Published:Updated:

போலீஸ் கதையில் நடிக்கும் சண்முக பாண்டியன்!

'மதுரவீரன்' படத்தைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார், சண்முக பாண்டியன்.

சண்முக பாண்டியன்
சண்முக பாண்டியன்

2015 ஆம் ஆண்டு வெளியான 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் விஜயகாந்தும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, போன வருடம் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் 'மதுரவீரன்' படத்தில் நடித்திருந்தார்.

சண்முக பாண்டியன் - பிரேமலதா - பூபாலன்
சண்முக பாண்டியன் - பிரேமலதா - பூபாலன்

இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், போலீஸ் கதை ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதனை 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' உள்ளிட்ட படங்களில் இயக்குநர் சிவாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த பூபாலன் என்பவர் இயக்கவிருக்கிறார். இது குறித்து அவரிடம் பேசினேன்.

"தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் போலீஸ் கதாபாத்திரல் நடித்திருந்தாலும் அதில் விஜய்காந்த் சார் கொஞ்சம் ஸ்பெஷல். நான் இந்தக் கதையை எழுதும்போதே இவரை மனதில் வைத்துதான் எழுதினேன். இந்தக் கதையை கேட்டவுடன் பிரேமலதா மேடம், சண்முக பாண்டியன் ஆகியோர் மிகவும் சந்தோசப்பட்டனர். விஜய்காந்த் சார் நடித்த 'சபரி', 'அரசாங்கம்', 'விருதகிரி' உள்ளிட்ட படங்களிலும் நான் பணிபுரிந்துள்ளேன். என்னை அவருக்கும் நன்றாக நியாபகம் இருந்தது.

எமோஷனலான போலீஸ் அதிகாரியாக சண்முக பாண்டியன் வருவார். இவருக்கு ஜோடியாக ரோனிகா என்பவர் நடிக்கிறார். தவிர, அர்ச்சனா, முனீஷ்காந்த், விஜய் டிவி தொகுப்பாளர் பப்பு, 'ஃபைனலி' யூ டியூப் பாரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காஞ்சிபுரத்தில் நடக்கும் இந்தக் கதையில் அம்மா கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தக் கதாபாத்திரத்தில் அர்ச்சனா நடிக்கிறார். இந்தப் படம் சண்முக பாண்டியன் கரியரில் மிக முக்கிய படமாக இருக்கும்" என்றார். இதன் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் ஜூலை முதால் வாரம் தொடங்கவிருக்கிறது.