Published:Updated:

"பணத்தோட ஓடிப்போன விஷாலை விட்டுட்டு சிம்புவுக்கு ரெட் கார்ட் போடுறாங்க?" - உஷா டி.ராஜேந்தர்

சிம்பு
News
சிம்பு

''ஓடிப்போன விஷாலை விட்டுட்டு அவருக்கு எந்த ரெட் கார்டும் குடுக்காமல், விஷால் போட்ட தீர்மானத்தை வெச்சு, சிலம்பரசனுக்கு ரெட் போடணும்னு நினைக்கிறீங்க!'' - உஷா டி.ராஜேந்தர்

சிம்பு Vs தயாரிப்பாளர் சங்கம் Vs ஆர்.கே.செல்வமணி என சிக்கலில் சிக்கித்தவிக்கிறது கோலிவுட்டின் 'ரெட் கார்டு' பஞ்சாயத்து.

கெளதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுவிட்டு ஷூட்டிங்கிற்காக திருச்செந்தூர் கிளம்பிய யூனிட்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ''சிம்புவுக்கு ரெட் கார்ட் போட்டாச்சு... அவர் பட ஷூட்டிங்கிற்கு ஃபெப்ஸி தன் ஊழியர்களை அனுப்பக்கூடாது'' என தயாரிப்பாளர் சங்கம் சொல்ல அதற்கு ஐசரி கணேஷ் சமாதானம் பேச இடையில் மாட்டிக்கொண்டார் ஃபெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி.

சிம்பு விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்ஸி என திசைமாறி மீண்டும் சிம்புதான் அனைத்துக்கும் காரணம் என வந்து நின்றிருக்கிறது. தன் மீதான எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் சிம்பு அமைதியாகவே இருந்தார். இந்தச் சூழலில் மகன் சிம்புவுக்காக மெளனம் கலைத்திருக்கிறார் உஷா ராஜேந்தர்.

சிம்பு, டி.ராஜேந்தருடன் உஷா
சிம்பு, டி.ராஜேந்தருடன் உஷா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மைக்கேல் ராயப்பன் தயாரிச்ச 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை சிலம்பரசன் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் இருந்து நடிச்சு முடிச்சுக் கொடுத்துட்டார். படம் முடிஞ்ச பிறகு ரிலீஸுக்கு முன்னாடி சிம்புவோட பேலன்ஸ் பேமென்ட் மூன்றரை கோடியை செட்டில் பண்றேன்னு சொன்ன தயாரிப்பாளர் அந்தப் பணத்தை அவருக்கு செட்டில் பண்ணல. ஆனாலும் சிலம்பரசன் டப்பிங் எல்லாம் பேசி முடிச்சார்.

தனக்கு வரவேண்டிய சம்பளம் வந்து சேரலைனதும் நடிகர் சங்கத்துல 'எனக்கு பேலன்ஸ் சம்பளம் வரலை'னு ஒரு புகார் கொடுத்தார். ஆனா, படம் ரிலீஸ் அன்னைக்கு ராத்திரி அந்தத் தயாரிப்பாளர், 'இந்த பணத்தை சிலம்பரசன் விட்டுக் கொடுத்தா மட்டுமே படத்தை ரிலீஸ் பண்ண முடியும்'னு சொன்னார். இதுபத்தி எல்லாரும் சிலம்பரசன்கிட்ட 'என்ன பண்னலாம்பா'னு கேட்டோம். சிம்பு அந்தப் பணத்தை விட்டுக் கொடுக்கலாம்னு சொல்லிட்டார். படத்தை ரிலீஸும் பண்ண வெச்சார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தவிர, தயாரிப்பாளர் சிம்புவுக்கு கொடுத்த சம்பளத்துக்கு ஜி.எஸ்.டி வரியும் கட்டல. டி.டி.எஸ்-ஸும் பிடிச்சிருந்தார். ஆனா, பிடிச்ச அந்த டி.டி.எஸ்-ஸையும் அவர் அரசாங்கத்துக்கு கட்டல. அதோட அவர் முதல்ல சம்பளமா கொடுத்த செக்கும் பவுன்ஸ் ஆகியிருக்கு. இப்படி எல்லா விதத்திலும் அந்த புரொடியூசர் ஒத்துழைப்பு கொடுக்கல. ஆனாலும் நாங்க பணத்தையும் விட்டு கொடுத்து, படத்தையும் ரிலீஸ் பண்ண வச்ச பிறகும் அவர் பிரச்னை பண்ணார்.

'சிம்பு சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடிச்சு கொடுக்கணும்'னு விஷால் தலைவரா இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கத்துல ஒரு புகார் கொடுத்தார். விஷாலும் 'மைக்கேல் ராயப்பன் நஷ்டப்பட்டிருக்கார். அதனால சிலம்பரசன் சம்பளமே இல்லாமல் ஒரு படம் நடிச்சு கொடுக்கணும். அப்படி இல்லைனா சிம்பு நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் ரெண்டு கோடியே நாற்பது லட்சம் மைக்கேல் ராயப்பனுக்கு கட்டணும்'னு சிம்புவோட ஒப்புதல் இல்லாமலேயே ஒரு தீர்மானம் போட்டார்.

தன்னிச்சையா ஒரு தீர்மானத்தை போட விஷால் என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா? இதற்கு அப்பீலே கிடையாதா? கோர்ட்ல ஒரு கேஸ் வந்து அதுல ஒரு சரியான தீர்ப்பு கிடைக்கலைனா அடுத்து மேல் கோர்ட்டுக்கு போவோம். அப்பீலுக்குனு சில விஷயங்கள் இருக்கு. விஷால் போட்ட தீர்மானத்துக்கு அப்பீலே கிடையாது. இங்க என்ன மன்னராட்சியா நடக்குது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'விஷால் தயாரிப்பாளர் ட்ரஸ்ட்ல இருந்த 7 கோடி பணத்தையும், உறுப்பினர்களோட பணம் 7 கோடியையும் பல விதத்துல விரயம் பண்ணி காலி பண்ணிட்டார். பொதுக்குழு கேட்ட கேள்விங்களுக்கும் பதில் சொல்லாம, கணக்கு காட்டமுடியாம ஓடிப் போய்ட்டார்'னு சொல்லித்தான் இப்ப இருக்கிற தயாரிப்பாளர் சங்கத் தலைமை ஜெயிச்சாங்க. 'நாங்க ஜெயிச்சா அந்த 14 கோடியையும் பெற்று தருவோம்'னு சொல்லிட்டிருந்த தயாரிப்பாளர் சங்கம் ஓடிப்போன விஷாலை விட்டிருச்சு.

விஷால்
விஷால்

விஷாலுக்கு எந்த ரெட் கார்டும் குடுக்காம, விஷால் போட்ட தீர்மானத்தை வச்சு, சிலம்பரசனுக்கு ரெட் கார்ட் குடுக்கணும்னு நினைக்கிறாங்க... இதுதான் ஏன்னு எனக்கு புரியல. சங்கத்துக்கு நன்மை நடக்கணும்னா நீங்க விஷால்கிட்ட கேட்டு அந்தப் பணத்தை வாங்குறதை விட்டுட்டு, அவருக்கு ரெட் போடாம சிலம்பரசனுக்கு ஏன் ரெட் போடுறீங்க? இதனால என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கறீங்கன்னு எனக்கு இன்னும் புரியல.

இன்னொரு விஷயம், யார் படத்துக்கும் 'ரெட்' கார்டு போடுறதும் தப்புதான். அது விஷாலா இருக்கட்டும் அல்லது யாரா வேணா இருக்கட்டும். 'ரெட்' என்பது தவறான விஷயம்" என்று கோபம் கொந்தளிக்க சிம்பு தரப்பைப் பேசியிருக்கிறார் உஷா ராஜேந்தர்.