Published:Updated:

10 கோடியைத் தாண்டிய சிம்பு சம்பளம்… முதல்முறையாக முழு ஸ்கிரிப்டோடு கெளதம் மேனன் ரெடி!

சிம்பு - கெளதம் மேனன்
சிம்பு - கெளதம் மேனன்

சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியின் மூன்றாவது படமாக விரைவில் தொடங்குகிறது 'நதிகளிலே நீராடும் சூரியன்'.

சிம்பு - கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.

சிம்பு - கெளதம் மேனனின் முந்தைய இரண்டு படங்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இந்தப்படத்துக்கும் இசையமைக்கிறார். வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

‘’கெளதம் மேனன் என்றாலே ஷூட்டிங் போகப்போகத்தான் கதை எழுதுவார்… முழு ஸ்கிரிப்டோடு ஸ்பாட்டுக்கு வரமாட்டார்'’ என்கிற விமர்சனத்தை ‘நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தில் உடைத்திருக்கிறார் கெளதம் மேனன். முதல்முறையாக பவுண்டட் ஸ்கிரிப்போடு ஷூட்டிங்கிற்கு தயாராகியிருக்கிறார். ஐசரி கணேஷே கெளதம் மேனனை முழு ஸ்கிரிப்ட்டோடு பார்த்து பிரமித்திருக்கிறார். (Change is inevitable)

சிம்பு மற்றும் அவரது தயார் உஷாவுடன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
சிம்பு மற்றும் அவரது தயார் உஷாவுடன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

கெளதம் மேனனின் வழக்கமான ஃபார்முலாபடி காதல் + ஆக்‌ஷன் கலந்த படம்தான் ‘நதிகளிலே நீராடும் சூரியன்'. இந்தப்படத்துக்காக முதல்முறையாக கரியரில் 10 கோடி சம்பளத்தை தாண்டியிருக்கிறார் சிம்பு. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை நடக்க இருக்கிறது. (மாசத்துக்கு 5 கோடியா?!)

சிம்பு - கெளதம் கூட்டணி ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்! (Change is constant)

அடுத்த கட்டுரைக்கு