Published:Updated:

`அப்துல் காலிக்’ கெட்டப்பில் வந்தார்! - ரசிகனை நெகிழச் செய்த சிம்பு

சிம்பு
சிம்பு

"பாட்டைக் கேட்டு முடிக்கிறப்ப ஒரு சொட்டுக் கண்ணீராவது வந்திடணும். யார் பாடலாம்னு நினைச்சப்ப வேற ஆப்ஷனே இல்லாம என் மனசுக்குள்ள வந்தவர் சிம்பு சார்தான்.’’

``கொரோனாவுக்கு உயிர் நண்பனைப் பறிகொடுத்த ஒருத்தன், கொரோனா ஒழிஞ்ச பின்னாடி அந்த நண்பன் புதைக்கப்பட்ட இடம் தேடி அலையறான். ஆல்பத்தின் ஸ்கிரிப்ட் இதுதான். நட்பைப் பேணிக் காப்பாத்திட்டு வர்ற ஒவ்வொருத்தர் கண்ணுல இருந்தும், பாட்டைக் கேட்டு முடிக்கிறப்ப ஒரு சொட்டுக் கண்ணீராவது வந்திடணும். யார் பாடலாம்னு நினைச்சப்ப வேற ஆப்ஷனே இல்லாம என் மனசுக்குள்ள வந்தவர் சிம்பு சார்தான்’’ என்கிறார் கார்த்திக் ரவிச்சந்திரன். `ஞேயங் காத்தல் செய்’ இசை ஆல்பத்தின் இயக்குநர்.

ஃபிரெண்ட்ஷிப்புக்காக சிம்புவைப் பாட வைத்த அனுபவத்தை அவரிடம் கேட்டேன்.

``நான் சின்ன வயசுல இருந்தே சிம்பு சார் ரசிகன். இவர் பாடினாதான் சரியா இருக்கும்னு நினைச்சதுக்கு அதுவும் ஒரு காரணம். இன்னொரு காரணம் `மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்’னு பாடின அவர் வாய்ஸ் என்னைக் கிறங்கடிச்சிருக்கு.

`அப்துல் காலிக்’ கெட்டப்பில் வந்தார்! - ரசிகனை நெகிழச் செய்த சிம்பு

அதேநேரம் அவர் சம்மதிப்பாராங்கிற ஒரு தயக்கமும் இருந்தது. ஆனா, பாடல் வரிகளைப் பார்த்துட்டு, உடனே `பாடலாமே’னு சொன்னதோடு, அத்தனை உருக்கமா பாடியும் தந்தார்.

`ஆனா லோ பிட்ச்ல இருக்கு; ஹை பிச்ல இருந்தா நல்லா இருக்குமே'னு எங்க மியூசிக் டைரக்டர் ஸ்ரீநாத் பிச்சை சொல்ல, அதுக்கும் சம்மதிச்சுப் பாடித் தந்தார் சிம்பு’’ என்ற, கார்த்திக் ``நாங்க அவரைச் சந்திச்சப்ப `மாநாடு' கெட்டப்ல இருந்தார். `அப்துல் காலிக்’ கெட்டப் சும்மா அசத்தலா இருக்கு அவருக்கு’’ என்கிறார்.

`ஞேயங் காத்தல் செய்’னா, நட்பைப் பேணிக் காக்கணும்’கிற அர்த்தம். பாரதியார் ஆத்திச்சூடியில ஞேயம்னா நட்புனு இருக்கு. சிம்பு சார் இந்தத் தலைப்பு பத்தி கேட்பார்னு நினைச்சேன். ஆனா, கேட்கலை. குறைஞ்ச வயசுலேயே நிறைய தெரிஞ்சு வச்சிருக்கார் சார் அவர்" என்கிறார், ஆல்பத்தின் ஹீரோ விபின்.

அடுத்த கட்டுரைக்கு