருக்கும். 'ஃபைட் க்ளப்' அப்படிப்பட்ட படம்தான். அதை அப்படியே ஒரு நகைச்சுவையான பயணமாக்கி, விழுந்து விழுந்து சிரிக்க வைத்தால், அதுதான் இயக்குநர் ஷம்மீர் சுல்தானின் 'மீக்கு மாத்ரமே செப்தா.'

'அர்ஜுன் ரெட்டி', 'கேர் ஆஃப் காஞ்சேரபாலெம்', 'ஏஜன்ட் சாய் ஶ்ரீனிவாச ஆத்ரேயா' என நீளும் தெலுங்கு சினிமாவின் நியூ வேவ் யுகத்தின் அடுத்த உயரம்தான் 'மீக்கு மாத்ரமே செப்தா.' இதன் பொருள், 'உனக்கு மட்டுமே சொல்றேன்' என்பதுதான். அப்படித் தனிமையில் மட்டுமே பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு பெரும் சிக்கல் ஒருவனின் வாழ்க்கையில் நிகழ்கிறது. வெளியே தெரிந்தால் அவன் மானம் போய்விடும்.

Meeku Maathrame Cheptha review
Meeku Maathrame Cheptha review

ஏற்கெனவே அவன் கூறும் தொடர் பொய்களால் அவன் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழக்கிறாள் காதலி. எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் இரண்டு நாள்களில் அவர்களுக்குத் திருமணம். இந்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' டெம்ப்ளேட்டில் 'ஃபைட் க்ளப்' கதை சொல்லல் முறையைப் பொருத்தி, 'பஞ்சதந்திரம்' ஸ்டைலில் காட்சிப்படுத்தினால் எவ்வளவு ரகளையாக இருக்கும். அப்படித்தான் நமக்கு மாத்திரமே இந்தக் கதையை ரகளையாகச் செப்புகிறார் இயக்குநர் ஷம்மீர்.

"பாலாவின் 'வர்மா' டீஸருக்கும், கிரிசய்யாவின் 'ஆதித்யா வர்மா' டீஸருக்கும் என்ன வித்தியாசம்?!" #AdithyaVarma

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் பெரிய பலம் அதன் இயல்பான உரையாடல் வடிவம். இரண்டு நெருங்கிய நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது, அவர்களுக்குள் எப்படிப்பட்ட சொல்லாடல்களெல்லாம் பயன்படுத்தப்படுமோ அப்படித்தான் இதன் வசனங்கள் எல்லாமே எழுதப்பட்டுள்ளன. அதனால் பல வசனங்களை மிக எளிதாகக் கடந்துவிடுவோம். ஆனால், படத்தின் இறுதிக் காட்சியில் வெளிப்படுத்தப்படும் ஒரு சிறிய தகவலால் நாம் கடந்து சென்ற எல்லா வசனங்களையும் மறுவிசாரணைக்கு நாமே உட்படுத்துவோம். ஏன் படத்தையே மீண்டும் ஒரு முறை கண்டால் என்ன என்றே தோன்றும். அதுவே இந்தப் படத்தின் திரைக்கதைக்குக் கிடைத்திருக்கும் பெரும் வெற்றி.

Meeku Maathrame Cheptha review
Meeku Maathrame Cheptha review

கொஞ்சம் இப்படியோ அப்படியோ விலகிச் சென்றால் அடல்ட் காமெடியாகிவிடும் வாய்ப்புகள் அத்தனை இருந்தும் நூல் பிடித்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையும் வசனமும் இந்தக் கதை சொல்லலைக் காப்பற்றியிருக்கின்றன. அதற்கும் மேல் இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாகவே படத்தின் மையப் பிரச்னை கையாளப்பட்டிருப்பது ஷம்மீரின் சாமர்த்தியம்.

பொதுவாக, இப்படியொரு சிக்கலில் பெண்கள் சிக்கினால் அதன் எதிரொலி வேறு வகையில் இருக்கும். ஆனால், ஆண்களுக்கு அப்படியில்லை என்பது ஒரு பொதுப் பார்வை. சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு இங்கே அப்படித்தான் இருக்கிறது. படத்தின் கரு இதைச் சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் தன் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியானால் இப்படித்தான் கதறுவான். அவனுக்கும் அது பெரிய பிரச்னைதான். அதை இணையத்திலிருந்து அழித்துவிட எந்த எல்லைக்கும் செல்வான் என்கிறது 'மீக்கு மாத்ரமே செப்தா.'

Meeku Maathrame Cheptha review
Meeku Maathrame Cheptha review

அந்தச் சிக்கலையும் அதன் பதற்றத்தையும் தங்கள் நடிப்பின் வாயிலாக நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கின்றனர் தருண் பாஸ்கரும் அபினவ்வும். குறிப்பாக, படத்தின் இறுதி அரைமணிநேரம் தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்வு மேடையிலும் அதைச் சுற்றியும் நடக்கும் கலவரம் அதகளம். எப்படியாவது இவர்கள் தப்பித்துவிட வேண்டும் எனத் தோன்றும் அதேவேளையில், அவர்கள் தப்பிக்காமல் மாட்டிக்கொள்ளும்போது நம்மைச் சிரிக்க வைப்பது பார்வையாளர்களின் உணர்வுகள் மீதே படக்குழு செய்யும் ஒரு வகை பரிசோதனை முயற்சிதான். இதைப் புரிந்துகொண்டு தயாரித்திருக்கும் விஜய் தேவரகொண்டா எடுத்திருக்கும் ரிஸ்க் இயக்குநருக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

Vikatan

எல்லாப் பிரச்னையும் முடிந்துவிட்டது என ஒவ்வொரு முறை நினைக்கும்போதும், அதைவிட பெரிய சிக்கல் அதைத் தொடர்ந்து வருவதும், அதிலிருந்து தப்பிக்க, அடுத்ததாக மீண்டும் ஒரு சிக்கல் வருவது என சங்கிலித் தொடராக இருந்தாலும், எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாமல் பார்த்துக்கொள்வது தருணும் அபினவும்தான். ஆண்களைச் சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் எப்போதுமே சிடுசிடுவென இருக்கும் வாணி போஜனின் கதாபாத்திரத்துக்கு அவர் அவர் நன்றாகவே பொருந்தியிருக்கிறார்.

Meeku Maathrame Cheptha review
Meeku Maathrame Cheptha review

திரைக்கதையையும் நடிகர்களின் திறமையையும் மட்டுமே நம்பி ஒரு படத்தைக் கட்டமைத்துவிடலாம் என்பதை மிகவும் ஆழமாக நம்பியிருக்கிறார் ஷம்மீர். அந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை. படத்தின் மையக் கரு, அதைச் சார்ந்திருக்கும் கதாபாத்திரங்கள், அவர்களின் இயல்புகள் என எல்லாமே எழுதப்படும்போது எப்படி இருந்தனவோ, திரைக்கும் அதே வீரியத்துடன் அவை கடத்தப்பட்டிருக்கின்றன.

படத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே வரும் ஒரு கதாபாத்திரம் முதல் ஹீரோக்கள் வரை எல்லோரது பாத்திரப் படைப்புக்கும் நிறைய கவனம் செலுத்தி தனித்தன்மை கொடுத்திருப்பது, இயக்குநர் தன் முதல் வாய்ப்புக்குக் காட்டியுள்ள அதிகபட்ச நேர்மை. இந்தத் தெளிவான பாத்திரப் படைப்பே அவர்கள் குறித்த ஒரு முடிச்சு அவிழ்க்கப்படும்போது, 'ச்சே இதை நாம யோசிக்கவே இல்லையே' எனச் சொல்ல வைக்கிறது.

வலியத் திணிக்கப்படாத ட்விஸ்டுகளும் வசனங்களும் கதாபாத்திரங்களும் என எல்லாவற்றையும் இயல்பின் சாரத்தோடே வைத்திருப்பதில் தொடங்கி, அவற்றை ஒரு புதிய திரைமொழி வாயிலாகப் பார்வையாளர்களிடம் கடத்துவது வரை, 'மீக்கு மாத்ரமே செப்தா' படத்தைக் கொண்டாடக் காரணங்கள் ஏராளம். திரைக்கதை வாயிலாக ஷம்மீர் செய்திருப்பது அத்தகைய மேஜிக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு