Published:Updated:

பத்து தல அப்டேட்: சிம்பு - கௌதம் மேனன் ஆன் ஸ்கிரீன் காம்பினேஷன்; ஏ.ஆர் ரஹ்மான் இசை; ஆச்சர்யமான கதை!

'பத்து தல' சிம்பு

கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என பல நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் Glimpse வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பத்து தல அப்டேட்: சிம்பு - கௌதம் மேனன் ஆன் ஸ்கிரீன் காம்பினேஷன்; ஏ.ஆர் ரஹ்மான் இசை; ஆச்சர்யமான கதை!

கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என பல நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் Glimpse வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Published:Updated:
'பத்து தல' சிம்பு

'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிம்புவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், அவர் கைவசம் 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' உள்ளிட்ட மூன்று படங்கள் உள்ளன. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இதன்பின் 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான 'மஃப்டி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் அது. ஒரிஜினல் வெர்ஷனின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்ட இயக்குநர் கிருஷ்ணா, முற்றிலும் மாற்றபட்ட திரைக்கதை, மாறுபட்ட கதாபாத்திர வடிவமைப்பில் படத்தை இயக்கி வருகிறார்.

பத்து தல
பத்து தல

கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் என பல நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசை, பிரவீன் கே. எல் படத்தொகுப்பு என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் Glimpse வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2021, செப்டம்பர் மாதம் ஆரம்பமான இந்த படத்திற்கான ஷூட்டிங், சென்னை, நாகர்கோவில், விசாகப்பட்டினம் என பல இடங்களில் நடைபெற்றது. தற்போது வரை, மூன்று ஷெட்யூல்கள் நிறைவடைந்திருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். ஏற்கனவே பத்து நாள்கள் தனக்கான போர்ஷனை முடித்துவிட்ட சிம்பு, தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.

'பத்து தல' சிம்பு
'பத்து தல' சிம்பு

இம்மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மார்ச் முதல் வாரத்தில் 'பத்து தல' ஷூட்டிங்கில் இணைய இருக்கிறார் சிம்பு. சிம்புவின் போர்ஷன் தவிர, மற்ற நடிகர்களுக்கான பகுதிகளை எடுத்து முடித்து அதன் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சிம்பு மீண்டும் இந்தப் படத்தில் கலந்துகொண்டதும், தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.