Published:Updated:

`ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் ஹாரர் படம்!

சுந்தர். சி இயக்கத்தில் 'அரண்மனை 3' படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

Sundar C
Sundar C

தொடர்ந்து காமெடி மற்றும் ஹாரர் ஜானர் படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர், சுந்தர் சி. இதற்கு முன், இவர் இயக்கத்தில் சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வெளியானது. தெலுங்கு ரீமேக்கான இந்தப் படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். தற்போது, சுந்தர் சி விஷால், தமன்னா கூட்டணியில் 'ஆக்‌ஷன்' படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தின்மூலம் மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர பழ கருப்பையா, யோகி பாபு போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, துருக்கி போன்ற வெளிநாடுகளிலும் நடந்துமுடிந்தது. தற்போது, படத்தின் கடைசி ஷெட்யூல் சென்னையில் நடந்துவருகிறது.

Sundar C - Vishal
Sundar C - Vishal

விரைவில் டீசர் வெளிவரயிருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு, இவரின் ஃபேவரைட் படமான 'அரண்மனை 3' படத்தை எடுக்க முடிவுசெய்திருக்கிறார், சுந்தர் சி. சூட்டோடு சூடாக படத்துக்கான ஒன்லைனையும் ரெடி செய்துவிட்டராம். விரைவில் திரைக்கதை எழுதி அடுத்த வருடம் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகக் கூறியவர், படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார். முன்னதாக 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' படத்தை இவரே இயக்கி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.