Published:Updated:

பாத்திரம் கழுவற சேலஞ்ச்... அழைப்பை வெளுத்து வாங்கிய ஷ்ருதி ஹாசன்!

`` `செலிபிரிட்டீஸ் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா'னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு." - ஷ்ருதி

ஷ்ருதிஹாசன் - அப்பாவைப் போலவே போல்டு அண்டு பியூட்டிஃபுல் ஆளுமை. ஒப்பனையற்ற பேச்சால் எப்போதும் கவனம் ஈர்ப்பவர். சர்ச்சைகளுக்கு பயப்படாத வெளிப்படையான பேச்சு ஷ்ருதியின் யுஎஸ்பி.

லாக்டௌன் பல விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.

``என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், ஃபிரெண்ட்ஸை மீட் பண்ணணும், யார்கிட்டயாவது பேசிக்கிட்டே இருக்கணும்... இப்படி நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். தனியா இருக்கிறதுல சிலருக்கு பயம் இருக்கு. ஆனா, பல வருஷங்களா நான் தனியா வாழ்ந்து பழகினவள். சென்னை வந்தா அப்பாவை மீட் பண்ணுவேன். ஆனாலும், தனியாதான் இருப்பேன்.

ஷ்ருதி ஹாசன்
ஷ்ருதி ஹாசன்

தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா இருந்தா போரடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கு. உங்களுக்கு நீங்களே போரடிக்கிறீங்கன்னா, மத்தவங்களுக்கும் அப்படித்தானே இருப்பீங்க'' - தனிமையில் இனிமை காண்பவர், தனியாளாக என்னவெல்லாம் செய்கிறார் தெரியுமா?

``சமையல், வீட்டைச் சுத்தம் பண்றது, துணி துவைக்கிறதுனு எல்லா வேலைகளையும் நான்தான் பண்றேன். `செலிபிரிட்டீஸ் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா'னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு. லண்டன்ல இருந்தவரை குப்பையை வெளியில கொண்டுபோய் கொட்டறதுவரை நான்தான் பண்ணியிருக்கேன். வீடு சுத்தமா இல்லைனா எனக்கு மூளை வேலை செய்யாது.

லாக்டௌன் ஆரம்பிச்ச டைம்ல நிறைய பேர் என்கிட்ட பாத்திரம் கழுவற சேலஞ்ச்ல சேரச் சொல்லிக் கேட்டாங்க. பாத்திரம் கழுவறதும் வீட்டைப் பெருக்கிறதும் சேலஞ்ச் கிடையாது. வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது உங்க பொறுப்பு. இப்படியே போனா பல்லு தேய்க்கிற சேலஞ்ச் வந்தாலும் ஆச்சர்யமில்லை''

``அப்புறம்?"

``என் ஃபேமிலியை மிஸ் பண்றேன். எல்லாரும் தனித்தனியா இருக்கோம். ஆனாலும், தேங்க்ஸ் டு டெக்னாலஜி. எல்லார்கிட்டயும் பேசற மாதிரிதான் இருக்கு. லாக்டௌன்ல இன்னும் என் ஃபேமிலியை மீட் பண்ணலை. இந்த நிலைமை சீக்கிரம் சரியாகணும். சினிமால உள்ள தினக்கூலிகளோட வாழ்க்கை ரொம்ப பரிதாபமா இருக்கு. இயல்பு வாழ்க்கை திரும்பி எல்லாம் சரியாகி, அவங்களுக்கெல்லாம் நல்லது நடக்கணும்ங்கிறது மட்டும்தான் இப்போதைக்கு ஒரே ப்ரேயர்.''

ஷ்ருதி ஹாசன்
ஷ்ருதி ஹாசன்

- வெளுத்து வாங்குபவரிடம் சில கேள்விகள்:

> வாரிசு நடிகையிடம் அதைக் கேட்காமல் எப்படி... `நெப்போட்டிஸம்..?'

> பாடி ஷேமிங், பீரியட்ஸ் பெயின், பிளாஸ்டிக் சர்ஜரி...

> `ஆல்கஹால் பழக்கத்திலிருந்து வெளியே வந்துட்டதா ஒரு பேட்டியில சொன்னீங்களாமே..?'

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய அவள் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > என் உடல் என் உரிமை! - ஷ்ருதி ஹாசன் ஓப்பன் டாக் https://bit.ly/2EiupYI

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு