Published:Updated:

`அது 2014, இது 2019; எது என்னை இப்படி மாற்றியது?’ - ஃபிட்னஸ் சீக்ரெட் சொல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நான் ஒரு சோம்பேறியாக இருந்த காரணத்தால், என்னால் எதுவுமே மேற்கொண்டு செய்யமுடியவில்லை. இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு, சிறுவயதில் இப்படியான உடல் பருமனில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன்.

`அது 2014, இது 2019; எது என்னை இப்படி மாற்றியது?’ - ஃபிட்னஸ் சீக்ரெட் சொல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நான் ஒரு சோம்பேறியாக இருந்த காரணத்தால், என்னால் எதுவுமே மேற்கொண்டு செய்யமுடியவில்லை. இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு, சிறுவயதில் இப்படியான உடல் பருமனில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன்.

Published:Updated:
ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழ், தெலுங்கு, கனடா, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு சினிமாக்களில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் 'விக்ரம் வேதா', 'கே-13', 'நேர்கொண்ட பார்வை', 'காற்றுவெளியிடை' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். `இரும்புத்திரை-2’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `தான் எப்படி உடல் எடையைக் குறைத்தேன்’ என்று பதிவிட்டுள்ளார். ஷ்ர்த்தா ஸ்ரீநாத், தனது பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார். அவரது இரண்டு புகைப்படங்களையும் பார்ப்பவர்கள் வியப்படைந்துள்ளனர்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்

மேலும், இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில், இடதுபுற புகைப்படம் 2014-ம் ஆண்டு பலி மாகாணத்தில் :

என்னுடைய முதல் சர்வதேச சுற்றுலா, சட்டத்துறையில் வேலையிலிருந்து ஓராண்டு நிறைவடைந்திருந்தது. இதில் பணி புரியும்போதுதான், முன் எப்போதும் செலவிடாத விஷயங்களுக்காக அப்போது செலவிட ஆரம்பித்தேன். அதாவது, உணவு, உடை, திரைப்படங்கள் என இன்னும் நீங்கள் பெயரிடும் அனைத்துக்கும் செலவுசெய்தேன். நல்ல வருமானம், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது, என் உடல் பருமன் உச்சத்தில் இருந்தது. மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே உடற்பயிற்சி செய்வேன். பிடித்ததைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆர்ம்ஸ், தொடை பகுதிகள் பெரிதாக இருந்தபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல், எனக்குப் பிடித்தமான உடைகளை அணிந்தேன்.

என்னை எப்போதும் கவர்ச்சியற்றவளாக நான் நினைத்துக்கொண்டதில்லை. மற்றவர்களைவிட கீழானவளாகவும் கருதியதில்லை. பல சுய சந்தேகங்கள் எனக்குள் இருந்தன. ஆனால், நான் ஒரு சோம்பேறியாக இருந்த காரணத்தால், என்னால் எதுவுமே மேற்கொண்டு செய்ய முடியவில்லை. இந்தப் புகைப்படம் எடுத்தபிறகு, சிறுவயதிலே இப்படியான உடல்பருமனில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். என்னுடைய அபார்ட்மென்டில் இருக்கும் ஜிம்முக்குச் சென்றேன். ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் 5 நிமிடம் ஓடினேன். பிறகு 15 நிமிடம் ஓடினேன். தொடர்ந்து 40 நிமிடங்கள் இடைவெளியே இல்லாமல் ஓடினேன்.

``உங்கள் இதயத்துக்காகவும், உங்களை இறுதிவரை தாங்கி நிற்கும் மூட்டுகளுக்காகவும், கடைசிவரை உங்களுக்காகப் போராடும், தானாகவே குணமாகிக்கொள்ளும் உங்கள் உடலுக்காகச் செய்யுங்கள். விளம்பரப்படுத்த செய்யாதீர்கள்.”

வலதுபுறம் டார்ஜிலிங் மே 2019 :

5 ஆண்டுகளில் 18 கிலோ குறைந்தேன். உண்மையில், நான் கடுமையாக உழைத்தேன். பல நாள்கள் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்திருக்கிறேன்; ஒருநாளைக்கு இரண்டு முறை வொர்க்அவுட் செய்திருக்கிறேன்; டயட் இருந்திருக்கிறேன். நான் ஃபிட்டாக இல்லை. இருந்தபோதிலும் அவ்வப்போது உடற்பயிற்சி செய்திருக்கிறேன். உணவு முறையை எப்படிக் கையாள்வது என்பதைத் தெரிந்துகொண்டேன். கலோரி என்ன என்பது குறித்தும் வலிமையான பயிற்சி என்ன என்பது குறித்தும் எனக்குத் தெரியும். துரதிஷ்டவசமாக உணவுக்கு இடையிலான உறவு என்பது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு இடையிலான சீரான நிலையை என்னால் உருவாக்க முடியவில்லை. நான் அதற்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்

எது என்னை இந்த அளவுக்கு செய்ய வைத்தது? ரொம்ப சிம்பிள். நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால், அதுமட்டுமே லட்சியமாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், நீங்கள் அழகாக இருப்பதற்கு எல்லை என்று எதுவும் இல்லை. சமூக ஊடகங்கள் பயத்தை ஊட்டிக்கொண்டேயிருக்கும். நீங்கள் பரிதாபமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் இதயத்துக்காகவும், உங்களை இறுதிவரை தாங்கி நிற்கும் மூட்டுகளுக்காகவும் கடைசிவரை உங்களுக்காகப் போராடும், தானாகவே குணமாகிக்கொள்ளும் உங்கள் உடலுக்காகச் செய்யுங்கள். நோயற்ற வாழ்வுக்காக, இரவில் நல்ல உறக்கத்துக்காக, உங்களுக்காகச் செய்யுங்கள். சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்துவதற்காகச் செய்யாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.