Published:Updated:

```தேவர் மகன்' கமல், `பாவ்லா' சத்யராஜ் முதல் சூர்யா மகன் தேவ் வரை...''- `சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்
'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன் பேட்டி.

சிலம்பம் என்ற தற்காப்புக் கலையை 35 வருடமாக மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, பல சிலம்பக் கலைஞர்களை உருவாக்கிவருகிறார், பாண்டியன். சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் இவரிடம் சிலம்பம் மற்றும் ஸ்டண்டு பயிற்சிபெற்றவர்கள். நடிகர்கள் மட்டுமல்லாது, பலதரப்பட்ட மக்களுக்கு வாரவாரம் சிலம்பப் பயிற்சி கொடுத்துவரும் பாண்டியன் மாஸ்டரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சந்தித்தேன்.

`` `பாகுபலி’, `புலிமுருகன்’ல இருந்தது `அசுரன்'லயும் இருக்கு..!'' - பீட்டர் ஹெய்ன்

சிலம்பத்துக்கும் உங்களுக்குமான பயணம் எப்படி ஆரம்பிச்சது?

"ஸ்கூல்ல சுதந்திர தின விழாக்கு மத்தவங்க பண்ற ஜிம்னாஸ்டிக்ஸைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்தது. அப்போ, எம்.ஜி.ஆர் அவருக்குனு தனியா ஒரு ஸ்டண்டு டீம் வெச்சிருந்தார். அதுல, மாடக்குளம் அழகர்சாமி ஐயாதான் சிலம்பக் கலைஞர். அந்த டீம்ல கே.பி.ராமகிருஷ்ணன்னு ஒருத்தர் இருந்தார். இவர் மகனும், நானும் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம். அவங்க வீட்டுக்குப் போகும்போது, அவங்க அப்பா எம்.ஜி.ஆர் கூட இருக்கிற போட்டோக்கள், அவர் வாங்கிய கோப்பைகள்னு நிறைய இருக்கிறதைப் பார்த்ததும், எனக்கு இன்னும் ஆசை வந்திடுச்சு. மாடக்குளம் அழகர்சாமி ஐயாவுடைய மகன் மாடக்குளம் ரவி ஆசான்கிட்ட சிலம்பம், ஸ்டண்டுனு நிறைய கத்துக்கிட்டேன். அவர்கிட்ட கத்துக்கிட்டு, நானும் மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்."

சினிமாவுக்குள் எப்போ வந்தீங்க?

'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்
'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

"கராத்தே, ஜுடோ, கிக் பாக்ஸிங்னு எத்தனை தற்காப்புக் கலைகள் தெரிஞ்சாலும், சினிமா ஸ்டண்டு வேற. சிலம்பம் கத்துக்கிட்டா பன்ச், ரியாக்‌ஷன், டைமிங்னு எல்லாத்தையும் ஈஸியா பண்ணிடலாம். நான், வெளியே சிலம்பம் கத்துக்கொடுத்துக்கிட்டு இருந்தாலும், ஸ்டண்டு யூனியன்ல உறுப்பினரா இருக்கேன். 'திருமதி.பழனிச்சாமி' படத்துல சத்யராஜ் சாருக்கு சிலம்பம் சொல்லிக்கொடுக்கச் சொல்லி ஸ்டண்டு மாஸ்டர் விக்ரம் தர்மா என்கிட்ட சொன்னார். ஆறு மாசம் அவருக்கு பயிற்சி கொடுத்தேன். பரதநாட்டியத்துக்குப் பாவனை மாதிரி, சிலம்பத்துக்கு பாவ்லான்னு ஒண்ணு இருக்கு. அது, சிலம்பம் சுத்தும்போது அவங்க ரியாக்‌ஷன்களையும், ஃபுட் வொர்க்கையும் குறிக்கும். அது சத்யராஜுக்கு சூப்பரா வரும். 'பாகுபலி'யில கத்தி சுத்தும்போது, அவ்ளோ அழகா பாவ்லா பண்ணியிருப்பார். அந்தப் படத்துக்குப் பிறகு, 'தேவர் மகன்' படத்துல கமிட்டானார், விக்ரம் தர்மா மாஸ்டர். அதுல கமல் சாருக்கு சிலம்பம் சொல்லிக்கொடுத்தேன். ஏற்கெனவே அவருக்கு சிலம்பம் தெரியும். அதுல சினிமாவுக்கான நுணுக்கங்களையும் சேர்த்து சொல்லிக்கொடுத்தேன். அதுதான், 'சாந்துப்பொட்டு' பாடலுக்கு முன்னாடி வர்ற சீன். இன்னைக்கும் அதைப் பார்க்கும்போது, பழைய ஞாபகங்கள் வரும். அதுக்குப் பிறகு, விக்ரம் தர்மா மாஸ்டருடைய பல படங்கள்ல நானும் வொர்க் பண்னேன்."

எந்தெந்த நடிகர்கள் உங்ககிட்ட பயிற்சிக்கு வந்தாங்க?

"இந்தப் படங்களுக்கு நான் சிலம்பம் கொடுத்ததுக்குப் பிறகு சரவணன், கரண், விக்னேஷ், வினித்னு அப்போ பீக்ல இருந்த ஹீரோக்கள் எல்லாம் என்கிட்ட சிலம்பம் கத்துக்க வந்தாங்க. கடந்த 27 வருடங்களா ஒய்.எம்.சி.ஏ மைதானத்துல சிலம்பம் கத்துக்கொடுத்துக்கிட்டு இருக்கேன். இங்கேதான் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சாந்தனு, அதர்வா, விஜய் சேதுபதி-ன்னு எல்லோரும் சிலம்பம் கத்துக்கிட்டாங்க."

Vikatan

சூர்யாவுக்கு சிலம்பம் சொல்லிக்கொடுத்த அனுபவம்?

'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்
'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

"சூர்யாவுக்கு, அவருடைய 10-வது படத்துக்கு சிலம்பம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். ரொம்ப டெடிகேஷனான நடிகர் அவர். ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் சிலம்பம் பயிற்சி பண்ணுவார். எட்டு வருடங்களா சிலம்பப் பயிற்சி எடுக்கிறார். 'நந்தா' படத்துக்காக சூர்யா சார் போன் பண்ணி, 'முரட்டுத்தனமா வளர்ந்த காட்டுப் பையன் உடற்பயிற்சி செய்ற மாதிரி ஒரு மான்டேஜ் எடுக்கணும்னு பாலா சார் சொல்லியிருக்கார். ஏதாவது வித்தியாசமா பண்ணலாம்'னு சொன்னார். மறுநாள், அவர் வீட்டு கார் போர்டிகோவுல சில உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தேன். அப்போ, அவர் பிறந்தநாளுக்கு பாலா சார், ரெண்டு வாளைப் பரிசா கொடுத்திருக்கார். அதை வெச்சு ஒண்ணு பண்ணலாம்னு பண்ணதுதான், 'ஓராயிரம் யானைகொண்டான் பரணி' பாட்டுல வர்ற காட்சி. அது ஸ்கிரீன்ல செமயா இருந்தது. 'ஏழாம் அறிவு' படத்துல போதி தர்மர் சண்டைக் காட்சியில் கம்பு சுத்துனது அவ்ளோ ஸ்டைலா இருக்கும்."

கார்த்தி எப்படி?

"கார்த்தி, எப்போவும் ஃபிரெஷ்ஷா இருப்பார். 'உங்க அண்ணன் இப்படிப் பண்றார், அப்படிப் பண்றார்'னு சூர்யாவை கைகாட்டி கார்த்திக்கு சிலம்பம் சொல்லிக்கொடுத்தேன். அண்ணனைவிட நல்லா பண்ணணும்னு அவ்ளோ மெனக்கெடுவார். 'பருத்திவீரன்'ல அவருடைய உடல்மொழியையே மாத்தினோம். நிற்கிறது, நடக்கிறது, திரும்புறது, பார்க்கிறது, அடிக்கிறதுனு எல்லாமே, சிலம்பம் கத்துக்கிட்டா முறையா வந்திடும். அது, அவருக்கு அந்தப் படத்துல சூப்பரா வொர்க்-அவுட்டாகியிருக்கும். அண்ணனும் தம்பியும் இன்னைக்கு ஆக்‌ஷன்ல இந்தளவுக்கு கலக்குறாங்கன்னா, அவங்க ஆரம்பத்துல எடுத்துக்கிட்ட பயிற்சி முக்கியமான காரணம்."

```விஜய் 64' டெக்னிக்கல் டீம், `கைதி' நைட் ஷூட் அனுபவம், `லக்கி சார்ம்' கார்த்தி!'' - லோகேஷ் கனகராஜ்

ஹீரோயின்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கீங்களா?

'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்
'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

" 'பேராண்மை' படத்துல தன்ஷிகாவுக்கும், அவங்ககூட இருந்த எல்லாப் பொண்ணுங்களுக்கும் நான்தான் பயிற்சி கொடுத்தேன். தன்ஷிகா, அதுக்குப் பிறகும் என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. வரலட்சுமி, நமீதான்னு பல ஹீரோயின்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கேன். 'ஜாக்பாட்' படத்துல ஜோதிகா தீப்பந்தம் வெச்சு சிலம்பம் சுத்துறதைப் பார்த்திருப்பீங்க. அதுக்கு நான்தான் பயிற்சி கொடுத்தேன். சூர்யா சாரைவிட ஜோதிகா மேடமுக்கு டெடிகேஷன் அதிகம். நெருப்பு வெச்சு பயிற்சி பண்ணும்போது, அவங்களுக்குக் கொஞ்சம் பயமிருந்தது. ஆனா, அந்தக் காட்சியை ஒரே டேக்ல ஓகே பண்ணி கலக்கிட்டாங்க."

விஜய் சேதுபதியும் உங்ககிட்டதான் ஸ்டண்டு கத்துக்கிட்டாராமே?

" 'தென்மேற்குப் பருவக்காற்று' முடிஞ்ச சமயத்துல என்கிட்ட வந்து, 'என் பெயர் விஜய் சேதுபதி. கூத்துப்பட்டறைல இருந்தேன். இப்போ ஒரு படம் நடிச்சிருக்கேன். உங்ககிட்ட சிலம்பம் கத்துக்கணும்'னு சொல்லி, ரெண்டு மாசம் சிலம்பம் - ஸ்டண்டு கத்துக்கிட்டுப் போனார். தங்கமான நபர். இப்போ, அவர் அடைஞ்சிருக்கிற உயரம் ரொம்பப் பெருசு. அதுக்குக் காரணம், அவரோட குணம்தான். ரெண்டு மாசம் என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாலும், ’நானும் பாண்டியன் மாஸ்டர் ஸ்டூடன்ட்’னு சொல்றார். சந்தோஷமா இருக்கு."

3.5 கோடி சம்பளம், 3 கோடி கடன்...  சசிகுமாரின் `தனி ஒருவன்' கணக்கு!

சமீபத்துல நடந்த உங்க நிகழ்ச்சிக்கு சூர்யா, கார்த்தி ரெண்டு பேரும் கலந்துக்கிட்டாங்களே!

'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்
'சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

"விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகை மாதிரி, ஸ்டண்டு கலைஞர்களுக்கு ஆயுத பூஜை. நான், மாடக்குளம் ரவி ஆசான்கிட்ட இருக்கும்போது, 'இதுதான் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கத்தி, இது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துல அவர் பயன்படுத்திய வாள்’னு சொல்லி, எல்லாத்தையும் வெச்சு சாமி கும்பிடுவார். அவர் சொல்லிக்கொடுத்ததைத்தான் நான் இப்போ என் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக்கிட்டிருக்கேன். ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜைக்கு, என்கிட்ட பயிற்சிபெற்ற நடிகர்கள் கலந்துக்குவாங்க. சூர்யா, கார்த்தி ரெண்டுபேரும் ஷூட்டிங் இல்லைன்னா நிச்சயமா இந்தப் பூஜையில கலந்துக்குவாங்க. அப்படித்தான் இந்த வருட பூஜையில கலந்துக்கிட்டாங்க."

இப்போ யாரெல்லாம் உங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிறாங்க?

"சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி-ன்னு எல்லா நடிகர்களும் அவங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பயிற்சி எடுப்பாங்க. முரளி சார் அதர்வாவை என்கிட்ட சேர்த்துவிடும்போது, 'மாஸ்டர், இவனுக்குக் கூச்ச சுபாவம் அதிகம். கொஞ்சம் பாத்துக்கோங்க'னு சொல்லிட்டுப் போனார். மூணு மாசம் கழிச்சு, அதர்வா பண்றதைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமாகிட்டார். இப்போ, அவருடைய தம்பி ஆகாஷ் சிலம்பப் பயிற்சி எடுத்துக்கிட்டிருக்கார். சாந்தனு மறுபடியும் கிளாஸுக்கு வந்துக்கிட்டிருக்கார். துருவ் விக்ரம் ஒரு மாசம் பயிற்சி எடுத்துக்கிட்டார். சூர்யா சார் பையன் தேவ் என்கிட்ட சிலம்பம் கத்துக்கிறார். அவருடைய கால் மூவ்மென்ட் அவ்ளோ அழகா இருக்கும். சிரிச்சுக்கிட்டே சிலம்பம் சுத்துறார்.”

"கடைசி வரைக்கும் என்ன கதை, என்ன கேரக்டர்னு தெரியாது!" - கார்த்தி

'பொன்னியின் செல்வன்' படத்துக்கு நீங்கதான் நடிகர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம். உண்மையா?

" 'பொன்னியின் செல்வன்', எம்.ஜி.ஆர் உட்பட பலபேருடைய கனவுப் படம். அதுல நடிக்கிறவங்களுக்கு வாள் பயிற்சி சொல்லிக்கொடுக்கச் சொல்லியிருக்காங்க. இன்னும் அதுக்கான வேலைகள் ஆரம்பிக்கல. மணிரத்னம் சாருடைய உதவி இயக்குநர்கள் வந்து பேசிட்டுப் போயிருக்காங்க. 'பொன்னியின் செல்வன்' கதையில வேலை செய்ய கூப்பிட்டிருக்கிறதை ரொம்பப் பெருமையா நினைக்கிறேன்."

அடுத்த கட்டுரைக்கு