Published:Updated:

"கல்யாணமா... அட போங்க ஆன்ட்டி!" - சர்ப்ரைஸ் கேக் வெட்டிய சிம்பு

சர்ப்ரைஸ் கேக் வெட்டிய சிம்பு
சர்ப்ரைஸ் கேக் வெட்டிய சிம்பு

"வளர்ந்த பிறகும் கூட அவங்க நட்பு மாறலைங்கிறதுக்கு உதாரணம்தான் சாத்தப்பனுக்கே தெரியாம சிம்பு இங்க வந்து கேக் வெட்டிய இந்தச் சம்பவம்..."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை கோபாலபுரத்தில் இருக்கிறது பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் கவிஞர் கண்ணதாசனின் சகோதரருமான மறைந்த ஏ.எல்.சீனிவாசனின் வீடு. நேற்று இரவு சுமார் 11.30 மணிக்கு, விளக்குகளையெல்லாம் அணைத்து வீட்டில் அப்போதுதான் எல்லாரும் தூங்கச் சென்றிருக்கின்றனர்.

திடீரென காலிங் பெல் சத்தம் கேட்கிறது. ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் வாசலுக்குச் சென்று கதவைத் திறந்தால் வெளியில் சிம்பு.

ஜெயந்தி கண்ணப்பன்
ஜெயந்தி கண்ணப்பன்

"வாவ் சிம்பு... என்ன இந்த நேரம்?" என ஜெயந்தி கண்ணப்பன் வியந்து போய் நிற்க, "கதவைத் திறங்க ஆன்ட்டி... சாத்தப்பன் (ஜெயந்தி - கண்ணப்பன் தம்பதியினரின் மகன்) பர்த்டே செலிபிரேட் பண்ணப் போறோம்" என்று சொல்கியிருக்கிறார் சிம்பு.

"அவன் தூங்கிட்டானே..." என ஜெயந்தி சொன்னதும், "அப்ப நல்லதா போச்சு. எல்லாம் செட் பண்ற வரை எழுப்பிடாதீங்க" எனச் சொல்லி விட்டு கையோடு வாங்கி வந்திருந்த கேக்கை அந்த வீட்டுக்குள் கொண்டு சென்று கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகியிருக்கிறார் சிம்பு.

அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் தயாரானதும் அவரது அம்மாவே போய் சாத்தப்பனை எழுப்ப, தூக்கக் கலக்கத்துடன் ஹாலுக்கு வந்த சாத்தப்பனுக்கு ’ஹேப்பி பர்த் டே’ சொல்லி இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் சிம்பு.

அதன் பிறகு அந்த நள்ளிரவிலும் அந்த இடமே விழாக் கோலம். கேக் வெட்டி கொண்டாடி விட்டு. சுமார் ஒரு மணி நேரம் அங்கு இருந்துவிட்டே சென்றாராம் சிம்பு.

சர்ப்ரைஸ் கேக் வெட்டிய சிம்பு
சர்ப்ரைஸ் கேக் வெட்டிய சிம்பு

"எம் பையன் சாத்தப்ப சீனிவாசன், சிம்பு எல்லாரும் சின்னப் புள்ளைகளா இருந்தப்ப இருந்தே ஒண்ணா விளையாடிட்டுத் திரிஞ்ச பசங்க. வளர்ந்த பிறகும் கூட அவங்க நட்பு மாறலைங்கிறதுக்கு உதாரணம்தான் சாத்தப்பனுக்கே தெரியாம சிம்பு இங்க வந்து கேக் வெட்டிய இந்தச் சம்பவம்" என்றார் ஜெயந்தி கண்ணப்பன்.

"சாத்துவோட அடுத்த பிறந்த நாளுக்கு வாழ்த்த வர்றப்ப வைஃப் கூட்டிட்டு வரணும்னு சொன்னேன். 'கல்யாணமா, அடப் போங்க ஆன்ட்டி'னு சிரிக்குது புள்ள என்னத்தச் சொல்ல..." என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு